News March 23, 2024

இயக்குநர் மனைவியை மிரட்டிய தனியார் மருத்துவமனை?

image

தனியார் மருத்துவமனை நிர்வாகம் தன்னை மிரட்டியதாக இயக்குநர் விக்ரமன் மனைவி ஜெயப்பிரியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் 5 வருடங்களாக சிகிச்சை பெற்றேன். ஆனாலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதை ஒரு யூடியூப் பேட்டியில் கூறியிருந்தேன். மருத்துவமனையின் பெயரைக் கூட அதில் சொல்லவில்லை, ஆனால், என்னை தொடர்பு கொண்டு மிரட்டினார்கள்” என்றார்.

News March 23, 2024

பஞ்சாப் அணிக்கு 175 ரன்கள் இலக்கு

image

ஐபிஎல்லில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 174/9 ரன்கள் எடுத்துள்ளது. டெல்லி ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடைசி ஓவரில் 4,6,4,4,6,1 என அதிரடியாக விளையாடிய அபிஷேக் 32* ரன்கள் எடுத்தார். இதையடுத்து டெல்லி 20 ஓவர்கள் முடிவில் 174/9 ரன்கள் எடுத்து. பஞ்சாப் அணி தரப்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

News March 23, 2024

அடுத்த 5 நாட்களுக்கு வெயில் பொளக்கும்

image

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு (மார்ச் 23-27) வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒருசில இடங்களில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி வெப்பம் அதிகரிக்கக் கூடும் எனவும், சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மதிய வேளைகளில் வெளியே வருவதை தவிர்ப்பது நல்லது.

News March 23, 2024

கர்ப்பிணிகள் கவனமாக இருக்கவும்

image

கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. இந்த நிலையில், கடும் வெயிலில் வேலை செய்யும் கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவு அல்லது குழந்தை இறந்து பிறக்க வாய்ப்புள்ளதாக சென்னையை சேர்ந்த ஸ்ரீஹர் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, விவசாயப் பணி, செங்கல் சூளை, உப்பளம் போன்ற இடங்களில் வெயிலின்போது பொதுவெளியில் கர்ப்பிணிகள் வேலை செய்வது மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது

News March 23, 2024

APPLY NOW: 2,253 அரசு வேலைகள்

image

ESICயில் 2,253 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மார்ச் 27 கடைசி நாளாகும்.. இதில் 1930 நர்சிங் மற்றும் 323 தனி உதவியாளர் பணியிடங்கள் உள்ளன. பிஎஸ்சி நர்சிங் மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு, மருத்துவப் பரிசோதனை மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் தகவலுக்கு https://upsc.gov.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

News March 23, 2024

4% வாக்கு வங்கி கட்சியெல்லாம் போட்டியா?

image

கோவையில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையேதான் போட்டி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியிருக்கிறார். அண்ணாமலை போட்டியிடுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, 4 சதவீத வாக்கு வங்கி வைத்திருக்கும் கட்சி எல்லாம் எங்களுக்கு போட்டியா என்று கேலி செய்தார். இரட்டை இலையின் ஆதரவு இருக்கும்போது களத்தில் பிற வேட்பாளர்கள் தூசுக்கு சமானம் என்றும் அவர் பேசினார்.

News March 23, 2024

மஹுவா மொய்த்ரா வீட்டில் சிபிஐ சோதனை

image

TMC கட்சியை சேர்ந்த மஹுவா மொய்த்ரா வீட்டில் சிபிஐ சோதனையில் ஈடுபட்டு வருகிறது. மக்களவையில் கேள்வியெழுப்ப லஞ்சம் பெற்றதாக மஹுவா மீது குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அவரின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது. இதுதொடர்பாக லோக்பால் அமைப்பு விசாரித்து வரும் நிலையில், இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அனைத்து அம்சங்களையும் விசாரிக்க சிபிஐக்கு கடந்த 15ஆம் தேதி உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுகிறது.

News March 23, 2024

இந்திய பெருங்கடலில் மேலும் ஒரு சீன உளவுக்கப்பல்

image

இந்தியப் பெருங்கடலில் 4வதாக மேலும் ஒரு உளவுக் கப்பலை சீனா களமிறக்கி உள்ளது. ஏற்கெனவே 3 கப்பல்கள் உளவுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது யுவான் வாங் 3 அப்பணியில் ஈடுபட்டுள்ளது. ஓடிசாவில் இருந்து ஏப். 3-4ம் தேதிகளில் தொலைதூர ஏவுகணை சோதனையை இந்தியா நடத்தவுள்ளது. அது குறித்த தகவலை சேகரிக்க வந்திருக்கலாம் என சந்தேகிக்கும் இந்திய கடற்படை அக்கப்பலை கண்காணிக்கிறது.

News March 23, 2024

தமிழக மக்களுக்கு ஆளுநர் ரவி அழைப்பு

image

சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் ஒன்றிய வேண்டும் என ஆளுநர் R.N.ரவி அழைப்பு விடுத்துள்ளார். நாடு முழுவதும் இன்று இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை ‘புவி நேரம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த நேரத்தில் தேவையற்ற விளக்குகள் எரியாமல் அணைத்து வைக்க வேண்டும் என தமிழக மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ள அவர், இயற்கையை பாதுகாக்க அனைவரும் இணைந்து செயல்படுவோம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News March 23, 2024

ஐபிஎல் இலவச பேருந்து டிக்கெட் அரசு செலவு அல்ல

image

ஐபிஎல் போட்டிகளுக்கு இலவச பேருந்து டிக்கெட்டுகளை அரசு வழங்கவில்லை என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. CSK-RCB இடையேயான ஐபிஎல் போட்டியில் பங்கேற்றவர்கள், ஐபிஎல் டிக்கெட்டுகளை காண்பித்து பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து பல சர்ச்சைகள் கிளம்பிய நிலையில், அரசு செலவில் இலவச பேருந்து சேவை வழங்கப்படவில்லை. பயணச் செலவை CSK நிர்வாகம் செலுத்திவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!