India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
SBIஇல் ஐடி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஏறக்குறைய 12,000 ஊழியர்களை பணியமர்த்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அதன் தலைவர் தினேஷ் காரா தெரிவித்துள்ளார். இவர்கள் பொதுப் பணியாளர்கள் என்றும், அதிகாரிகள் மட்டத்தில் 85% பொறியாளர்கள் என்ற அமைப்பை வங்கி கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். நிதியாண்டில் SBI மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 2,32,296 ஆக உள்ளது. இது முந்தைய ஆண்டில் 2,35,858 ஆக இருந்தது.
வங்கதேசத்துக்கு எதிரான 5ஆவது மகளிர் டி20 போட்டியில், இந்தியா அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 156/5 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹேமலதா (37), ஸ்மிரிதி மந்தனா (33) ரன்கள் குவித்து அசத்தினர். பின்னர் களமிறங்கிய வங்கதேச அணி, 20 ஓவர்கள் முடிவில் 135/6 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இதனால், 5-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை வென்றது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி புழல் சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவுள்ளது. மேலும், ஜாமினில் வெளியே சென்றால் அரசு பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும், தேர்தல் பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டினால் இபிஎஸ் மீது தனிநபர் விமர்சனம் செய்வதா என திமுகவினருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்த அவரது அறிக்கையில், திமுகவின் மக்கள் விரோத ஆட்சியை இபிஎஸ் புள்ளி விவரங்களோடு சுட்டிக்காட்டியதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்குப் பதில் சொல்வதை விட்டுவிட்டு, திமுகவினர் மக்களை திசை திருப்ப முயல்வதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
வீடுகளுக்கு தற்போது வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரத்தை தவிர்த்து மற்ற கட்டணங்கள் உயர்வதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. 200 யூனிட்டுக்கு ₹55ம், 900 யூனிட்டுக்கு ₹1,130ம் கூடுவதாகக் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து விளக்கமளித்த மின்வாரியம், கட்டண உயர்வு குறித்து கடந்த சில நாட்களாக உலா வரும் தகவல், பழைய செய்தி என்றும், அது 9.9.2022இல் உயர்த்தப்பட்ட கட்டண விகிதம் எனவும் கூறியது.
அட்சய திருதியில் அன்று முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் கனவிலும் நினைத்துப் பார்க்காத பல நல்ல பலன்களை அடைய முடியுமென தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன. முன்னோருக்கு முறையாக கர்ம காரியங்களைச் செய்யாமல் விட்டவர்கள் நாளை (மே 10) அதிகாலையில் நீராடி, விரதமிருந்து சிவன் கோயிலுக்குச் சென்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு புண்ணிய பலன்களைப் பெறுங்கள்.
தேமுதிக நிறுவனரும், நடிகருமான மறைந்த விஜயகாந்துக்கான பத்ம பூஷன் விருதை அவருடைய மனைவி பிரேமலதா பெற்றுக்கொண்டார். முன்னதாக பேசிய அவர், கேப்டன் இல்லை என்கிற வலி மனதுக்குள் உள்ளதாகவும், இருப்பினும் மத்திய அரசின் உயரிய விருதை வாங்குவதில் தங்கள் கட்சியினர் ஒட்டுமொத்தமாக பெருமை அடைவதாகவும் கூறினார். மேலும், இந்த விருது அவரை விரும்பிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் சமர்ப்பணம் என்றும் அவர் தெரிவித்தார்.
அட்சய திருதியை நாளில், கடந்த ஆண்டை விட இந்தாண்டு நகைகளின் முன்பதிவு அதிகரித்துள்ளதாக நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், கடந்த ஆண்டை விட இந்தாண்டு 25% வரை நகை விற்பனை அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். காலை 6 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை நகைக் கடைகள் திறந்திருக்கும் எனவும், வீடுகளுக்கே நேரடியாக நகைகளை டெலிவரி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் https://tnresults.nic.in என்ற இணையதளத்தில் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. இந்நிலையில், 10ஆம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் வரும் 13ஆம் தேதி முதல் நடைபெறும் என்றும், சனிக்கிழமை தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயத்தை உணர்த்துகிறது. தமிழக நீர்வளத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் சென்னை, திருவள்ளூர், சேலம் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் நீர்மட்டம் குறைந்துள்ளது. அதேநேரம் கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.