India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
GATE 2024 தேர்வுகளுக்கான முடிவுகள் இணையத்தில் சற்றுமுன் வெளியானது. இந்தத் தேர்வுகள் பிப்ரவரி 3, 4, 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் முதுகலை பட்டப் படிப்பு மற்றும் டாக்டரேட் படிப்புகளில் இணையலாம். <
இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும், இதுகுறித்து தேர்தல் ஆணையத்தை அணுகும்படியும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இது ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவாகும்.
ஆந்திரா சட்டசபைக்கு மே 13ல் தேர்தல் நடைபெறுகிறது. 175 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 18ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய ஏப்ரல் 25ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் மீது ஏப்ரல் 26ஆம் தேதி பரிசீலனை நடக்கிறது. மனுக்களை திரும்ப பெற ஏப்ரல் 29ஆம் தேதி கடைசி நாளாகும். இதையடுத்து மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறும். அதில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ல் எண்ணப்படும்.
பொல்லார்டுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற ஆர்வமுடன் இருப்பதாக மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது X பக்கத்தில், பொல்லார்டுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ள அவர், சில பந்தங்கள் தனது சகோதரனை ஒருபோதும் மாற்றாது, வலுப்படுத்தவே செய்யும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன் குஜராத் அணி கேப்டனாக இருந்த பாண்டியா, நடப்பு தொடரில் மும்பை அணியை வழிநடத்த உள்ளார்.
அதிமுகவும் தேமுதிகவும் 3ஆம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தையை ரகசியமாக நடத்தி வருகிறது. மார்ச் 1ஆம் தேதி அதிமுக நிர்வாகிகள் பிரேமலதாவின் இல்லத்தில் அவரை சந்தித்தனர். பின்னர் மார்ச் 6ஆம் தேதி அவர்களுக்குள் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் இன்று பேச்சுவார்த்தையை ரகசியமாக நடத்திவரும் அவர்கள், விரைவில் கூட்டணியை அறிவிப்பார்கள் என்று தெரிகிறது.
சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து வதந்தி பரப்பி, வெறுப்புப் பிரச்சாரம் செய்துவந்த பாஜக நிர்வாகி மீஞ்சூர் சலீம் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைதளத்தில் அவர் பதிவு செய்யும் போஸ்ட்டுகள் மீது புகார்கள் எழுந்ததால், வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பிய சலீம், விமான நிலையத்தில் வைத்தே கைது செய்யப்பட்டார். இதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை முடித்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற இருப்பதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகலாம் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. வாக்கு எண்ணிக்கையின்போது ஆங்காங்கே தகராறுகள், கலவரங்கள் நடைபெற வாய்ப்பிருப்பதால் அதன்பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிகிறது.
ஐபிஎல் 17ஆவது சீசன் 6 நாட்களில் தொடங்க உள்ள நிலையில், CSK அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதிஷா பத்திரனா காயம் காரணமாக ஆரம்பப் போட்டிகளில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையைச் சேர்ந்த 21 வயதான பத்திரனாவுக்கு தொடையில் காயம் ஏற்பட்டதால் 4 முதல் 5 வாரங்கள் வரை ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கடந்த சீசனில் CSK அணியில் விளையாடிய பத்திரனா 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்.19 முதல் ஜூன் 1 வரை, மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
*முதல்கட்டம் – ஏப்.19 – 102 தொகுதிகள்
*2ஆம் கட்டம் – ஏப்.26 – 89 தொகுதிகள்
*3ஆம் கட்டம் – மே 7 – 94 தொகுதிகள்
*4ஆம் கட்டம் – மே 13 – 96 தொகுதிகள்
*5ஆம் கட்டம் – மே 20 – 49 தொகுதிகள்
*6ஆம் கட்டம் – மே 25 – 57 தொகுதிகள்
*7ஆம் கட்டம் – ஜூன் 1 – 57 தொகுதிகள்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளையே கடைசி நாள் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்திலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இந்த நிலையில், 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டியவர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.