India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உணவில் குறைந்த அளவு உப்பு சேர்ப்பது நல்லது என பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் வலியுறுத்தியுள்ளார். நாள்தோறும் உண்ணும் உணவில் 8 கிராம் அளவுக்கு உப்பு சேர்த்துக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த நிலையை மாற்றுவதற்கு முதலில் கடினமாகத்தான் இருக்கும் என்றார். மேலும், இதை நாம் கடைப்பிடித்தால் உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளில் இருந்து விடுபடலாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

*பூண்டு, வெங்காயம் நறுக்கிய பின்பு கைகளில் உப்பு தேய்த்து தண்ணீர் ஊற்றி கழுவினால் வாடை வீசாது. *புளிக்குழம்பு வைக்கும் போது கடைசியாக மிளகு, சீரக பொடியை சேர்த்தால் சுவையாக இருக்கும். *பருப்பு வேக வைக்கும் போது, சிறிது நெய் சேர்த்தால் நன்கு வெந்து விடும். *முட்டை மீது சமையல் எண்ணெய் தடவினால், சீக்கிரம் கெட்டுப் போகாது. *வெங்காயத்தை வாங்கியதும் வெயிலில் சிறிது நேரம் காய வைத்தால், சீக்கிரம் கெடாது.

தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கியுள்ளனர். அதேபோல், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், நீலகிரி மற்றும் கோவை, நாகை மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும், அடுத்த ஒரு மணி நேரத்திற்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளது.

மதுபான கொள்முதலில் டாஸ்மாக் நிர்வாகத்திடம் வெளிப்படைத்தன்மை இல்லை என இந்திய தணிக்கை தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். 2021-22 நிதியாண்டிற்கான வரவு-செலவு அறிக்கையில், மதுபான கொள்முதலில் சில உற்பத்தியாளர்கள் அதிகம் பயனடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சரக்கு போக்குவரத்து ஏல ஆவணங்களை சோதனை செய்ததில் பல்வேறு ஒழுங்கீனங்கள் நடந்திருப்பது தெரிய வந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விஜய் மாணவர்களிடம் நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும் என கூறியதில் எந்த உள்நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்களை
நல்வழிப்படுத்தும் நோக்கில் விஜய் இந்த கருத்தை தெரிவித்திருப்பார் என்ற அவர், இதில் அரசியல் பார்வையை கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றார். முன்னதாக, தமிழ்நாட்டில் நல்ல அரசியல் தலைவர்கள் குறைவாக இருப்பதாக கூறியிருந்தார்.

தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் கீழ் நலத்திட்டம் பெறும் பயனாளிகள் ஆதார் எண் வைத்திருக்க வேண்டும் அல்லது ஆதார் அங்கீகாரத்துக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். *திட்டத்தை செயல்படுத்தும் துறைகள், பயனாளி ஆதாருக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகளை செய்து கொடுக்கலாம். * ஆதார் எண் பெறும் வரை, விண்ணப்பித்ததற்கான அடையாளச் சான்று, வங்கிப் புத்தகம், பான் அட்டை, ரேஷன் அட்டை உள்ளிட்டவற்றை அளிக்கலாம்.

ஆர்யா, கவுதம் கார்த்திக் கூட்டணியில், மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘மிஸ்டர் X’. ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகிவரும் இப்படத்தில், சரத்குமார், மஞ்சு வாரியார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதுமாக முடிவடைந்துள்ளது. கடைசி நாள் படப்பிடிப்பில் படக்குழு கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படங்கள் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளன.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு அடுத்தாண்டு முதல் ஆன்லைனில் நடத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு வினாத்தாள் கசிவு காரணமாக ஏற்பட்ட குளறுபடிகள் மீண்டும் நடக்காமல் இருக்க தேசிய தேர்வு முகமை இந்த முடிவை எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பொறியியல் படிப்புகளுக்கான JEE மற்றும் JEE Advanced நுழைவுத் தேர்வுகள் ஏற்கனவே ஆன்லைனில் நடத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளிலும் ஒரே நேரத்தில் தேர்வுகள் துவங்கி, முடிவுகளும் வெளியாகும் என்று கல்லூரி கல்வி இயக்குநர் கார்மேகம் அறிவித்துள்ளார். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 3ம் தேதி வகுப்புகள் தொடங்கவுள்ளதாக கூறிய அவர், செமஸ்டர் தேர்வுகள் வரும் அக்டோபர் 31ல் தொடங்கி, நவம்பர் 25ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என அறிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்க வீரர்கள் தலையை உயர்த்தி நடக்கலாம் என்ற அவர், இதற்கு முன்பு விளையாடிய எந்த தென்னாப்பிரிக்க அணிகளை விடவும் நீங்கள் கூடுதலாக முன்னேறியுள்ளதாகவும் கூறியுள்ளார். அந்த அணி இதுவரை எந்த வகையான உலகக் கோப்பையும் இதுவரை வென்றதில்லை.
Sorry, no posts matched your criteria.