India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
12 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை விரைவில் சந்திக்க உள்ளதாக நடிகர் விஜய் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் பதிவில், தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகளை தெரிவித்த அவர், மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெறவும் வாழ்த்து தெரிவித்தார். அத்துடன், விரைவில் சந்திப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
23 வகையான நாய் இனங்களை வளர்க்கத் தடை விதித்த உத்தரவை, தமிழக கால்நடை பராமரிப்புத் துறை திரும்பப் பெற்றுள்ளது. சிறுமியை நாய் தாக்கிய விவகாரத்தைத் தொடர்ந்து, மத்திய அரசின் அறிவிப்பாணையை மையப்படுத்தி ராட்வெய்லர் உள்ளிட்ட 23 நாய் இனங்களை வளர்க்க நேற்று தடை விதிக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு நீதிமன்றத் தடை உத்தரவு உள்ளதால், தமிழக அரசின் உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
நடப்பு IPL தொடரில் சாதகமான அறிகுறிகள் இருந்த போதிலும், எதிர்பாராத விதமாக இறுதிவரை செல்ல முடியவில்லை. ரசிகர்களை ஏமாற்றியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என PBKS கேப்டன் சாம் கரண் உருக்கமாக தெரிவித்தார். மேலும், ப்ளே ஆஃப்-க்கு முன்னேறாமல் போனது மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது. ஏற்ற, இறக்கங்கள் மிகவும் சவாலாக இருக்கும். ஆனால் நாம் அதிலிருந்து நிறைய பாடங்களை கற்றுக் கொண்டு முன்னேற வேண்டும் என்றார்.
‘பாகுபலி’ படத்தின் 2 பாகங்களும் வசூல் வேட்டை நடத்திய நிலையில், இப்படத்தின் 3ஆம் பாகம் வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது குறித்த கேள்விக்குப் பதில் அளித்த இயக்குநர் ராஜமௌலி, இப்படத்தின் 3ஆம் பாகம் கண்டிப்பாக வரும் என உறுதி அளித்துள்ளார். இப்படம் தன் மனதிற்கு நெருக்கமானது எனக் குறிப்பிட்ட அவர், அடுத்த பாகத்தை உருவாக்குவது குறித்து பிரபாஸ் உடன் பேச்சுவார்த்தை நடந்தி வருவதாகத் தெரிவித்தார்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ரஹ்மனியா மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி காவ்யா ஜனனி 500க்கு 499 மார்க் எடுத்து அசத்தியுள்ளார். 4 பாடங்களில் 100க்கு 100 மார்க் எடுத்த அவர், ஒரு பாடத்தில் மட்டும் 99 மார்க் எடுத்துள்ளார். ஏற்கெனவே, திண்டுக்கல் மாவட்டம் கொசவப்பட்டி அக்ஷ்யா பள்ளியைச் சேர்ந்த காவியா ஸ்ரீ என்ற மாணவி 500க்கு 499 மார்க் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நடப்பாண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கணிதத்தில் 20,691 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். அதேபோல், கணிதத்தில் 96.78% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதுவே கடந்த ஆண்டு கணிதத்தில் 3,649 பேர் மட்டுமே 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர். அதேபோல், 95.54% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த ஆண்டை விட அதிகமாக 17,042 பேர் கணிதத்தில் சதம் பெற்றுள்ளனர்.
10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மாணவர்கள், தங்களது எதிர்காலத்தைத் திட்டமிட்டு வடிவமைத்துக் கொள்வதற்கான அடித்தளத்தை வலிமையாக அமைத்துக் கொள்ளுமாறும், குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் அடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தினார். மேலும், கல்வி எனும் அறிவாயுதம் உங்களுக்கு என்றும் துணையாக அமையட்டும் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாவட்டம் கொசவப்பட்டி அக்ஷ்யா பள்ளியைச் சேர்ந்த காவியா ஸ்ரீ என்ற மாணவி 500க்கு 499 மார்க் எடுத்து அசத்தியுள்ளார். ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 4 பாடங்களில் 100க்கு 100 மார்க், தமிழில் மட்டும் 99 மார்க் எடுத்துள்ளார். அதேபோல், நுங்கம்பாக்கம் மாநகராட்சிப் பள்ளியை சேர்ந்த சாதனா என்ற மாணவி 500க்கு 492 மார்க் எடுத்துள்ளார்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியான நிலையில், சென்னை மதுரவாயலில் லாரி மோதிய விபத்தில் 10ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்துள்ளார். ஜீவா என்ற மாணவர் தனது நண்பர்களுடன் தேர்வு முடிவுகளை பார்க்க பைக்கில் சென்றபோது, எதிரே வந்த லாரி மீது பைக் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் . தேர்வு முடிவுகளை பார்க்காமல் கூட அவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சியில் மாநிலத்தில் முதல் இடத்தை மத்திய மாவட்டமான அரியலூர் 97.31% பிடித்திருந்தாலும், டாப் 10 மாவட்டங்களில் தென் மாவட்டங்களே முதலிடத்தை பிடித்துள்ளன. சிவகங்கை 97.02%, ராமநாதபுரம் 96.36%, குமரி 96.24%, விருதுநகர் 95.14%, தூத்துக்குடி 94.39% தேர்ச்சி பெற்றுள்ளன. தொடர்ந்து, திருச்சி 95.23%, பெரம்பலூர் 94.77% ஆகிய மத்திய மாவட்டங்கள் மாநில அளவில் 2ஆவது இடத்திலும் உள்ளன.
Sorry, no posts matched your criteria.