News June 22, 2024

தமிழ்நாட்டில் மதுவிலக்கு சாத்தியப்படும்: அண்ணாமலை

image

தமிழ்நாட்டில் கள்ளுக்கடைகளை திறந்தால் மதுவிலக்கு சாத்தியப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார். பணம் அதிகம் உள்ளவர்கள் கள்ளச்சாராயம் குடிப்பதில்லை எனக் கூறிய அவர், விலை மலிவான சாராயத்தை குடிக்க நினைப்பவர்களுக்காக கள்ளுக்கடைகள் திறக்க வேண்டும் என வலியுறுத்தினார். மதுக்கடைகளை குறைக்க வேண்டுமென்றால், முதலில் கள்ளுக்கடைகளைத் திறக்க வேண்டும் என்றார்.

News June 22, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

*3 புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும் – மம்தா பானர்ஜி
*தமிழ்நாட்டில் கள்ளுக்கடைகளை திறந்தால் மதுவிலக்கு சாத்தியப்படும் – அண்ணாமலை
*ஆட்சி செய்யும் அரசாங்கங்களே மக்களை மது குடிக்க வைக்கிறார்கள் – நடிகர் சூர்யா
*ஜிஎஸ்டி விகித சீரமைப்புக்கான அமைச்சர்கள் குழுவை மத்திய அரசு மாற்றியமைத்தது.
*ஸ்லோவாக்கியா சர்வதேச நீளம் தாண்டுதல் போட்டியில், ஷைலி சிங் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

News June 22, 2024

மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்

image

✍வார்த்தைகள் பேசப்படுவதற்கு முன்பே இசை கண்டறியப்பட்டது. ✍பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திற்கும் ஒரு தாளம் உள்ளது; அனைத்தும் நடனமாடுகிறது. ✍ஆன்மீகத்திற்கும் சிற்றின்ப வாழ்க்கைக்கும் இடையிலான நடுவராக இசையைப் பார்க்கிறேன். ✍இசை என்பது யதார்த்தத்தின் கண்ணாடி. ✍இசை என்பது பிரபஞ்சத்தின் வாசனைத் திரவியம். ✍நவீன இசை போதைப்பொருள் போலவே ஆபத்தானது. ✍ஆன்மாவின் உணர்வுகளை இசை நேரடியாகப் பிரதிபலிக்கிறது.

News June 22, 2024

பும்ராவை கௌரவித்த ICC

image

டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றின் 3ஆவது போட்டியில், இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில், பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்களில் வெறும் 7 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அவரது புகைப்படத்தை, ICC வாரியம் தனது ஃபேஸ்புக் & X பக்கங்களில் Cover Photo-ஆக வைத்து கௌரவித்துள்ளது.

News June 22, 2024

APPLY NOW: +2 படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை

image

இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள 320 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. Navik & Yantrik பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 18 – 22. கல்வித் தகுதி: +2, Diploma தேர்வு முறை: கணினி வழியிலான தேர்வு, உடல் தகுதித்தேர்வு, ஆவணச் சரிபார்ப்பு, மருத்துவப் பரிசோதனை. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 3. மேலும் தகவல்களுக்கு <>ICG<<>> இந்த முகவரியை கிளிக் செய்யவும்.

News June 22, 2024

அமைச்சர் பதிலால் அவையில் எழுந்த சிரிப்பொலி

image

வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை மானிய கோரிக்கை விவாத நேரத்தில் பேசிய அசன் மவுலானா எம்.எல்.ஏ., சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வீடுகள் வழங்க வேண்டும் என்று பேசினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் முத்துச்சாமி, “வீட்டு வசதி வாரியத்தின் வீடுகள் இருக்கிறது. அதில் உங்களுக்கு வேண்டியதை காட்டுங்கள். நாங்கள் விலை சொல்கிறோம். வாங்கிக்கொள்ளுங்கள்” என்றார். அதனால் சட்டசபையில் சிரிப்பொலி எழுந்தது.

News June 22, 2024

ஜஸ்பிரித் பும்ராவை பாராட்டிய அனில் கும்ப்ளே!

image

ஆப்கனுக்கு எதிரான போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே பாராட்டியுள்ளார். அழுத்தமான சூழலில் பந்துவீச்சில் மாற்றத்தை ஏற்படுத்தி விக்கெட்டுகளைக் கைப்பற்றுவது கடினம் எனக் கூறிய அவர், அதனை முக்கியமான போட்டிகளில் பும்ரா சரியாக செயல்படுத்துகிறார் என்றார். அந்த திறன் அனைவருக்கும் எளிதில் வந்துவிடாது எனத் தெரிவித்தார்.

News June 22, 2024

இன்றைய நல்ல நேரம்!

image

▶ஜூன்- 22 | ▶ஆனி – 08
▶கிழமை: சனி | ▶திதி: பிரதமை
▶நல்ல நேரம்: காலை 07:30 – 08:30 வரை, மாலை 03:30 – 04:30 வரை
▶கெளரி நேரம்: காலை 10:30 – 11:30 வரை, இரவு 09:30 – 10:30 வரை
▶ராகு காலம்: காலை 09:00 – 10:30 வரை
▶எமகண்டம்: நண்பகல் 01:30 – 03:00 வரை
▶குளிகை: காலை 06:00 – 07:30 வரை
▶சந்திராஷ்டமம்: பரணி, கார்த்திகை
▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்

News June 22, 2024

கள்ளுக்கடை திறக்க கோரிக்கை வைத்த காங்கிரஸ்

image

தமிழ்நாட்டில் கள்ளுக்கடை திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் சட்டமன்ற கொறடா அசன் மெளலானா கோரிக்கை விடுத்துள்ளார். மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அவர், “தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த சாத்தியமில்லை. கள்ளச் சாராய விற்பனைதான் அதிகரிக்கும். டாஸ்மாக் மது விலை அதிகமாக இருப்பதால், மலிவு விலை மதுவை தேடிச் செல்பவர்களுக்காக கள்ளுக்கடையை மீண்டும் திறக்கலாம்” என்றார்.

News June 22, 2024

நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாஜக மீறியதா?

image

மக்களவை இடைக்காலத் தலைவர் நியமன விவகாரத்தில் நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாஜக மீறிவிட்டதாக கேரள காங்கிரஸ் எம்.பி., கொடிக்குன்னில் சுரேஷ் குற்றம்சாட்டியுள்ளார். 8ஆவது முறையாக மக்களவைக்கு எம்.பி.,யாக தேர்வாகியுள்ள மூத்த உறுப்பினரான தன்னைத் தான் மக்களவை இடைக்காலத் தலைவராக நியமித்திருக்க வேண்டும் எனக் கூறிய அவர், தனது சுயநலத்துக்காக பாஜக தொடர்ந்து விதிகளை மீறி வருகிறது எனத் தெரிவித்தார்.

error: Content is protected !!