News June 24, 2024

Ultra Model உடையில் கீர்த்தி சுரேஷ்

image

தென்னிந்திய மொழிகளில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், தற்போது இந்தி திரையுலகிலும் அடியெடுத்து வைத்துள்ளார். விஜய்யின் ‘தெறி’ படம் பாலிவுட்டில் ‘பேபி ஜான்’ என்ற பெயரில் ரீ-மேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் சமந்தா கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்த நிலையில், மாடர்ன் உடையில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் லைக்ஸ் மழை பொழிந்து வருகின்றனர்.

News June 24, 2024

சூரஜ் ரேவண்ணாவிற்கு நீதிமன்ற காவல்

image

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனான பிரஜ்வல் ரேவண்ணா, பல பெண்களுடன் அந்தரங்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதையடுத்து கடந்த மாதம் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது சகோதரர் சூரஜ் ரேவண்ணா, கட்சி உறுப்பினரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த புகாரில் நேற்று கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

News June 24, 2024

ஜூன் 24 வரலாற்றில் இன்று!

image

*1597 – கிழக்கிந்தியத் தீவுகளுக்கான முதலாவது டச்சுப் பயணிகள் கப்பல், இந்தோனேசியாவின் ஜாவா தீவை அடைந்தது. *1939 – சியாம் நாட்டின் பெயர் தாய்லாந்து என மாற்றப்பட்டது. *2004 – நியூயோர்க்கில் மரண தண்டனை சட்டவிரோதமானதாக அறிவிக்கப்பட்டது.
*1921 – கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள்.
*1928 – திரைப்பட இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் பிறந்தநாள்.

News June 24, 2024

சண்டை முடிவுக்கு வருகிறது: நெதன்யாகு

image

ரஃபாவில் ஹமாஸ் இயக்கத்திற்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் கடும் தாக்குதல், கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதாக அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். தீவிர தாக்குதல் தான் முடிவுக்கு வருகிறதே தவிர, போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை என அவர் கூறியுள்ளார். மேலும், சண்டை முடிந்த பின், படைகளை மீண்டும் வடக்கு பகுதியில் நிலை நிறுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

News June 24, 2024

முன்னாள் காதலன் குறித்து பேசிய லட்சுமி மேனன்

image

தமிழில் சுந்தர பாண்டியன், கும்கி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் லட்சுமி மேனன். இவர் தனது முன்னாள் காதலன் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். பள்ளியில் படித்தபோது ஒருவரை காதலித்ததாகவும், அவரிடம் நிறைய பேசி இருந்தாலும், டேட்டிங் சென்றதில்லை எனவும் கூறியுள்ளார். மேலும், திரையுலகில் தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்ததால் படிப்பையும், காதலையும் தொடர முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

News June 24, 2024

தினம் ஒரு திருக்குறள்!

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: அவாவறுத்தல் ▶ குறள் எண்: 363
▶குறள்: வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை ஆண்டும் அஃதொப்பது இல்.
▶பொருள்: எந்தப் பொருளையும் விரும்பாமல் இருப்பது போன்ற சிறந்த செல்வம் இப்பூமியில் வேறு ஒன்று இல்லை; வான் உலகத்திலும் இதற்கு ஒப்பானது இல்லை.

News June 24, 2024

தாயே மகளை புதைத்த கொடூரம்

image

டெல்லியை சேர்ந்த தாஹீர், சவுதியில் வேலை செய்து வருகிறார். அவர், தனது மகள் பர்வீனாவை (17) காணவில்லை என மின்னஞ்சல் மூலம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து, அவரது வீட்டிற்கு சென்று சோதனை செய்ததில், தாயே மகளை புதைத்தது தெரியவந்துள்ளது. தான் கொலை செய்யவில்லை எனவும், மகள் தற்கொலை செய்து கொண்டதால் புதைத்ததாகவும் தாய் அனிதா பேகம் தெரிவித்துள்ளார். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News June 24, 2024

தமிழக சட்டசபை இன்று கூடுகிறது

image

கடந்த 21ஆம் தேதி முதல் தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஒரு நாள் விடுமுறைக்கு பின் இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் சட்டசபை கூடுகிறது. கேள்வி நேரம் முடிந்ததும் உயர்கல்வித்துறை, பள்ளிக் கல்வித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர்தணிப்பு உள்ளிட்ட மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது.

News June 24, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (ஜூன் 24) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News June 24, 2024

இது வெற்றியின் செல்ஃபி

image

தென்னாப்பிரிக்கா மகளிர் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில், அனைத்திலும் வென்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது. முதல் போட்டியில் 143 ரன்கள், 2ஆவது ஆட்டத்தில் 4 ரன்கள், நேற்று நடந்த கடைசி போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது. இந்த நிலையில், கோப்பையை பெற்றுக் கொண்ட பின், இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் எடுத்த செல்ஃபி வைரலாகி வருகிறது.

error: Content is protected !!