News May 10, 2024

10ஆம் வகுப்பு தேர்ச்சியில் கடைசி இடம் பெற்ற மாவட்டம்

image

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில், வேலூர் மாவட்டம் 82.07% தேர்ச்சியுடன் மாநிலத்திலேயே கடைசி இடத்தில் உள்ளது. இங்கு 18,357 பேர் தேர்வெழுதிய நிலையில், 15,066 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 9,104 பேரும், மாணவிகள் 9,253 பேரும் தேர்வெழுதிய நிலையில், 6,885 மாணவர்களும் (75.63%), 8,181 மாணவிகளும் (88.41%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.

News May 10, 2024

மாநகராட்சி பள்ளிகள் 84.47% தேர்ச்சி

image

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள் 84.68%, மாநகராட்சி பள்ளிகள் 84.47%, கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் 91.75% தேர்ச்சி பெற்றுள்ளன. வனத்துறை பள்ளிகள் 90.91%, நகராட்சி பள்ளிகள் 86.13%, சமூக நலத்துறை பள்ளிகள் 86.55%, பழங்குடியின பள்ளிகள் 92.45% தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் ஆதிதிராவிடர், மாநகராட்சி, சமூக நலத்துறை, பழங்குடியின பள்ளிகளின் தேர்ச்சி கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது.

News May 10, 2024

10th Result: டாப் 10 மாவட்டங்கள்

image

▶அரியலூர் – 97.31%
▶சிவகங்கை – 97.02%
▶ராமநாதபுரம் – 96.36%
▶கன்னியாகுமரி – 96.24%
▶திருச்சி – 95.23%
▶விருதுநகர் – 95.14%
▶ஈரோடு – 95.08%
▶பெரம்பலூர் – 94.77%
▶தூத்துக்குடி – 94.39%
▶விழுப்புரம் – 94.11%

News May 10, 2024

10th Result: அரியலூர் மாவட்டம் முதலிடம்

image

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை இன்று வெளியிட்டுள்ளது. இதில், அரியலூர் மாவட்டம் 97.31% தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல், அரசுப் பள்ளிகளுக்கான தரவரிசையிலும் 96.20% தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. கடந்தாண்டு பெரம்பலூர் மாவட்டம் 97.67% தேர்ச்சி பெற்று முதலிடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

News May 10, 2024

அரசுப் பள்ளி மாணவர்கள் 87.90% தேர்ச்சி

image

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில், அரசுப் பள்ளி மாணவர்கள் 87.90%, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 91.77%, தனியார் சுயநிதிப் பள்ளி மாணவர்கள் 97.43% தேர்ச்சி பெற்றுள்ளனர். இருபாலர் பள்ளிகளில் 91.93%, பெண்கள் பள்ளிகளில் 93.80%, ஆண்கள் பள்ளிகளில் 83.17% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

News May 10, 2024

பாடவாரியாக 100க்கு 100 எடுத்த மாணவர்கள்

image

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. இதில், பாடவாரியாக சதமடித்த மாணவர்கள் விவரம் வருமாறு, தமிழ் – 8 பேர் சதம் எடுத்துள்ளனர். ஆங்கிலம் – 415 பேர், கணிதம் – 20,691 பேர், அறிவியல் 5,104 பேர், சமூக அறிவியல் – 4,428 பேர் 100க்கு 100 பெற்றுள்ளனர்.

News May 10, 2024

பாட வாரியாக தேர்ச்சி சதவிகிதம்

image

* தமிழ் மற்றும் இதர மொழிப்பாடம் 96.85%
* ஆங்கிலம் 99.15%
* கணிதம் 96.78%
* அறிவியல் 96.72%
* சமூக அறிவியல் 95.74%

News May 10, 2024

ஆண்கள் vs பெண்கள் : 10th ரிசல்ட்டில் யார் டாப்?

image

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த ஆண்டை போலவே, மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 4,47,061 மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், 4,22,591 (94.53% ) பேர், 4,47,203 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 3,96,152 (88.58%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 5.95% மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

News May 10, 2024

10ஆம் வகுப்பில் 91.55% பேர் தேர்ச்சி

image

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.55 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 8,94,264 ஆகும். இதில், 8,18,743 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 88.58 சதவீதம். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 94.53 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு 91.39% பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 0.016% தேர்ச்சி அதிகரித்துள்ளது.

News May 10, 2024

BREAKING: 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது

image

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. மாணவர்கள் dge.tn.gov.in, results.digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறியலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மாணவர்களின் செல்போன் எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவு அனுப்பப்படும். 9 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இத்தேர்வை எழுதியுள்ளனர்.

error: Content is protected !!