India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆகாஷ் ஆனந்த் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவதாக அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். மேலும், அவரை கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும், தனது அரசியல் வாரிசாகவும் அறிவித்தார். ஏற்கெனவே அரசியல் வாரிசு என்று அறிவிக்கப்பட்டிருந்த ஆகாஷ் ஆனந்த், சில மாதங்களுக்கு முன் ‘முதிர்ச்சியற்றவர்’ என்று கூறி மாயாவதியாலேயே கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான வெற்றி மிகப் பெரிய மகிழ்ச்சியை தருவதாக ஆட்ட நாயகன் விருதை வென்ற ஆஃப்கன் வீரர் குல்புதீன் நயிப் தெரிவித்துள்ளார். ஆஸி., அணியை வெற்றிக்கொள்ள வேண்டும் என்ற இந்த தருணத்திற்காகத்தான் பல ஆண்டுகளாக காத்திருந்துள்ளதாக கூறிய அவர், ஆஃப்கன் நாட்டிற்கு இது பெருமைமிகு தருணம் என்றார். இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய அவர், ஆஸி.,அணியின் 4 விக்கெட்டை வீழ்த்தினார்.

காவல்துறை மற்றும் வருவாய் துறையில் உள்ள கருப்பு ஆடுகள் கைது செய்யப்பட வேண்டும் என சிபிஎம் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். கல்வராயன்மலையில் சாராய உற்பத்தி தொடர் கதையாகி வருவதாக குற்றம் சாட்டிய அவர், சாராயம் காய்ச்சுவதற்கு உடந்தையாக இருந்த அனைத்து அதிகாரிகளும் கைது செய்யப்பட வேண்டும் என்றார். அதிமுக ஆட்சியிலும் இதே போல உயிரிழப்புகள் நடைபெற்றதாக அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், செங்கல்பட்டு, மதுரை, குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

‘கங்குவா’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் சுஜித் சங்கர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் சமீபத்தில் வெளியான ‘ரசவாதி’ படத்திலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முதுநிலை நீட் ஒத்திவைப்பால் மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சித்துள்ளார். நீட் முறைகேடுகளை முதலில் ஏற்க மறுத்த மத்திய அரசு பின்னர் அதை ஒத்துக்கொண்டதாக கூறிய அவர், தேசிய தேர்வு முகமை தலைவரை நீக்கியதன் மூலம் தேர்வில் முறைகேடு நடைபெற்றது வெளிப்படையாக தெரியவந்துள்ளது என்றார். முதுநிலை நீட் தேர்வு இன்று நடைபெற இருந்த நிலையில், திடீரென ஒத்திவைக்கப்பட்டது.

கள்ளச்சாராய உயிரிழப்புகளைக் கண்டித்து நாளை நடைபெறும் அதிமுக போராட்டத்தில் இபிஎஸ் பங்கேற்பார் என்று அதிமுக அறிவித்துள்ளது. கள்ளச்சாராயத்தை தடுக்கத் தவறியதாக கூறி தமிழக அரசுக்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தவுள்ளது அதிமுக. அதில், கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற உள்ள போராட்டத்தில் பொதுச் செயலாளர் இபிஎஸ் கலந்து கொள்ளவுள்ளார்.

ஆஸி., அணிக்கு எதிரான வெற்றியை நினைத்து இரவு தூங்க மாட்டேன் என ஆஃப்கன் கேப்டன் ரஷீத் கான் தெரிவித்துள்ளார். கடந்த 2023 உலகக் கோப்பையில் ஆஸி.,க்கு எதிரான போட்டியில் 90% ஆட்டம் எங்களின் கையில் இருந்தும், அதனை மேக்ஸ்வெல் மாற்றியதாக தெரிவித்த அவர், இந்த முறை அப்படி எதுவும் நடக்காததில் மகிழ்ச்சி என்றார். சூப்பர் 8 போட்டியில் ஆஸி, அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கனிடம் தோல்வி அடைந்தது.

அமெரிக்க நாசா அமைப்பு மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த 100 பேர், விண்வெளியில் சுற்றும் விண்கற்களை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வில், எதிர்காலத்தில் விண்கல் ஒன்று பூமி மீது மோத இருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது, 14 ஆண்டுகள் கழித்து 2038இல் ஜூலை 12ஆம் தேதி விண்கல் ஒன்று மோத 72% மோத வாய்ப்பிருப்பதை கண்டறிந்துள்ளனர். அந்த விண்கல்லால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அண்ணாமலை சிபிஐ விசாரணை கேட்பதில் உள்நோக்கம் இருப்பதாக ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். இந்த உயிரிழப்புக்கு காரணமானவர்களில் அண்ணாமலையின் ஆட்களும் இருப்பதால் விசாரணையை தாமதப்படுத்தவே சிபிஐ விசாரணை கேட்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக, கள்ளக்குறிச்சி உயிரிழப்பை கட்டாயம் சிபிஐ விசாரிக்க வேண்டும் என அண்ணாமலை கூறியிருந்தார்.
Sorry, no posts matched your criteria.