News June 25, 2024

விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் வங்கதேசம்

image

T20 WC தொடரில், ஆஃப்கனுக்கு எதிரானப் போட்டியில், விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம் தடுமாறி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த AFG, 115 ரன்கள் எடுத்தது. 116 ரன்கள் இலக்கை துரத்தி வரும் BAN, 3 ஓவர்களில் 24 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்துள்ளது. குறிப்பாக தன்ஷித் ஹசன், ஷகிப் அல் ஹசன் டக்அவுட்டாகினர். AFG தரப்பில் நவீன் 2, ஃபரூக்கி ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதனிடையே, மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டுள்ளது.

News June 25, 2024

6 வகுப்பு முதல் AI பாடப்பிரிவு அறிமுகம்

image

6ஆம் வகுப்பு முதல் AI மற்றும் அடிப்படை கணினி அறிவியல் பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்த தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வி துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அவர், AI பாடத் திட்டத்தை தயாரிக்கவும், அதை பயிற்றுவிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

News June 25, 2024

பாலியல் தொழிலாளரை தண்டிக்க இயலாது: ஐகோர்ட்

image

கர்நாடக மாநிலம், சிக்கமகளூரை சேர்ந்த 29 வயது பெண் ஒருவர் தனக்கு எதிராக பாலியல் தொழிலில் ஈடுபட்டது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி மேல்முறையீடு செய்திருந்தார். இதை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், உயிர் வாழவும், வருமானம் ஈட்டவும் பாலியல் தொழிலில் ஈடுபடுவோரை தண்டிக்க சட்டத்தில் எந்தப் பிரிவும் இல்லை எனத் தெரிவித்து, அவர் மீதான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

News June 25, 2024

இந்தியா உலகக் கோப்பை வென்ற தினம்

image

கத்துக்குட்டி என்று கருதப்பட்ட இந்திய கிரிக்கெட் அணி, முதன்முதலாக உலகக் கோப்பையை வென்ற தினம் இன்று (1983). கபில்தேவ் தலைமையிலான இளம் அணி லீக் போட்டியில் ஜாம்பவான் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியபோதுதான் உலகின் முழு கவனமும் இந்தியா பக்கம் திரும்பியது. பின்னர், ஜிம்பாப்வேக்கு எதிரான கபில்தேவின் 175 ரன்கள், வெறும் 183 ரன்கள் எடுத்து கோப்பையை வென்ற இறுதிப் போட்டி என அனைத்தும் நீங்கா நினைவுகளாக உள்ளன.

News June 25, 2024

காலையில் எழுந்தவுடன் உள்ளங்கையை பார்க்கலாமா?

image

அதிகாலையில் எழுந்ததும் முதலில் உள்ளங்கையை பார்ப்பதன் பயன் குறித்து ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. உள்ளங்கையில் மகாசக்தி, மகாலட்சுமி, மகாசரஸ்வதி வாசம் செய்வதாகவும், காலையில் எழுந்தவுடன் உள்ளங்கையை பார்ப்பதால் அவர்களின் அருள் கிடைக்கும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். மேலும், அன்றைய தினம் பிரச்னை இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கும், காரியத் தடைகள் ஏற்படாது என்றும் ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.

News June 25, 2024

காலை நேர உணவுகளாக எதை சாப்பிடலாம்?

image

வைட்டமின் “சி” நிறைந்த உணவை காலையில் உட்கொள்வது அவசியம் என்றும், அவை வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தி, மூளைக்கு அதிக ஆக்சிஜனைத் தருமென்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். அதன்படி, முழுத் தானியங்களால் செய்த இட்லி, சம்பா ரவை உப்புமா, கஞ்சி, தோசை, சோள உப்புமா, கோதுமை சப்பாத்தி, சிறுதானிய உணவுகள், முளைகட்டிய பயிறுகள், கேழ்வரகுத் தோசை, ரொட்டி சாப்பிடலாம் என அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

News June 25, 2024

AFG-BAN ஆட்டம் மழையால் பாதிப்பு

image

T20 WC தொடரில், ஆஃப்கன்-வங்கதேசம் இடையிலான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் AFG-BAN அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த AFG அணி, 20 ஓவர்களில் 115/5 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்ஸ் முடிந்த உடன் கனமழை பெய்யத் தொடங்கியதால், மைதானம் முழுவதும் தார்ப்பாயால் மூடப்பட்டுள்ளது. மழை நின்றப்பிறகு போட்டித் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News June 25, 2024

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது

image

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த அவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் படகுகளுடன் காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்கள் கைது விவகாரத்தில் உடனடியாக அரசு தலையிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

News June 25, 2024

ராமர் கோயிலில் ஒழுகும் மழை நீர்: அர்ச்சகர்

image

அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் கருவறையில் மழைநீர் ஒழுகுவதாக தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். கோயில் கட்டுமானத்தில் அலட்சியமாக இருப்பதாக கூறிய அவர், சரியான வடிகால் அமைப்பு கூட ஏற்படுத்தவில்லை என தெரிவித்துள்ளார். இதையடுத்து, பழுது நீக்கும் பணிகளை முடுக்கிவிட்டுள்ள கோயில் கட்டுமான கமிட்டித் தலைவர் மிஷ்ரா, டிசம்பருக்குள் கட்டுமான பணிகள் முடிவடையும் என கூறியுள்ளார்.

News June 25, 2024

அவசர நிலை பிரகடனமான நாள்

image

1975ஆம் ஆண்டு இதே நாளில்தான் (25 ஜூன்) இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அன்று முதல் 1977 வரை சுமார் 21 மாதங்கள் எமர்ஜென்சி நிலை அமலில் இருந்தது. அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் ஃபக்ருதின் அலி அகமது அவசர நிலையை பிரகடனம் செய்தார். இன்றைய தினத்தை பாஜக கறுப்பு தினமாக கடைபிடிக்கிறது.

error: Content is protected !!