India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மக்களவை சபாநாயகராக 2ஆவது முறை தேர்வாகியுள்ள ஓம் பிர்லாவுக்கு INDIA கூட்டணி சார்பில் ராகுல் வாழ்த்து கூறியுள்ளார். மக்களவையில் பேசிய அவர், மக்கள் குரலை எதிர்க்கட்சிகள் பிரதிநிதித்துவப்படுத்துவதால், இந்த அவை சிறந்த முறையில் செயல்பட விரும்புவதாகத் தெரிவித்தார். மேலும், சபாநாயகர் தனது பணியை செய்வதற்கு, எதிர்க்கட்சிகள் உதவிகரமாக இருக்கும் எனவும் அவர் உறுதி அளித்தார்.

இந்திய பங்குச்சந்தை இன்று வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்து பங்குச்சந்தை நல்ல முன்னேற்றத்தை கண்டன. குறிப்பாக, மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 453 புள்ளிகள் உயர்ந்து 78,509 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 110 புள்ளிகள் உயர்ந்து 23,832 புள்ளிகளுடனும் வர்த்தகமாகி வருகிறது.

மத்திய அரசுதான் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியுமென தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறுவது சரியல்ல என்று பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார். அதிகாரம் இருந்தும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக அரசு தயக்கம் காட்டுவது ஏன் எனக் கேள்வி எழுப்பிய அவர், பிஹாரில் நிதிஷ்குமார் அரசு நடத்தியது போல தமிழகத்திலும் மாநில அரசே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த முடியும் எனத் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் தேசிய மகளிர் ஆணையக் குழு உறுப்பினர் குஷ்பு ஆய்வு நடத்தி வருகிறார். தமிழகத்தையே உலுக்கிய கருணாபுரம் விஷச்சாராய உயிரிழப்புகள் குறித்த விவரங்களை அவர் கேட்டறிந்து வருகிறார். விஷச்சாராயம் குடித்தவர்களில், இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். 150க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரபஞ்சத்தின் ரகசியங்களை ஆராய்ந்து வரும், NASA விண்வெளி ஆராய்ச்சி மையம் அவ்வப்போது, அரிய நிகழ்வுகளை கண்டுபிடித்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், சீனா-பூடானை ஒட்டிய இமயமலைப் பகுதியில் சிவப்பு, ரோஸ் நிறத்தில், மின்னலாகப் பாய்ந்த ராட்சத ஒளித்திரள்களை நாசா படம்பிடித்துள்ளது. இதுகுறித்து கூறிய விஞ்ஞானிகள், சூரிய கதிர்வீச்சு, காஸ்மிக் கதிர்வீச்சுகளால் இந்த நிகழ்வு நடத்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

மாணவிகள் ஹிஜாப் அணியக்கூடாது என்று கல்லூரி உத்தரவிட்டதற்கு எதிரான மனுவை விசாரிக்க மும்பை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கல்லூரிக்கு வரும் மாணவ மாணவிகள் ஹிஜாப், தொப்பி, பேட்ஜ், ஸ்டோல், புர்கா ஆகியவற்றை அணிய தடை விதித்தது. இதனை எதிர்த்து 9 மாணவிகள் உயர்நீதிமன்றத்தை நாடினார். ஆனால், கல்லூரியின் முடிவுகளில் தலையிட முடியாது என்று நீதிமன்றம் விசாரிக்க மறுத்துவிட்டது.

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக தேர்வாகியுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு, நடிகரும், தவெக தலைவருமான விஜய் வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ X தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “INDIA கூட்டணி சார்பில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட ராகுலுக்கு வாழ்த்துகள். நாட்டு மக்களுக்காக தொடர்ந்து சேவையாற்ற வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு ₹18,179 கோடி கடன் உள்ளதாக போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள கொள்கை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், வாகன கொள்முதல் கடன் ₹590 கோடியும், குறுகிய கால கடன் ₹5,982 கோடியும், நடைமுறை மூலதனத்திற்கான பருவக் கடன் ₹11,607 கோடி என மொத்தமாக தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்திற்கு ₹18,179 கோடி செலுத்த வேண்டியுள்ளதெனக் கூறப்பட்டுள்ளது.

48 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மக்களவை சபாநாயகர் தேர்தலில் ஓம் பிர்லா குரல் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 293 உறுப்பினர்களும் INDIA கூட்டணிக்கு 233 உறுப்பினர்களும் உள்ளனர். இதனையடுத்து தற்காலிக சபாநாயகர் நடத்திய குரல் வாக்கெடுப்பில் ஓம் பிர்லா தேர்வானதாக அறிவிக்கப்பட்டது. மோடி, ராகுல் இருவரும் அவரை சபாநாயகர் நாற்காலிக்கு அழைத்து சென்று அமர வைத்தார்.

மக்களவை சபாநாயகர் தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. அப்போது ஓம் பிர்லா பெயரை பிரதமர் நரேந்திர மோடி முன் மொழிந்தார். அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா ஆகியோர் வழிமொழிந்தனர். பின்னர், கொடிக்குன்னில் சுரேஷ் பெயரை கனிமொழி உள்ளிட்ட INDIA கூட்டணி தலைவர்கள் முன்மொழிந்து வழிமொழிந்தனர்.
Sorry, no posts matched your criteria.