News June 29, 2024

செப்டம்பர் 15க்குள் வகுப்புகளை தொடங்க உத்தரவு

image

முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தொடங்க, பொறியியல் கல்லூரிகளுக்கு AICTE உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான அங்கீகார நீட்டிப்பை, ஜூலை 31க்குள் பல்கலைக்கழகங்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், முதலாமாண்டு மற்றும் நேரடி 2ஆம் ஆண்டு சேரும் மாணவர்களுக்கு செப்.15க்குள் வகுப்புகளை தொடங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

News June 29, 2024

யாரெல்லாம் ITR தாக்கல் செய்ய வேண்டும்?

image

60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஆண்டு வருமானம் ₹2.5 லட்சத்துக்கு மேல் இருந்தால், அவர் கட்டாயம் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும். அதுவே, 60 – 80 வயதுக்குட்பட்டவர்களாக இருந்தால், ₹3 லட்சமாகவும், 80 வயதுக்கு மேல் இருந்தால் ₹5 லட்சமாகவும் உள்ளது. இது தவிர, டிடிஎஸ், டிசிஎஸ் வரிகளை திரும்ப பெற IT தாக்கல் செய்வது அவசியமாகிறது. வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய ஜூலை 31ஆம் தேதி கடைசி நாளாகும்.

News June 29, 2024

அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்கும் இந்தியா

image

T20 WC இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதலில் களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித்தும், கோலியும் மிரட்டலாக விளையாடி 1.3 ஓவரில் 23 ரன்கள் எடுத்தனர். ஆனால், 2ஆவது ஓவரின் 4ஆவது பந்தில் ரோஹித் அவுட் ஆன நிலையில், அடுத்த பந்திலேயே பண்ட்டும் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

News June 29, 2024

மாஸ்க்டு ஆதார் என்றால் என்ன?

image

வங்கி கணக்கு தொடங்குவது முதல் சிம் கார்டு வாங்குவது வரை அனைத்திற்கும் ஆதார் அட்டை தேவைப்படுகிறது. மறுபக்கம் ஆதார் தொடர்பான மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு தீர்வாக, மக்களின் தகவல்களை பாதுகாக்கும் வகையில் மாஸ்க்டு ஆதார் வழங்கப்படுகிறது. ஆதார் அட்டைக்கு பதிலாக Masked ஆதார் பயன்படுத்த முடியும். மாஸ்க்டு ஆதாரில் 12 இலக்க ஆதார் எண்ணில் 8 எண்கள் மறைக்கப்பட்டு, கடைசி 4 எண்கள் மட்டும் இடம்பெறும்.

News June 29, 2024

அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை

image

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு (10 மணி வரை) 16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், விழுப்புரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தி.மலை, காஞ்சி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யலாம் என்பதால், வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுங்கள்.

News June 29, 2024

சிறுவன் மரணம்: அமைச்சர் மா.சு. விளக்கம்

image

சென்னை சைதாப்பேட்டையில் கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்தியதால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு 11 வயது சிறுவன் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் அரசியல் ரீதியாக மாறியுள்ள நிலையில், குடிநீரில் எந்தவித பிரச்னையும் இல்லை என்று ஆய்வு தகவல் உள்ளது. பிரேத பரிசோதனை செய்த பிறகு இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று அமைச்சர் மா.சு. விளக்கமளித்துள்ளார்.

News June 29, 2024

டாஸ் வென்ற இந்திய அணி கோப்பையை வெல்லுமா?

image

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது. போட்டி நடைபெறும் பார்படாஸ் மைதானத்தில் முதலில் பேட் செய்த அணியே, அதிக முறை வென்றுள்ளதால் இந்திய அணி இறுதிப் போட்டியில் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் 11 ஆண்டுகால கோப்பை கனவு தீருமா? கமெண்டில் கூறுங்கள்.

News June 29, 2024

ரோஹித் ஷர்மா மிகப் பெரிய ஆளுமை: நாசர் ஹுசைன்

image

ரோஹித் ஷர்மா இந்திய கிரிக்கெட் அணியை மிகச் சிறப்பாக வழிநடத்துவதாக இங்கிலாந்து முன்னாள் வீரர் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். ரோஹித் அமைதியாக இருப்பதைப் போல தெரிந்தாலும், அவரிடம் மிகப்பெரிய ஆளுமை இருக்கிறது எனப் பாராட்டிய அவர், ஒரு அண்ணனை போல் இளம் வீரர்களை அவர் அரவணைத்து வழிநடத்துவதாக கூறியுள்ளார். முன்னாள் வீரர்கள் பலர் ரோஹித்தை தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.

News June 29, 2024

சென்னையில் துயர மரணம்: இபிஎஸ் கண்டனம்

image

சென்னையில் கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்திய 11 வயது சிறுவன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் சுகாதாரமற்றக் குடிநீரால் 10 பேர் பலியானதாக செய்திகள் வந்துள்ள நிலையில், தலைநகர் சென்னையிலும் தற்போது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மிக அடிப்படை தேவையான குடிநீர் சுகாதாரமான முறையில் வழங்கப்படுவதைக் கூட அரசால் உறுதி செய்யமுடியவில்லை என இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

News June 29, 2024

T20 WC: இந்திய அணி பேட்டிங்

image

SA-க்கு எதிரான T20 இறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. 2024 டி20 உலகக் கோப்பையில் இதுவரை தோல்வியே சந்திக்காத இந்த 2 அணிகளும் மோதவுள்ளதால், யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 11 ஆண்டுகளாக ஐசிசி கோப்பையை வெல்லாத இந்திய அணியின் ஏக்கம் இந்த போட்டியில் தீருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என கமெண்டில் கூறுங்கள்.

error: Content is protected !!