News June 25, 2024

சிக்கன் கபாப்பில் நிறமிகள் பயன்படுத்த தடை

image

சிக்கன் கபாப், மீன் உணவுகளில் செயற்கை நிறமிகளை பயன்படுத்த கர்நாடகா அரசு முழு தடை விதித்துள்ளது. 39 சிக்கன் கபாப் மாதிரிகளை சோதனைக்கு உட்படுத்தியதில், அவை மிகவும் தரமற்றதாக இருந்தது தெரியவரவே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கோபி மஞ்சூரியன் மற்றும் பஞ்சு மிட்டாய்களில் செயற்கை வண்ணங்களை பயன்படுத்த அம்மாநில அரசு தடைவிதித்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வந்துள்ளது.

News June 25, 2024

காங்கிரஸில் உட்கட்சி பூசல்

image

மும்பை பிரிவு காங்கிரஸ் தலைவர் வர்ஷா கெய்க்வாட்டை மாற்ற கூறி, மகாராஷ்டிரா மாநில மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கேவிற்கு கடிதம் எழுதியுள்ளனர். சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் மும்பை மத்திய வடக்கு தொகுதியில் வென்ற வர்ஷாவிற்கு, கட்சியில் அமைப்பு ரீதியாக பணியாற்ற நேரமில்லை என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 16 மூத்த தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

News June 25, 2024

ஜூன் 25 வரலாற்றில் இன்று!

image

*1940 – இரண்டாம் உலகப் போரில் ஃபிரான்ஸ் அதிகாரப்பூர்வமாக ஜெர்மனியிடம் சரணடைந்தது. *1975 – இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் நெருக்கடி நிலையைப் பிறப்பித்தார். *1981 – வாசிங்டனில் மைக்ரோசாஃப்ட் நிறுவனமயப்படுத்தப்பட்டது. *1983 – லண்டனில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில், மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியது.

News June 25, 2024

BAN கையில் AUS-யின் தலைவிதி

image

டி20 உலகக்கோப்பை தொடரில், நேற்று நடந்த போட்டியில், இந்தியாவிடம் ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவியது. இந்த நிலையில், இன்று காலை நடைபெற உள்ள சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் மோத உள்ளன. இதில் வங்கதேசம் வெற்றி பெற்றால் மட்டுமே, ரன்ரேட் அடிப்படையில் ஆஸி., அணி அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். ஆஃப்கன் வெற்றி பெறும் பட்சத்தில், அந்த அணி அரையிறுதிக்குச் செல்லும்.

News June 25, 2024

முதலீட்டாளர்களே எச்சரிக்கையோடு இருங்கள்!

image

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், குறிப்பிட்ட சில நிறுவனங்களின் பங்குகளை வாங்க அறிவுறுத்தும் வகையிலான வீடியோ இணையத்தில் வலம் வருகிறது. இந்நிலையில், இந்த வீடியோ போலியானது என தெரிவித்துள்ள ரகுராம் ராஜன், தனிப்பட்ட நிறுவன பங்குகளை தான் ஒருபோதும் விளம்பரப்படுத்தவில்லை என விளக்கம் அளித்துள்ளார். மேலும், முறையான பகுப்பாய்வு இல்லாமல் எந்த பங்கையும் வாங்க வேண்டாமென அவர் எச்சரித்துள்ளார்.

News June 25, 2024

10 நாள்களில் ₹81.8 கோடி வசூல்

image

விஜய்சேதுபதி நடித்த ‘மகாராஜா’ திரைப்படம் கடந்த 14ஆம் தேதி வெளியானது. VJS-ன் 50ஆவது படம் என்பதாலும், இயக்குநரின் முந்தைய படமான ‘குரங்கு பொம்மை’ நல்ல வரவேற்பு பெற்றிருந்ததாலும், இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில், படம் வெளியாகி 10 நாள்களில் உலக அளவில் 81.8 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

News June 25, 2024

தினம் ஒரு திருக்குறள்!

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: அவாவறுத்தல் ▶ குறள் எண்: 364 ▶குறள்: தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும். ▶பொருள்: மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே; ஆசை இல்லாமல் இருப்பதோ மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.

News June 25, 2024

என்னை கொல்ல முயற்சி: ஒடிஷா முதல்வர்

image

கடந்த பிஜு ஜனதா தள ஆட்சியின் போது, தன்னை கொல்ல முயற்சி நடந்ததாக, தற்போதைய ஒடிஷா முதல்வர் மோகன் சரண் மஜி தெரிவித்துள்ளார். பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், தன்னை குண்டு வீசி கொலை செய்ய முயற்சிகள் நடந்ததாகவும், கடவுளின் ஆசிர்வாதம் மற்றும் மக்களின் அன்பால் தான் காப்பாற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கடவுள் தன்னுடன் இருக்கும் வரையில் எதற்கும் அச்சப்படமாட்டேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

News June 25, 2024

பழிதீர்க்குமா இந்திய அணி?

image

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில், நேற்று நடைபெற்ற போட்டியில் ஆஸி., அணியை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. வருகிற 27ஆம் தேதி நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக டி20 அரையிறுதி போட்டியில், 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியாவை ENG வீழ்த்தியது. அதற்கு தற்போது IND அணி பழிதீர்க்குமா என கேள்வி எழுந்துள்ளது.

News June 25, 2024

இந்தியாவில் டைப் சி சார்ஜர் கட்டாயம்?

image

இந்தியாவில் மின் சாதன கழிவுகளை குறைக்கும் வகையில், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வரிசையில், ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் ஆகிய மின்சாதன பொருட்களுக்கு அடுத்த ஆண்டு முதல் டைப் சி சார்ஜர் கட்டாயம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த விதி, 2026ஆம் ஆண்டு முதல் லேப்டாப்புக்கும் பொருந்தும் என கூறப்படுகிறது. ஏற்கெனவே வாங்கிய பொருட்களுக்கு இந்த விதி பொருந்தாது.

error: Content is protected !!