India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை, பள்ளிக்கல்வித் துறை இன்று வெளியிட்டுள்ளது. அதில், அரியலூர், சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட 28 மாவட்டங்கள் 90%க்கும் அதிகமான தேர்ச்சி விகிதங்களை பெற்றுள்ளன. நாகை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்கள் 90%க்கு குறைவான தேர்ச்சி விகிதங்களை பெற்றுள்ளன. இதனால், மாநிலம் முழுவதும் 91.55% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு பொதுத் தேர்விலும் வட மாவட்ட மாணவர்களே தேர்ச்சி பெறுவதில் அதிக சிரமத்தை அனுபவிக்கின்றனர். இன்று வெளியான 10ஆம் வகுப்பு முடிவுகளிலும் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பின் தங்கியுள்ளன. 12ஆம் வகுப்பு முடிவில் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்கள் கடைசி இடங்களை பிடித்திருந்தன. இதனை சீர் செய்வதற்கான சிறப்பு திட்டங்களை அரசு விரைந்து தீட்ட வேண்டும்.
நடப்பாண்டில், 13,510 மாற்றுத் திறனாளிகள் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய நிலையில், 12,491 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 92.24% ஆக உள்ளது. இதுவே கடந்தாண்டு 10,808 மாற்றித் திறனாளிகள் தேர்வெழுதிய நிலையில், 9,703 பேர் (89.77%) தேர்ச்சி பெற்றனர். அந்தவகையில், கடந்தாண்டை காட்டிலும் மாற்றுத் திறனாளிகள் தேர்ச்சி சதவீதம் 2% அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று வெளியான பொதுத்தேர்வில் முடிவில் ஒட்டுமொத்தமாக மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், கடலூர் மாவட்டத்தில் மாணவிகளை (14939) விட மாணவர்கள் (15230), நாமக்கல் மாவட்டத்தில் மாணவிகளை (9159) விட மாணவர்கள் (9318) அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல், கிருஷ்ணகிரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும் மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை இன்று வெளியிட்டுள்ளது. 7,491 மேல்நிலைப் பள்ளிகள், 5,134 உயர்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 12,625 பள்ளிகள் தேர்வெழுதிய நிலையில், அதில் மாநிலம் முழுவதும் 4,105 பள்ளிகளும், 1364 அரசுப் பள்ளிகளும் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்தாண்டை விட, இம்முறை மாநிலம் முழுவதும் 387 பள்ளிகளும், 338 அரசுப் பள்ளிகளும் கூடுதலாக 100% தேர்ச்சி பெற்றுள்ளன.
மாணவிகளின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டு 94.66%ஆக இருந்த நிலையில், இந்தாண்டு 94.53%ஆக குறைந்துள்ளது. அதேநேரம், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 88.16%இல் இருந்து 88.58%ஆக அதிகரித்துள்ளது. இதனால் மாணவிகளுக்கும் மாணவர்களுக்கும் இடையேயான தேர்ச்சி விகித இடைவெளி 6.50%இல் இருந்து 5.95%ஆக குறைந்துள்ளது.
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 82.07% குறைந்த தேர்ச்சியுடன் மாநிலத்திலேயே வேலூர் முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ந்து, 2) ராணிப்பேட்டை – 85.48%, 3) திருவண்ணாமலை – 86.10%, 4) திருவள்ளூர் – 86.52%, 5) கள்ளக்குறிச்சி – 86.83%, 6) செங்கல்பட்டு – 87.38%, 7) காஞ்சிபுரம் – 87.55%, 8) திருப்பத்தூர் – 88.20%, 9) சென்னை – 88.21%, 10) நாகப்பட்டினம் – 89.70% தேர்ச்சி பெற்றுள்ளன.
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில், வேலூர் மாவட்டம் 82.07% தேர்ச்சியுடன் மாநிலத்திலேயே கடைசி இடத்தில் உள்ளது. இங்கு 18,357 பேர் தேர்வெழுதிய நிலையில், 15,066 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 9,104 பேரும், மாணவிகள் 9,253 பேரும் தேர்வெழுதிய நிலையில், 6,885 மாணவர்களும் (75.63%), 8,181 மாணவிகளும் (88.41%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள் 84.68%, மாநகராட்சி பள்ளிகள் 84.47%, கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் 91.75% தேர்ச்சி பெற்றுள்ளன. வனத்துறை பள்ளிகள் 90.91%, நகராட்சி பள்ளிகள் 86.13%, சமூக நலத்துறை பள்ளிகள் 86.55%, பழங்குடியின பள்ளிகள் 92.45% தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் ஆதிதிராவிடர், மாநகராட்சி, சமூக நலத்துறை, பழங்குடியின பள்ளிகளின் தேர்ச்சி கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது.
▶அரியலூர் – 97.31%
▶சிவகங்கை – 97.02%
▶ராமநாதபுரம் – 96.36%
▶கன்னியாகுமரி – 96.24%
▶திருச்சி – 95.23%
▶விருதுநகர் – 95.14%
▶ஈரோடு – 95.08%
▶பெரம்பலூர் – 94.77%
▶தூத்துக்குடி – 94.39%
▶விழுப்புரம் – 94.11%
Sorry, no posts matched your criteria.