News May 10, 2024

500க்கு 499 மார்க் எடுத்து மாணவி அசத்தல்

image

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ரஹ்மனியா மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி காவ்யா ஜனனி 500க்கு 499 மார்க் எடுத்து அசத்தியுள்ளார். 4 பாடங்களில் 100க்கு 100 மார்க் எடுத்த அவர், ஒரு பாடத்தில் மட்டும் 99 மார்க் எடுத்துள்ளார். ஏற்கெனவே, திண்டுக்கல் மாவட்டம் கொசவப்பட்டி அக்‌ஷ்யா பள்ளியைச் சேர்ந்த காவியா ஸ்ரீ என்ற மாணவி 500க்கு 499 மார்க் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

News May 10, 2024

20,000 பேர் கணிதத்தில் சதம்

image

நடப்பாண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கணிதத்தில் 20,691 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். அதேபோல், கணிதத்தில் 96.78% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதுவே கடந்த ஆண்டு கணிதத்தில் 3,649 பேர் மட்டுமே 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர். அதேபோல், 95.54% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த ஆண்டை விட அதிகமாக 17,042 பேர் கணிதத்தில் சதம் பெற்றுள்ளனர்.

News May 10, 2024

கல்வி எனும் அறிவாயுதம் துணையாகட்டும்

image

10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மாணவர்கள், தங்களது எதிர்காலத்தைத் திட்டமிட்டு வடிவமைத்துக் கொள்வதற்கான அடித்தளத்தை வலிமையாக அமைத்துக் கொள்ளுமாறும், குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் அடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தினார். மேலும், கல்வி எனும் அறிவாயுதம் உங்களுக்கு என்றும் துணையாக அமையட்டும் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார்.

News May 10, 2024

Breaking: 10ஆம் வகுப்பில் 500க்கு 499 மார்க்

image

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாவட்டம் கொசவப்பட்டி அக்‌ஷ்யா பள்ளியைச் சேர்ந்த காவியா ஸ்ரீ என்ற மாணவி 500க்கு 499 மார்க் எடுத்து அசத்தியுள்ளார். ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 4 பாடங்களில் 100க்கு 100 மார்க், தமிழில் மட்டும் 99 மார்க் எடுத்துள்ளார். அதேபோல், நுங்கம்பாக்கம் மாநகராட்சிப் பள்ளியை சேர்ந்த சாதனா என்ற மாணவி 500க்கு 492 மார்க் எடுத்துள்ளார்.

News May 10, 2024

10th Result-ஐ பார்க்க சென்ற மாணவர் மரணம்

image

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியான நிலையில், சென்னை மதுரவாயலில் லாரி மோதிய விபத்தில் 10ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்துள்ளார். ஜீவா என்ற மாணவர் தனது நண்பர்களுடன் தேர்வு முடிவுகளை பார்க்க பைக்கில் சென்றபோது, எதிரே வந்த லாரி மீது பைக் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் . தேர்வு முடிவுகளை பார்க்காமல் கூட அவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News May 10, 2024

முதலிடத்தை பிடித்த தென்மாவட்டங்கள்

image

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சியில் மாநிலத்தில் முதல் இடத்தை மத்திய மாவட்டமான அரியலூர் 97.31% பிடித்திருந்தாலும், டாப் 10 மாவட்டங்களில் தென் மாவட்டங்களே முதலிடத்தை பிடித்துள்ளன. சிவகங்கை 97.02%, ராமநாதபுரம் 96.36%, குமரி 96.24%, விருதுநகர் 95.14%, தூத்துக்குடி 94.39% தேர்ச்சி பெற்றுள்ளன. தொடர்ந்து, திருச்சி 95.23%, பெரம்பலூர் 94.77% ஆகிய மத்திய மாவட்டங்கள் மாநில அளவில் 2ஆவது இடத்திலும் உள்ளன.

News May 10, 2024

அரசுப் பள்ளி மாணவர்கள் மீது எதிர்பார்ப்பு

image

தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடுகையில், அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் வழக்கம் போலவே இந்தாண்டும் குறைவாகப் பதிவாகியுள்ளது. தனியார் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 97.43%ஆக இருக்கும் சூழலில், அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி 87.90%ஆக உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க அரசு பல்வேறு திட்டங்களை வழங்கி வரும் வேளையில், தேர்ச்சி விகிதம் குறைவாக இருப்பது கவலை அளிக்கிறது.

News May 10, 2024

10ஆம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு

image

10ம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு துணைத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தோல்வியை கண்டு துவண்டு விடாமல், விடாமுயற்சி செய்தால் வெற்றிபெற முடியும். எனவே, தோல்வியடைந்த மாணவர்களுக்கு, ஜூலை 2ஆம் தேதி முதல் துணைத்தேர்வு நடைபெறுகிறது. இதற்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் வரும் 13ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதில் தோல்வியடைந்த மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

News May 10, 2024

பின்னடைவை சந்தித்த சென்னை

image

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் தலைநகர் சென்னை தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது. சென்னையில் மொத்தம் 66228 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், மாணவர்கள் 27719, மாணவிகள் 30700 பேர் என மொத்தம் 58419 பேர் (88.21%) தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் மாநில அளவில் 30வது இடத்தை பிடித்துள்ளது. இதில் சற்று ஆறுதல் என்னவென்றால், இது கடந்தாண்டு தேர்ச்சியை (85.13) விட 3% அதிகரித்துள்ளது.

News May 10, 2024

தமிழில் 8 பேர் 100/100 எடுத்து சாதனை

image

நடப்பாண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் 8 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். இதுவே, கடந்தாண்டு தமிழில் ஒருவர் கூட சதம் எடுக்கவில்லை. அதேபோல், நடப்பாண்டு தமிழ் மற்றும் இதர மொழிப்பாடத்தில் 96.85% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதுவே, கடந்தாண்டு மொழிப்பாடத்தில் 95.55% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர் .

error: Content is protected !!