India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

எஃகு, அலுமினியம் உள்பட அனைத்து வகை பால் கேன்களுக்கும் ஒரே மாதிரியாக 12% ஜிஎஸ்டி விதிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை கூட்டத்திற்கு பின் பேசிய அவர், நடைமேடை டிக்கெட் உள்ளிட்ட அனைத்து ரயில் சேவைகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்படும் என கூறியுள்ளார். மேலும், அட்டை பெட்டிகள், சோலார் குக்கர்களுக்கு 12% ஜிஎஸ்டி என அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக்கோப்பையில் வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது. இந்திய அணி : ரோஹித், கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார், டூபே, பாண்டியா, ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப், அர்ஷ்தீப் சிங், பும்ரா. இன்று எந்த அணி வெற்றிபெறும் என கமெண்ட் பண்ணுங்க.

காசா அகதிகள் முகாமில் இன்று இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதலில் 42 பேர் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன அரசு தெரிவித்துள்ளது. இதோடு சேர்த்து கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 101 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் – பாலஸ்தீன் போர் தொடங்கியது முதல் இப்போது வரை 37,400 பாலஸ்தீனியர்கள் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் இன்று ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற்றது. அதில், ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை ஏப்ரல் 30ஆம் தேதியில் இருந்து ஜூன் 30ஆம் தேதியாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. 2024-25 நிதியாண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரவுள்ளது. சிறு தொழில் செய்யும் வியாபாரிகளுக்கு ஏற்படும் சிரமத்தை இது குறைக்கும் என்று நிதியமைச்சர் கூறியுள்ளார்.

சமீபத்தில் தமிழ்நாடு பாஜகவில் இருந்து இரண்டாவது முறையாக நீக்கப்பட்ட திருச்சி சூர்யா சிவா, பாஜகவிற்கு எதிராக அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மணல் கடத்தல் கும்பலுடன் பாஜகவிற்கு தொடர்புள்ளதாகவும், அவர்களிடம் இருந்து மாதம் ₹50 லட்சம் முதல் ₹80 கோடி வரை பாஜகவினர் பணம் பெறுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பணம் பெறுபவர்கள் பட்டியலை விரைவில் வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நாமக்கல், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சி, சேலம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 55 பேர் உயிரிழந்த நிலையில், தமிழக அரசைக் கண்டித்து பாஜகவினர் இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், சென்னையில் போராட்டம் நடத்திய பாஜவினரை போலீசார் கைது செய்தனர். கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காவல் துறைக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் எதிராக பாஜகவினர் சமூக வலைத்தளங்களில் குரல் எழுப்பி வருகின்றனர்.

பால் உற்பத்தியாளர்களுக்கு இழப்பீட்டுத்தொகை மற்றும் இதர நிதியுதவிகளை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி, பால் உற்பத்தியாளர்கள் விபத்தினால் இறந்தால் ₹4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும், ஈமச்சடங்கு தொகை ₹25,000 வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி உதவி தொகை ₹50,000ஆகவும், திருமண உதவித்தொகை ₹60,000ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் பட்டியலில் இடம்பெறாத இருவரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய கள்ளக்குறிச்சி ஆட்சியர் பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார். இளையராஜா, ஜெயமுருகன் ஆகியோர் மருத்துவனைக்கு கொண்டு வருவதற்கு முன்பே இறந்ததால், பிரேத பரிசோதனை செய்யாமலே உறவினர்கள் அடக்கம் செய்தனர். இந்நிலையில், இருவரின் உடலையும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்படவுள்ளது.

இந்திய அணிக்கு ஷமி மீண்டும் திரும்புவது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 2023 உலகக் கோப்பையில் 24 விக்கெட்டுகள் எடுத்த ஷமி, காயம் காரணமாக அதன் பிறகு எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. அறுவை சிகிச்சைக்கு பிறகு உடல்நிலை சீரான நிலையில், பெங்களூரு கிரிக்கெட் அகாடமியில் அவர் பயிற்சி மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், செப்டம்பரில் வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் அவர் பங்கேற்பார் எனக் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.