India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பிரதமர் மோடி 2014இல் பதவியேற்றது முதல் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மக்களிடையே உரையாற்றி வருகிறார். மக்களவைத் தேர்தலையொட்டி அந்த நிகழ்ச்சி பிப்ரவரி 25 முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தேர்தல் முடிந்து மீண்டும் பிரதமராக பதவியேற்றதையடுத்து, மோடி இன்று மீண்டும் மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் உரை நிகழ்த்துகிறார்.

2022ஆம் ஆண்டு ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கியபோது, அவர் அணிக்கு திரும்புவது கடினம் என்று பேசப்பட்டது. ஆனால், தடைகளை படிகளாக்கி மீண்டுவந்த அவர், இன்று நாட்டுக்காக உலகக் கோப்பையையும் வென்று கொடுத்திருக்கிறார். நடப்பு ஆண்டு ஐபிஎல் மூலம் ரீ-எண்ட்ரீ கொடுத்த அவர், ராகுல், சாம்சன் ஆகிய விக்கெட் கீப்பர்களை பின்னுக்கு தள்ளி அணியில் இடம் பிடிக்கும் அளவுக்கு ஃபீனிக்ஸ் பறவையாக மீண்டு வந்திருக்கிறார்.

மீன்களின் வரத்து அதிகரித்ததால் கடந்த வாரத்தை விட, விலை குறைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை காசிமேடு மீன்பிடி சந்தையில் திருவிழா போல், காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த வாரம் கிலோ ₹1800 வரை விற்கப்பட்ட வஞ்சிரம் இன்று ₹1100 வரை விற்பனையாகிறது. சங்கரா ₹350, நெத்திலி ₹250, நண்டு ₹350, சிறிய ரக வஞ்சிரம் ₹500க்கு விற்பனை செய்யப்படுவதால் மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது வேதனையளிப்பதாக தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் தெரிவித்துள்ளார். போட்டி முடிந்தபின் பேசிய அவர், “இறுதிப் போட்டி வரை முன்னேறி, நாங்கள் தகுதிமிக்க அணி என்று நிரூபித்திருக்கிறோம். தோல்வியடைந்தது வருத்தமாக இருந்தாலும், எங்கள் அணி வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்” என்றார்.

பிஹார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதாதள செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இக்கட்சியும் பங்கு வகிக்கிறது. மோடி தலைமையிலான அரசு, ஐக்கிய ஜனதாதளத்தின் ஆதரவை நம்பியிருக்கும் நிலையில், அதனை முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டிருக்கிறார் நிதிஷ்குமார்.

இந்திய ராணுவத் தளபதியாக உபேந்திர திவேதி நாளை பதவியேற்கிறார். கடற்படை தளபதியாக தினேஷ் திரிபாதி பதவி வகிக்கிறார். அவர்கள் 2 பேரும் மத்திய பிரதேசத்தில் உள்ள சைனிக் பள்ளியில் 5ஆம் வகுப்பு முதல் ஒன்றாக படித்தவர்கள். இதேபோல் ரோல் நம்பர் வரிசையில் 931, 938 என அமைந்துள்ளது. இந்திய பாதுகாப்புத் துறை வரலாற்றில் ஒரே வகுப்பு நண்பர்கள், தளபதிகளாக ஒரே நேரத்தில் பதவி வகிப்பது இதுவே முதல்முறையாகும்.

டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலியின் ஃபார்ம் அனைவராலும் விமர்சிக்கப்பட்டது. இறுதிப் போட்டிக்கு முன்பாக 7 போட்டிகளில் விளையாடி வெறும் 75 ரன்கள் மட்டுமே அவர் எடுத்திருந்தார். இந்நிலையில், நேற்று இறுதிப் போட்டியில் மட்டும் 76 ரன்கள் எடுத்து அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்துள்ளார். மேலும், இப்போட்டியில் ஆட்டநாயகன் விருதுடன் டி20 போட்டியில் இருந்து ஓய்வையும் அறிவித்தார்.

நாடு முழுவதும் பல முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் கட்டணம் அதிகமாக இருப்பதால் ஏழை, எளிய மக்கள் பயணிக்க முடியாத நிலையே உள்ளது. இந்நிலையில், அனைத்து மக்களும் பயணிக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் கட்டணத்தை குறைக்க உள்ளதாக மத்திய ரயில்வே இணையமைச்சர் சோமண்ணா கூறியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வன்னியர்கள் பெறும் இட ஒதுக்கீடு தொடர்பான வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என்று பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தியுள்ளார். வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு கேட்டு பாமக போராடி வருகிறது. ஆனால், அவர்கள் அதற்கு மேல் இடஒதுக்கீடு பெறுவதாக அமைச்சர் சிவசங்கர் சட்டப்பேரவையில் பேசினார். இதனை நிரூபித்தால் நான் பதவி விலகத் தயார் என்று ஜி.கே.மணி அறைகூவல் விடுத்துள்ளார்.

காலையில் வெறும் வயிற்றில் எதை அருந்தலாம் என்பது குறித்து மருத்துவர்கள் சில யோசனைகளை தெரிவிக்கின்றனர். வெறும் வயிற்றில் தர்பூசணி சாறை அருந்தினால், உடல்சூடு தணிந்து, நீர்ச்சத்து அதிகரிக்கும் என்றும், அதில் வைட்டமின் சி சத்து இருப்பதால் சத்து குறைபாடும் போகும் என்றும் கூறுகின்றனர். அத்துடன், உடலில் நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதோடு, செரிமானத்தை மேம்படுத்தும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
Sorry, no posts matched your criteria.