India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஜிஎஸ்டி அலுவலகத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐஆர்எஸ் அதிகாரி பாலமுருகன் தமிழக காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார். மத்திய அரசு பணியிலிருந்த அவர், “அமலாக்கத்துறையை ஏவல் துறையாக மாற்றியிருக்கிறார் நிர்மலா சீதாராமன். அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்” என்று குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதினார். இதை தொடர்ந்து காரணம் ஏதும் கூறாமல், பணி ஓய்வுக்கு ஒரு நாள் முன்னதாக, சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தனக்கு பாஜக வேண்டவே வேண்டாம் என அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உண்மையான தொண்டனை அடையாளம் காண முடியாதவர், உண்மையான தலைவனாக இருக்க முடியாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை விமர்சித்துள்ளார். தன்னை இத்தனை நாள்கள் தம்பியாக பார்த்த அவர், இனி தம்பியின் மறுப்பக்கத்தை பார்ப்பார் என சூளுரைத்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தன்னை மிரட்டி போலி ஆவணங்கள் மூலம் ₹100 கோடி மதிப்புள்ள சொத்தை அபகரித்ததாக, பிரகாஷ் என்பவர் காவல்துறையில் புகாரளித்துள்ளார். இதனால் கைது நடவடிக்கைக்கு பயந்து எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமறைவாகி விட்டதாக முதலில் கூறப்பட்டது. இந்நிலையில் வெளிமாநிலத்தில் அவர் தங்கி இருப்பதாகவும், வெளிநாடு தப்பிச்செல்லக் கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவை பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். அதற்கு முன்பு, பிரதமர் பரிந்துரைத்தாலோ, மத்தியில் ஆட்சியமைக்கும் சூழலில் எந்த கட்சியும் இல்லையென்றாலோ மக்களவையை குடியரசுத் தலைவர் கலைக்கலாம். எனினும் அடுத்த 6 மாதங்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதேபோல், அவசரநிலை காலத்தில் மக்களவை பதவிக்காலத்தை 1 ஆண்டு நீட்டிக்க முடியும். எனினும் அவசர நிலை முடிந்த பின், 6 மாதங்களில் தேர்தல் நடத்த வேண்டும்.

உயர்க்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விச்செலவை அரசே ஏற்கும் என, அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இதனை தெரிவித்த அவர், அரசுப் பள்ளிகளில் 6-12ஆம் வகுப்பு வரை பயின்று உயர்க்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு உதவித்தொகை, அயல்நாட்டு உயர்க்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயணத்தொகை, மாணவிகளுக்காக அகல் விளக்கு திட்டம் தொடங்கப்படும் என்றார்.

அதிமுக & பாஜகவைச் சேர்ந்தவர்கள் கள்ளச்சாராயம் விற்றதாகத் தகவல் வருகின்றன என்று திமுக அமைப்புச் செயலாளர் R.S.பாரதி குற்றம்சாட்டியுள்ளார். கள்ளச்சாராய உயிரிழப்புகளை வைத்து இபிஎஸ் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக விமர்சித்த அவர், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் திட்டமிட்டு அரசியல் செய்யாமல், தீவிரத்தைப் புரிந்துகொண்டு திமுக அரசுக்கு உறுதுணையாக எதிர்க்கட்சிகள் இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

மலையாளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில் நடித்தவர் நடிகை அதா ஷர்மா. மிகுந்த கடவுள் பக்தி கொண்ட அவர், கேரளாவில் உள்ள பவுர்ணமிகாவு கோயிலுக்கு இயந்திர யானை ஒன்றை பரிசாக வழங்கி இருக்கிறார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “நமது மரபுகளை பாதுகாக்க தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பயன்படுகிறது. பீட்டாவுடன் இணைந்து இயந்திர யானையை வழங்கியதில் மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற நீட் மறுதேர்வில் 50% மாணவர்கள் பங்கேற்கவில்லை. அதிக மதிப்பெண்களை குவித்த மாணவர்கள், மறுதேர்வில் பங்கேற்காதது ஏன்? என்று கேள்வி எழுந்தது. இதையடுத்து, மறுதேர்வில் பங்கேற்காத மாணவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என சிபிஐ தரப்பு தெரிவித்துள்ளது. அத்துடன், தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு முறைகேட்டில் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்க உள்ளது.

ப்ளூ டூத் ஹெட்போன்களை அதிகம் பயன்படுத்துவோருக்கு மூளைப் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பான சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையில், உள்புற செவி நேரடியாக மூளையோடு இணைப்பில் இருப்பதால் மின்காந்த அலைகள், பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் புற்றுநோய் அல்லது மூளைக்கட்டிகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

விஷச்சாராயத்தின் வரலாறு தெரிந்துகொண்டு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசவேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். தமிழகத்தில் ஏன் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவில்லை என நிர்மலா சீதாராமன் எழுப்பியிருந்த கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் விஷச் சாராயத்தால் கொத்துக்கொத்தாக மக்கள் இறந்ததால்தான் 1972இல் மதுக்கடைகள் திறக்கப்பட்டதாகக் காரணம் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.