India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுவது வழக்கம். ஆனால், ஒரு நபருக்கு ஒரே நாளில் 2 முறை அதே காரணத்துக்காக அபராதம் விதிக்க 2016ஆம் ஆண்டு வாகன திருத்த சட்டத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தில் ஹெல்மெட் உள்ளிட்ட காரணங்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டால், அதே காரணத்துக்காக, அதே நாளில் அபராதம் விதிக்கக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.

2024 டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக சிக்ஸர் அடித்தவர்கள் பட்டியிலில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பூரான் (17 சிக்சர்) முதலிடத்தில் உள்ளார். குர்பாஸ் 16 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்திலும், 15 சிக்ஸர்களுடன் ரோஹித் ஷர்மா மூன்றாவது இடத்திலும் உள்ளனர். அதிக கேட்ச் பிடித்தவர்கள் பட்டியலில் ரஷீத் கான் (16 ) முதலிடத்திலும், மார்க்கரம் (8), ஸ்டப்ஸ் (7) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார். இதனால், அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கெனவே, ருதுராஜ், ரிஷப் பண்ட், KL.ராகுல், சூர்யகுமார், ஹர்திக், ஷுப்மன் கில் ஆகியோர், இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தி சென்றிருக்கின்றனர். மீண்டும் இவர்களில் ஒருவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படுமா அல்லது புதியவருக்கு வழங்கப்படுமா?

தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் 2009 படி திருமணப்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி, திருமணம் முடிந்த தம்பதிகள் 90 முதல் 150 நாள்களுக்குள் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும். திருமணத்தை பதிவு செய்யாதவர்கள் மீது சட்டப்படி நடிவடிக்கை எடுக்க இந்த சட்டம் வழிவகுத்துள்ளது. திருமணத்தை ஆன்லைன் மூலம் எப்படி பதிவு செய்வது எனத் தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பித்து முடித்தவுடன் அருகிலுள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அது அனுப்பி வைக்கப்படும். அதன் பின்பு, சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து விண்ணப்பிக்கும்போது அளித்த மொபைல் எண்ணுக்கு SMS வரும். அதில் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் வரவேண்டிய தேதி, நேரம் இருக்கும். அன்றைய தினத்தில், ஆன்லைன் விண்ணப்பம், ஒரிஜினல் ஆவணங்கள், 4 சாட்சிகளுடன் சென்று திருமணப்பதிவு சான்று பெறலாம்.

சார்பதிவாளர் அலுவலகத்தில் நேரில் விண்ணப்பித்தும், ஆன்லைனில் விண்ணப்பித்தும் திருமணத்தை பதிவு செய்யலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க,<

டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் அறிவித்துள்ளது, இந்திய அணியில் மிகப்பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் இடங்களை அடுத்து யார் நிரப்புவார்கள் என்ற மிகப்பெரும் கேள்வி எழுந்துள்ளது. சுப்மன் கில், ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், சாம்சன், வெங்கடேஷ் அய்யர் ஆகியோரில் யாரேனும் 2 பேருக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு தொலைபேசி மூலம் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது, ரோஹித் ஷர்மாவின் சிறப்பான தலைமை பண்பையும், அவரது டி20 சாதனைகளையும் பாராட்டியுள்ளார். தொடர்ந்து, கோலியின் இன்னிங்ஸ் மற்றும் இந்திய அணிக்கான அவரது பங்களிப்புக்கும் பாராட்டு தெரிவித்த அவர், ஹர்திக் பாண்டியாவின் இறுதி ஓவர், சூர்யகுமாரின் கேட்ச்சை சுட்டிக்காட்டி பாராட்டியுள்ளார்.

டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதற்கு பும்ரா & அர்ஷ்தீப்பின் அசுர வேக பந்துவீச்சும் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. 8 போட்டிகளில் அர்ஷ்தீப் சிங் 17 விக்கெட்டுகளையும், பும்ரா 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். குறிப்பாக, 124 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 8.27 சராசரி வைத்து அசத்தியிருக்கிறார் பும்ரா. இவர்களோடு பாண்டியாவும் (11) தனது பங்களிப்பை செலுத்தினார்.

பிஹாரின் ஆட்சி அதிகாரத்திற்கு தேஜஸ்வி யாதவ் வந்தால் இளைஞர்கள் வேலைக்கு கையேந்தும் நிலை ஏற்படும் என பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார். பிஹார் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் நிலை மாற வேண்டும் என்ற அவர், அதற்கு சுயநலமாக செயல்படும் நபர்களை ஆட்சி அதிகாரத்திற்கு வர அனுமதிக்க கூடாது என்றார். நிதிஷூக்கு ஆதரவாக பேசிவரும் பிரசாந்த் கிஷோர், தேஜஸ்வி யாதவை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
Sorry, no posts matched your criteria.