India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தை முன்வைத்து, திமுக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. ஆளுநர் ஆர்.என். ரவியும், கள்ளக்குறிச்சிக்கு சென்று பாதிக்கப்பட்டோரை சந்திக்க திட்டமிட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் டெல்லியில் இருந்து அங்கு செல்ல வேண்டாம், அப்படி சென்றால் பிரச்னையை அரசியலாக்குவதாக கூறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதால் திட்டத்தை கைவிட்டு விட்டதாக சொல்லப்படுகிறது.

இந்தியா 1947இல் சுதந்திரம் வாங்கும் முன்பு பிரிட்டனின் காலனியாதிக்கத்தில் இருந்தது. பிரிட்டிஷ் அரசினர் கிறிஸ்தவர்கள் என்பதால் தேவாலயம் செல்ல ஏதுவாக அவர்களுக்கு ஞாயிறு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்தியர்களுக்கு விடுமுறை இல்லை. பின்னர், நாராயண் மொகாஜி என்பவரின் தொடர் போராட்டத்தால் 1890 ஜூன் முதல் இந்தியர்களுக்கும் விடுமுறை தரப்பட்டது. சுதந்திரத்துக்கு பிறகும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

பள்ளிக் கல்வித்துறை, 6 – 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எழுத்து, வாசிப்பு மற்றும் அடிப்படை கணிதத் திறனை மேம்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன்படி, திறன் குறைந்த மாணவர்களை மேம்படுத்தும் வகையில் செயல்திட்டம் உருவாக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை தலைமை ஆசிரியர் மேற்கொண்டு, எமிஸ் தளத்தில் பதிவேற்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 18 பேரை, இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, தமிழகத்தின் ராமேஸ்வரம், நாகை, புதுக்கோட்டை மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவது வாடிக்கையாகி உள்ளது. இந்நிலையில், ராமேஸ்வரத்தில் இருந்து சென்ற மீனவர்கள் 18 பேருடன், 3 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றுள்ளதால் அவர்களது உறவினர்கள் வேதனையடைந்துள்ளனர்.

நாமக்கல்லில் கறிக்கோழி கிலோ ₹130க்கு (உயிருடன்) விற்பனையாகி வந்த நிலையில் இன்று ₹3 உயர்ந்து ₹133ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் சில்லறை விற்பனையில் கிலோ ₹280 வரை விற்பனையாகிறது. தேவை அதிகரித்திருப்பதால் விலை உயர்ந்து காணப்படுவதாக வியாபாரிகள் கூறுகின்றனர். கொள்முதல் விலையின்படி, முட்டை ₹5.15ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சில்லறை விற்பனையில் ஒரு முட்டை ₹5.70க்கு விற்பனையாகிறது.

உள்நாட்டு மீனவர்கள் மீன்பிடி உபகரணம் வாங்க ₹1 கோடி மானியம் வழங்கப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், நீர்த்தேக்கங்கள், பெரிய மற்றும் சிறிய நீர்பாசன குளங்களில் மீன்பிடிக்கும் மீனவர்களின் மீன்பிடித் திறனை மேம்படுத்தும் நோக்கில், 1,000 மீனவர்களுக்கு பரிசல், வலை போன்ற உபகரணங்கள் வழங்கிட ஏதுவாக மானியம் அளிக்கப்படும் என்றார்.

ஞாயிற்றுக்கிழமையில் உள்ள ஞாயிறு என்பது சூரியபகவானை குறிக்கும். ஆதலால் ஞாயிற்றுக்கிழமை சூரியபகவானுக்கு உகந்த நாளாகக் கூறப்படுகிறது. இந்த நாளில், காலையில் எழுந்து சூரியனை தரிசனம் செய்துவிட்டு தியானம் செய்தால் உடல் ரீதியாக நல்ல பலன் கிடைக்கும் என்றும், ஞாயிற்றுக்கிழமைகளில் தியானம் செய்வது மட்டுமல்லாமல் தானம் செய்தாலும் சூரியன் அருள் மூலம் அதீத பலன்கள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

பாலிவுட் நடிகை சாரா அலிகான், திரையுலகில் பிரபலங்களை பின்தொடர்ந்து புகைப்படம் எடுக்கும் ‘பாப்பரசி’ கலாச்சாரத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, தங்களது தனியுரிமை கேள்விக்குறியாவதால் இந்த போக்கை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், உண்மையை சொல்ல தனக்கு தயக்கம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது கருத்து பிரபலங்கள் பலரது குரலாகவும் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்திய கடலோரப் பகுதிகளில் தீவிரவாத தாக்குதல் நடத்த சாத்தியக்கூறு உள்ள இடங்களில் கடலோரப் பாதுகாப்புப் படை, கடற்படை, மாநில காவல்துறையினர் உள்ளிட்டோர் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். அதன்படி, கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரையிலான கடலோரப் பகுதிகளில் ஒத்திகை நடத்தப்பட்டது. இதில் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், படகுகள் உள்ளிட்டவையும், கண்காணிப்பு ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டன.

வரத்து குறைவு காரணமாக பெரிய வகை மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாலை முதல் சென்னை காசிமேடு மீன்பிடி சந்தை களை கட்டியது. சிறிய வகை மீன்களின் வரத்து அதிகமாக உள்ளதால், பெரிய வகை மீன்களான வஞ்சிரம், பாறை, திருக்கை, கொடுவா உள்ளிட்ட மீன்களின் விலை ₹1000 முதல் ₹1800 வரை உயர்ந்துள்ளது. மீன்பிடி தடைக்காலம் முடிந்து, தொடர்ந்து 2வது வாரமாக விலை உயர்ந்து காணப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.