India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உத்தமவில்லன் பட விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் இன்று நடைபெற இருந்த பேச்சுவார்த்தையில் நடிகர் கமல் பங்கேற்கவில்லை. 2015ஆம் ஆண்டு வெளியான உத்தமவில்லன் படத்தால் தயாரிப்பாளர் லிங்குசாமிக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட, வேறு ஒரு படத்தை நடித்து தருவதாக கமல் கூறியிருந்தார். உத்தரவாதம் அளித்து 9 ஆண்டுகள் ஆன நிலையில், இது தொடர்பாக லிங்குசாமி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.
தமிழகத்தில் இன்று 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், முதல் முறையாக மாணவர்கள் தங்களது விடைத்தாள் நகல்களை கேட்டு விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. மே 15 – 20ஆம் தேதி வரை, 10ஆம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு மையத்திற்குச் சென்றும் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பாடத்திற்கும் ₹275 கட்டணம்.
பாகிஸ்தானை காட்டி இந்தியாவை காங்கிரஸ் மிரட்டுவதாக பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா விமர்சித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா ஆகியோர் பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதாக கூறி மிரட்டுவதாகவும், ஆனால், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் குறித்து பேசுவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் அளித்த உச்சநீதிமன்றம், பல நிபந்தனைகளை விதித்துள்ளது * ₹50,000 பிணைத் தொகை செலுத்த வேண்டும் *முதல்வர் அலுவலகம், தலைமைச் செயலகம் செல்லக் கூடாது *துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் பெற அவசியம் எழாத பட்சத்தில், அரசு கோப்புகளில் கையெழுத்திடக் கூடாது *வழக்குத் தொடர்பான கோப்பை கையாளக் கூடாது *வழக்கு குறித்து பேசக் கூடாது * சாட்சிகளிடம் பேசக் கூடாது
கிரிக்கெட் வீரர் ஒப்பந்த பட்டியலில் இருந்து இசான் கிஷண், ஸ்ரேயஸ் அய்யரை நீக்கியது தேர்வுக் குழுத் தலைவர் அகர்கர்தான் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார். உள்ளூர் போட்டிகளில் விளையாடாததை சுட்டிக்காட்டி, 2 பேரும் மத்திய ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இதுகுறித்து பேசிய ஜெய் ஷா, 2 பேரை நீக்கும் முடிவை எடுத்தது அகர்கர்தான், அதை செயல்படுத்துவது தனது பணி என்றார்.
வாக்கு சதவீதம் குறித்த காங்கிரஸ் தலைவர் கார்கேவின் கருத்துக்கு, தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. தேர்தல் அன்று வாக்குப்பதிவு சதவிகிதத்தை உடனே வெளியிட வேண்டும் என்ற கார்கேவின் கோரிக்கை, தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. முன்னதாக, வாக்குப்பதிவு மற்றும் தரவுகள் வெளியிடுவது தொடர்பாக தேர்தல் ஆணையத்தை கார்கே விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம், மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, புதுகை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, திருவாரூர், குமரி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரத்தில் மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருணாஸின் அம்பாசமுத்திரம் அம்பானி திரைப்பட நாயகியும், பாஜகவின் அமராவதி தொகுதி வேட்பாளருமான நவ்நீத் ரானா மீது தெலுங்கானா போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. ராகுல் காந்திக்கு வாக்களித்தால், அது பாகிஸ்தானுக்கு அளிக்கும் வாக்கு என பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக தேர்தல் ஆணைய பறக்கும் படையால் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் சாத்நகர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கெஜ்ரிவால் வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு பாஜகவுக்கு விழுந்த சம்மட்டி அடி என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். ஒரு வழக்கின் விசாரணை முடியாமலேயே ஒரு மாநிலத்தின் முதல்வரை கைது செய்வோம் என்ற மோடி அரசின் அராஜகத்துக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு, உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால ஜாமின் வழங்கியது.
மே மாதத்தில் ₹19,663 கோடி மதிப்புள்ள பங்குகளை அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் விற்று இந்திய பங்குச் சந்தையில் இருந்து வெளியேறியுள்ளனர். மே 2 -7 வரையிலான 4 நாள்களில் ₹6,000 கோடி மதிப்புள்ள பங்குகளும், மே 8இல் ₹6,669 கோடி & மே 9இல் ₹6,994 கோடி மதிப்புள்ள பங்குகளும் விற்பனையாகியுள்ளன. தேர்தல் முடிவுகள் முதலீடுகளை பாதிக்கக்கூடும் என்ற பயத்தில் அவர்கள் வெளியேறி இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.