India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

2023-24 நிதியாண்டில் வெளிநாடுகளில் உள்ள தமது குடிமக்களிடம் இருந்து அதிக தொகை பெற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில், வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் தங்கள் தாயகத்தில் உள்ள குடும்பத்தினருக்கு இந்தாண்டு ₹10 லட்சம் கோடியை அனுப்பியுள்ளனர். கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இது 7.5% வளர்ச்சி அடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் விராட் கோலி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோனி என்ன செய்தாரோ, அதை கோலியாலும் செய்ய முடியும் என்று கூறிய அவர், 2011 உலகக் கோப்பையில் அதுவரை சிறப்பாக ஆடாத தோனி, இறுதிப் போட்டியில் மிகச்சிறப்பாக ஆடியதாகவும் கூறியுள்ளார்.

சிம் கார்டு மோசடிகளை தடுக்க TRAI பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வரிசையில், சிம் கார்ட் எண்ணை மாற்றாமல் வேறொரு நெட்வொர்க் மாற வழிவகை செய்யும் MNP விதியில் மார்ச் 14ஆம் தேதி திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த விதி ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என TRAI அறிவித்துள்ளது. புதிய விதியின்படி, சிம் கார்டு காலாவதியாவதற்கு குறைந்தது 7 நாள்கள் முன்பே வேறு நெட்வொர்க் மாற அனுமதிக்கப்படும்.

1) கள்ளச்சாராயம் விற்போருக்கு தண்டனையை கடுமையாக்கும் சட்டத்திருத்தம் 2) நாமக்கல், காரைக்குடி, திருவண்ணாமலை, புதுக்கோட்டையை, மாநகராட்சிகளாக தரம் உயர்த்தும் சட்டத்திருத்தம் 3) நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் தரக்கோரி தீர்மானம் 4) புதிதாக 1.48 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை 5) ஒசூரில் புதிய பன்னாட்டு விமான நிலையம் 6) 9 புதிய தொழிற்பூங்காக்கள் மூலம் 1.10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

‘இந்தியன் 2’ படத்தில் சேனாபதி வயது குறித்த கேள்விகளுக்கு, படக்குழு தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறது. இந்நிலையில், ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த கமலிடம் இதே கேள்வி முன்வைக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த அவர், நாம் யாரும் சூப்பர் மேன், ஹனுமனின் வயதை கேட்பதில்லை எனவும், ஹனுமன் பல யுகங்களை கடந்து வாழ்ந்து வருவதாகவும் கூறியுள்ளார். இதற்கு ஆன்மிகவாதிகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

நீதித்துறையில் அரசியல் தலையீடுகள் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். கொல்கத்தாவில் நடந்த நீதித்துறை வளர்ச்சி குறித்து கருத்தரங்கில் பேசிய அவர், “எங்களைப் பொறுத்தவரை நீதித்துறை கோயில் போன்றதாகும். மக்களுக்கு நீதி வழங்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நீதித்துறை முற்றிலும் தூய்மையாகவும், நேர்மையாகவும் செயல்பட வேண்டும்” என்றார்.

ஜார்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜக என்ற கட்சியே இருக்காது என்று அம்மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார். தனக்கு எதிராக சதி திட்டம் தீட்டிய பாஜகவின் சவப்பெட்டியில் கடைசி ஆணி அடிக்கும் நேரம் வந்துவிட்டதாக கூறிய அவர், ஜார்கண்ட்டில் இருந்து காவித் துடைத்தெறியப்படும் என்றார். பண மோசடி வழக்கில் சிறையில் இருந்த ஹேமந்த், நேற்று ஜாமினில் விடுதலையானார்.

டி20 WC இறுதிப்போட்டி நடைபெறவுள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து, 150 ரன்கள் எடுத்தாலே வெற்றி உறுதி என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த மைதானம் முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக இருக்குமாம். அதேபோல், அதிகபட்ச ஸ்கோர் 138 ரன்கள் தான். எனவே, ரோஹித், கோலி, சூர்யகுமார், ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடினால் இந்தியாவின் வெற்றி உறுதி என கூறுகின்றனர்.

ஜப்பானில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஒரு லிட்டர் தண்ணீர் ₹1,16,000 விற்கப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஃபிலிகோ ஜூவல்லரி வாட்டர் கம்பெனி தயாரித்துள்ள இந்த வாட்டர் பாட்டில், ஸ்வரோவ்ஸ்கி படிகங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் உள்ள நீர், ரோக்கோ மலையில் இருந்து பெறப்படுவதாகவும், அதன் ஆக்ஸிஜன் அளவு மற்ற நீரில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய போட்டியில் ரோஹித் ஷர்மா 56 ரன்கள் எடுத்தால், உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த கேப்டன் என்ற பாக்., அணியின் பாபர் அசாமின் சாதனையை முறியடிப்பார். கடந்த 2021இல் பாபர் அசாம் 303 ரன்கள் எடுத்திருந்ததே இதுநாள் வரை டி20 உலகக்கோப்பை தொடரில் ஒரு கேப்டன் அடித்துள்ள அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. இந்த சாதனையை ரோஹித் இன்று முறியடிப்பாரா என்று கமெண்டில் கூறுங்கள்.
Sorry, no posts matched your criteria.