India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை என அமைச்சர் துரைமுருகன் பேசியதற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு அமைச்சர் இவ்வாறு பதில் அழிப்பது மிகவும் கண்டனத்துக்குரியது என்ற அவர், குடியை மக்களுக்குக் கொடுத்து ஏமாற்றி, கோடிக்கணக்கில் அரசு சம்பாரிப்பது ஏற்புடையதல்ல என சாடியுள்ளார். மேலும், போதையில்லா தமிழகத்தை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதை முடித்துவிட்டு ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பில் அஜித் இணையவுள்ளார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஜூலை இரண்டாவது வாரம் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வந்துள்ளது. அதன்பின் அமெரிக்காவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி, தனது தலைமையில் முதன் முறையாக இந்திய அணிக்கு கோப்பையை வென்றுகொடுத்து கேப்டன் ரோஹித் ஷர்மா சாதித்துள்ளார். இதன்மூலம் இந்திய அணிக்காக கோப்பையை வென்றுகொடுத்த மூன்றாவது கேப்டன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். முன்னதாக கபில் தேவ், தோனி ஆகியோர் இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வென்றுகொடுத்துள்ளனர்.

➤ 1937 – உலகின் முதலாவது அவசரத் தொலைபேசி எண் (999) லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது.
➤ 1972 – ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்தில் ஒரு லீப் நொடி அதிகரிக்கப்பட்டது
➤ 1977 – தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைப்பு கலைக்கப்பட்டது
➤ 2002 – பிரேசில் தனது ஐந்தாவது உலகக்கோப்பை கால்பந்து கோப்பையை வென்றது.
➤ 2015 – இந்தோனேசியாவின் மேடான் பகுதியில் இராணுவ விமானம் ஒன்று வீழ்ந்ததில் 116 பேர் உயிரிழந்தனர்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சிறப்பாக ஆடி 76 ரன்கள் எடுத்த விராட் கோலி ஆட்ட நாயகன் விருதைப் பெற்றுள்ளார். இதன்மூலம் டி20 போட்டிகளில் அதிகமுறை (16) தொடர் நாயகன் விருதை வென்ற வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அதேநேரம் தொடர் முழுவதும் சிறப்பாக பந்துவீசி 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பும்ராவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது.

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: அவாவறுத்தல் ▶ குறள் எண்: 369 ▶குறள்: இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும் துன்பத்துள் துன்பங் கெடின். ▶பொருள்: அவா என்று சொல்லப்படுகின்ற துன்பங்களுள் பொல்லாதத் துன்பம் கெடுமானால் இவ் வுலகில் இன்பம் இடையறாமல் வாய்க்கும்.

டி20 உலகக் கோப்பையை வென்றுள்ள இந்திய அணிக்கு எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், இறுதிப் போட்டியில் சிறப்பாக ஆடி உலகக் கோப்பையை கைப்பற்றியதற்கு வாழ்த்துக்கள் எனக் கூறியுள்ளார். மேலும், சூர்யகுமாரின் கேட்ச், ரோஹித் ஷர்மாவின் தலைமை, ராகுல் டிராவிட்டின் வழிகாட்டுதலையும் புகழ்ந்து X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இன்று (ஜூன் 30) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

நீண்ட இடைவெளிக்குப் பின் T20 உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. கோப்பையைக் கைப்பற்றிய அந்த சிறப்பான தருணத்தில் இந்திய வீரர்கள் அனைவரும் உணர்ச்சிவசப்பட்டனர். ஒருவரையொருவர் கட்டித்தழுவி, ஆனந்த கண்ணீர்விட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த வீரர்களைப் பார்த்து கோடிக்கணக்கான ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்திய வீரர்களின் உணர்ச்சிகரமான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித், அர்ஜுன், ஆரவ், த்ரிஷா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘விடாமுயற்சி’. இதன் படப்பிடிப்பு இடையில் சில மாதங்கள் தடைப்பட்ட நிலையில், தற்போது அஜர்பைஜானில் மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், இப்படத்தில் அப்டேட் நாளை இரவு 7:03 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.