India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கேரளாவில் கூகுள் மேப் உதவியுடன் காரில் மருத்துவமனைக்கு சென்றுக் கொண்டிருந்த இருவர், ஆற்றில் சிக்கிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார் ஆற்றில் அடித்துச் சென்ற நிலையில், அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த மரக்கிளையில் சிக்கிக் கொண்டது. பிறகு, தீயணைப்புத் துறையினர் அவர்களை போராடி மீட்டனர். கூகுள் மேப்பில் காட்டிய பாதையை பின் தொடர்ந்த போது, ஆற்றில் கார் சிக்கியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரேஷனில் பொருள்கள் பெற அளிக்கப்படும் பிளாஸ்டிக் ஸ்மார்ட் அட்டை தொலைந்து போனாலோ, திருடு போனாலோ, உடைந்து போனாலோ, மாற்று அட்டை பெற தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடும்பத் தலைவர் அல்லது தலைவி, சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகம் சென்று நேரில் விண்ணப்பித்தோ, ஆன்லைனில் விண்ணப்பித்தோ புதிய ரேஷன் அட்டையை பெறலாம்.

ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க <

நீட் புகார்களுக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என எம்.பி சு.வெங்கடேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். தேர்தலில் தோல்வியடைந்தால் அயோத்தி ராமரையே பாஜகவினர் கை கழுவி விடுவார்கள் என்றும், ராமர் கோயில் உள்ள தொகுதியில் வென்ற காங். எம்.பி மோடிக்கு எதிரே அமர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். மக்களவையில் முன்பு ஜெய்ஸ்ரீராம் கோஷம் காதைப் பிளக்கும் என்றும் தற்போது சப்தநாடிகளும் அடங்கிப்போயுள்ளதாகவும் அவர் கூறினார்.

டி20 உலகக்கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை வென்றதன் மூலம் பும்ரா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இதுவரை டி20 தொடர் நாயகன் விருதை இந்திய பேட்டர்களே வென்று வந்த நிலையில், முதல் முறையாக பவுலரான பும்ரா அந்த விருதை பெற்றுள்ளார். இந்த தொடரில் பும்ரா 15 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். முன்னதாக, சச்சின், யுவராஜ் சிங், ஷிகர் தவான், விராட் கோலி உள்ளிட்டோர் தொடர் நாயகன் விருதை வென்றுள்ளனர்.

தமிழகத்தில் சில மலைப் பகுதிகளில் மட்டும் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் கனமழை பெய்யலாம். மற்ற பகுதிகளில் இரண்டு நாள்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் அமெரிக்க பயணம் குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். எந்த நிறுவனம், எவ்வளவு முதலீடுகளை ஈர்க்க அவர் செல்கிறார் என்பது குறித்து தெரிவிக்க வேண்டும் என்று கூறிய அவர், முதல்வரின் ஸ்பெயின் பயணத்தால் எவ்வளவு முதலீடு ஈர்க்கப்பட்டது எனவும் கேள்வி எழுப்பினார். முதல்வர் அமெரிக்கா செல்ல உள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் TRB ராஜா கூறியிருந்தார்.

தமிழகத்தில் மாலை 4 மணிக்குள் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே, நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு 2 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விளைச்சல் அதிகரித்து பூக்களின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திண்டுக்கல்லில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பூக்கள் செல்வது வழக்கம். அந்தவகையில், திண்டுக்கல் பூ சந்தையில் கடந்த வாரம் கிலோ ₹1000க்கு மேல் விற்கப்பட்ட மல்லிகை பூ இன்று ₹500க்கும், ₹700க்கு விற்கப்பட்ட முல்லைப் பூ ₹60க்கும், ₹150க்கு விற்கப்பட்ட சம்பங்கி ₹15க்கும் விற்பனையாகிறது.

ஆண்டுதோறும் கள்ளச்சாராய உயிரிழப்புகள் நடந்தாலும் அதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா குற்றம் சாட்டியுள்ளார். விஷச்சாராயத்தால் தமிழ்நாட்டில் இனி ஒரு மரணம் கூட நிகழக்கூடாது என்ற அவர், அமைச்சர் பொறுப்பில் உள்ள துரைமுருகன் போன்றவர்களே, குடியை ஊக்குவிப்பது போல் பேசுவது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதாக சாடியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.