News November 10, 2025

USA-ல் உயிரிழந்த இந்திய மாணவி: சளி காரணமா?

image

USA டெக்சாஸில், ஆந்திராவை சேர்ந்த 23 வயது மாணவி ராஜ்யலட்சுமி தனது அப்பார்ட்மெண்ட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் பட்டம் பெற்று வேலை தேடிக்கொண்டிருந்த ராஜி, கடந்த சில நாள்களாக கடும் சளி மற்றும் நெஞ்சு வலியால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. பிரேத பரிசோதனை நடைபெற்று வரும் நிலையில், அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர இணையத்தில் நிதி திரட்டப்பட்டு வருகிறது.

News November 10, 2025

சுத்தமான காற்று.. டாப் 10 நகரங்கள்

image

இந்தியா, பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. சில நகரங்களில் காற்றின் தரம் மிகவும் கவலைக்கிடமாக இருந்தாலும், சில நகரங்களில் காற்று சுத்தமாகவும் சுவாசிக்க பாதுகாப்பானதாகவும் இருக்கிறது. எந்தெந்த நகரங்கள் சுத்தமான காற்றுடன் உள்ளன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் பண்ணுங்க. SHARE IT.

News November 10, 2025

பிரபல நடிகர் கவலைக்கிடம்… வென்டிலேட்டரில் சிகிச்சை

image

பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரும், நடிகை ஹேமமாலினியின் கணவருமான தர்மேந்திராவின்(89) உடல்நிலை கவலைக்கிடமாகியுள்ளது. உடல்நலக் குறைவால் நவ.1-ம் தேதி மும்பையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, வென்டிலேட்டர் உதவியுடன் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தர்மேந்திராவின் உடல்நிலையை டாக்டர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது.

News November 10, 2025

RR அணியின் புதிய கேப்டன் யார்?

image

RR அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை டிரேட் மூலம் CSK வாங்கவுள்ளதாக காட்டுத்தீ போல செய்தி பரவி வருகிறது. அப்படி சென்னைக்கோ, வேறு அணிக்கோ சஞ்சு சென்றால் புதிய கேப்டன் யார் என்ற கேள்வி எழுகிறது. ஜெய்ஸ்வால் (அ) துருவ் ஜுரலை கேப்டனாக நியமிக்க, RR அணி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்தமுறை சில போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட ரியான் பராக் பெயர் பரிசீலனையில் இல்லை எனவும் கூறப்படுகிறது.

News November 10, 2025

உங்களுக்கும் இப்படி போன் வருதா.. உஷாரா இருங்க!

image

செல்போன் எண்ணை ஆதாருடன் இணைக்காவிட்டால், மொபைல் எண் பிளாக் செய்யப்படும் என மிரட்டி, சைபர் குற்றவாளிகள் போன் செய்து, பணத்தை சுருட்டி வருகின்றனர். இந்த கும்பலிடம் ஜாக்கிரதையாக இருக்கும் படி, PIB Fact Check அறிவுறுத்தியுள்ளது. டெலிகாம் அதிகாரிகள் இப்படி போன் செய்வதில்லை என்றும், அழைப்பு வந்தால் cybercrime.gov.in அல்லது 1930 என்ற எண்ணில் புகார் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைவருக்கும் பகிருங்கள்.

News November 10, 2025

‘அம்மா SORRY.. என் சாவுக்கு இவர்கள்தான் காரணம்’

image

‘அம்மா என்னை மன்னித்துவிடு. என் கணவன் விரும்புவது என் உடலை மட்டுமே, மனதை அல்ல. என் சாவிற்கு மாமனார், மாமியார் உள்ளிட்டோர்தான் காரணம்’. கேரளாவில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்த ரேஷ்மாவின் கடைசி வரிகள் இவை. திருமணத்தின்போது வரதட்சணையாக கொடுத்த நகைகளை தனது பெற்றோரிடம் திரும்பிக் கொடுக்க வேண்டும் என கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

News November 10, 2025

தேர்தலில் EPS-க்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: RS பாரதி

image

பாஜகவுக்காக EPS நடத்திய அடிமை ஆட்சியால், நீட் முதல் மின்சாரம் வரை தமிழகத்தின் உரிமைகளை இழந்துள்ளதாக RS பாரதி விமர்சித்துள்ளார். மாநில மக்களின் வாக்குரிமைக்கு அச்சுறுத்தல் தரும் SIR-யை கண்டிக்க திராணியில்லாமல் EPS வக்காலத்து வாங்கி வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பாஜகவுக்கு துணை போகும் EPS-க்கு மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

News November 10, 2025

யூடியூபரை மன்னிக்க முடியாது: கவுரி கிஷன்

image

நடிகை கவுரி கிஷனிடம் எடையை கேட்ட விவகாரம் சர்ச்சையான நிலையில், சம்பந்தப்பட்ட யூடியூபர் அதற்கு வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனால், பொறுப்புணர்வு இல்லாமல் மன்னிப்பு கேட்பது, மன்னிப்பே இல்லை என கவுரி பதிவிட்டுள்ளார். மேலும், அது ஒரு வேடிக்கையான கேள்வி என்று யூடியூபர் சொன்னதை சுட்டிக்காட்டிய அவர், பெயரளவுக்கான வருத்தத்தை தான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

News November 10, 2025

BREAKING: விலை மளமளவென குறைந்தது

image

GST 2.0 மூலம் அனைத்து கார் நிறுவனங்களும் விலை குறைப்பை அதிரடியாக அறிவித்து வருகின்றன. ஹோண்டாவை தொடர்ந்து மாருதியும் நவம்பர் மாத ஆஃபர்களை அறிவித்துள்ளது. எந்த காருக்கு, என்ன ஆஃபர் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், நீங்க எந்த கார் வாங்க பிளான் பண்ணுறீங்க?

News November 10, 2025

ஜெய்சங்கருக்கு CM ஸ்டாலின் கடிதம்

image

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 14 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு, CM ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், 2024-ல் இருந்து கைது செய்யப்பட்ட மீனவர்களில் 128 பேர் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நீண்டகால பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசு தீவிரம் காட்ட வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!