India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.55% பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், வரும் திங்கள் கிழமை முதல் 11ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்குவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 10ஆம் வகுப்பில் அதிக மார்க் எடுத்த மாணவர்களுக்கு விரும்பிய பாடப்பிரிவை கொடுக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. முதல் குரூப், சயின்ஸ் குரூப், 3-வது குரூப்பிற்கு கடும் போட்டி நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘இந்தியன் 2’ படத்தின் வெளியீடு தள்ளிப் போகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ஜூன் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், தனுஷின் ‘ராயன்’ திரைப்படம் ஜூன் 13ஆம் தேதி வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டது. மேலும், படத்தில் நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் இருப்பதால் கால அவகாசம் அதிகம் தேவைப்படுகிறது. அதனால், இந்தியன் 2 படத்தின் வெளியீட்டை ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.55% பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், வரும் திங்கள் கிழமை முதல் 11ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்க தொடங்குவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 10ஆம் வகுப்பில் அதிக மார்க் எடுத்த மாணவர்களுக்கு விரும்பிய பாடப்பிரிவை கொடுக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. முதல் குரூப், சயின்ஸ் குரூப், 3-வது குரூப்பிற்கு கடும் போட்டி நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், விரும்பினால், ராகுல் டிராவிட் விண்ணப்பிக்கலாம். பயிற்சியாளர் 3 வருடங்கள் பணியாற்ற வேண்டும். வெளிநாட்டவர் உள்பட தகுதியானவர்கள் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். டி20 உலகக் கோப்பையுடன் ராகுல் டிராவிட்டின் பயற்சி காலம் நிறைவடைய உள்ளது” எனத் தெரிவித்தார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திமுக தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதும் கட்சிக்குள் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, அதிமுகவில் 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் இருப்பது போன்று, கட்டமைப்பை மாற்ற ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இதனால், நிர்வாகிகள் பலர் மாவட்டச் செயலாளர் கனவோடு காத்திருக்கின்றனர்.
மாதத்துக்கு ஒருமுறை மின் கட்டணம் வசூலிக்கும் முறையை உடனே அறிமுகம் செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகளவில் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளில் தணிக்கை செய்ய வேண்டும் எனவும், ஒருவரின் பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை ஒன்றாக இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெரும்பாலான மாணவர்கள், 11ஆம் வகுப்பு சேர விரும்புகின்றனர். ஆனால், எந்த பாடப்பிரிவைத் தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. அனைவரும் உயிரியல் பாடப்பிரிவை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியமில்லை. உதாரணமாக பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் கணிதம் உள்ளடக்கிய எந்த பிரிவையும் தேர்ந்தெடுக்கலாம். பாடப்பிரிவை தேர்ந்தெடுக்கும் முன் ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம்.
விஜய் நடித்து வரும் ‘G.O.A.T’ படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஜீ (Zee) நிறுவனம் கைப்பற்றியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது ரஷ்யாவில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படம், செப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறது.
தமிழ்நாட்டில் கட்டுமானம் தொடங்கி உணவகங்கள், கோழிப்பண்ணைகள் வரை வட மாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். குறிப்பாக ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் இயங்கி வரும் ஜவுளி நிறுவனங்களில் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், ஓட்டு போட சொந்த ஊர்களுக்குச் சென்ற ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பாததால், தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
12 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை விரைவில் சந்திக்க உள்ளதாக நடிகர் விஜய் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் பதிவில், தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகளை தெரிவித்த அவர், மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெறவும் வாழ்த்து தெரிவித்தார். அத்துடன், விரைவில் சந்திப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.