News June 30, 2024

பகல் நேரத்தில் தூங்குபவரா நீங்கள்..?

image

பகலில் சிறிது நேரம் தூங்குவது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதாவது, சிறிது நேர பகல் உறக்கம், நமது மூளை செல்களைப் புத்துணர்வூட்டுவதாக ஆய்வுகள் தெரிவிப்பதாகவும், நிறைய புதுமையான சிந்தனைகளையும், முடிவுகளை தீர்க்கமாக எடுக்கக்கூடிய திறனையும் கொடுப்பதாகவும் கூறுகின்றனர். சில நாடுகளில் மென்பொருள் நிறுவனங்கள் ஊழியர்களை பகலில் தூங்க அனுமதிக்கின்றன.

News June 30, 2024

நாளை சிலிண்டர் விலை குறைவு?

image

தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும், ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சமையல் சிலிண்டர் விலையில் மாற்றம் வருவது வழக்கம். அதன்படி, நாளை (ஜூலை 1 ஆம் தேதி) புதிய சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படும். 3ஆவது முறையாக பாஜக ஆட்சிக்கு வந்தபின், முதல்முறையாக சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படவுள்ளது. இதனால், நாளை வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக சிலிண்டர்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News June 30, 2024

பயிற்சி நிறுவனங்களுக்கு தமிழக அரசு அழைப்பு

image

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், ரயில்வே, வங்கித் தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கும் நிறுவனங்களை தேர்வு செய்ய, தமிழக அரசு ஒப்பந்தம் கோரியுள்ளது. ‘நான் முதல்வன்’ திட்டத்தில், 6 மாதம் இலவச உணவு, தங்குமிடம் வழங்கி, மத்திய அரசுப் பணித் தேர்வுக்கு தமிழக அரசு பயிற்சி வழங்குகிறது. இதற்கான நுழைவுத் தேர்வு ஜூலை 14இல் நடைபெற உள்ள நிலையில், பயிற்சி நிறுவனங்கள் ஒப்பந்தத்தில் பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது.

News June 30, 2024

SBI வாடிக்கையாளர்கள் பேலன்ஸ் விவரம் அறிய

image

GPay, Phone போன்ற செயலிகள் தவிர்த்து, SBI வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் உள்ள இருப்புத் தொகையை அறிய.
*SBI YONO, YONO Lite SBI, BHIM SBI Pay செயலி மூலம் அறியலாம்.
*09223 76666 என்ற எண்ணுக்கு ‘BAL’ என டைப் செய்து அனுப்பினால், இருப்புத் தொகை விவரம் SMSஇல் வரும்.
*மொபைல் எண்ணிலிருந்து வாட்ஸ் அப் மூலம் +91 90226 90226 என்ற எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் செய்தால், பேலன்ஸ் விவரங்கள் கிடைக்கும்.

News June 30, 2024

நாளை பாட்டல் ராதா டீசர்

image

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் குரு சோமசுந்தரம் நடிக்கும் திரைப்படம் “பாட்டல் ராதா”. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த நிலையில், நாளை மாலை 5 மணிக்கு படத்தின் டீசல் வெளியாகுவதாக படக்குழு அறிவித்துள்ளது. சமூக சீர்கேடுகளை தட்டிக்கேட்டும் திரைப்படமாக இருக்கும் என்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

News June 30, 2024

ABC ஜூஸ் நன்மைகள் என்ன?

image

ஒரு ஆப்பிள், ஒரு பீட்ரூட், 2 கேரட் இவைகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, ஜூசரில் போட்டு விழுதாக அரைத்து வடிகட்டினால் ABC ஜூஸ் தயாராகிவிடும். இது, இயற்கை நச்சு நீக்கியாக செயல்பட்டு கல்லீரலை சுத்தப்படுத்த உதவும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மலச்சிக்கலைத் தடுத்து, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எனவும், நோய் எதிர்ப்பு சக்தி, இதய ஆரோக்கியம், உடல் ஆற்றலை மேம்படுத்தும் என்றும் பரிந்துரைக்கின்றனர்.

News June 30, 2024

இந்திய அணிக்கு ₹125 கோடி பரிசு அறிவிப்பு

image

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ₹125 கோடி பரிசு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், போட்டி முழுவதும் இந்திய அணி சிறப்பான உறுதிப்பாடு மற்றும் திறனை வெளிப்படுத்தியதாகவும், இந்த சாதனைக்கு துணை நின்ற அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News June 30, 2024

மத்திய அரசு ஊன்றுகோலில் நடக்கிறது: காங்கிரஸ்

image

மனதின் குரல் நிகழ்ச்சியில் மக்கள் பிரச்னைகளை பற்றி பிரதமர் மோடி ஏன் பேசவில்லை? என காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெரா கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசு ஊன்றுகோலில் நடந்து கொண்டிருப்பதால், பிரதமர் அறிவுப்பூர்வமாக பேசுவார் என்று எதிர்பார்த்ததாக கூறிய அவர், ஆனால், மக்கள் நலன் சார்ந்த எந்த விஷயங்களையும் பிரதமர் பேசவில்லை என்றார். மோடி 111ஆவது முறையாக இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார்.

News June 30, 2024

14 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். எனவே, வெளியே செல்வோர் மிக கவனமாக செல்லவும்.

News June 30, 2024

லைக்-ஐ அள்ளி சாதனை படைத்த கோலி

image

டி20 உலகக் கோப்பை வெற்றி தொடர்பான கோலியின் பதிவு, இன்ஸ்டாவில் அதிகம் லைக் செய்யப்பட்ட இந்தியரின் பதிவு என்ற சாதனையை படைத்துள்ளது. டி20 உலகக் கோப்பையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “இதைவிட சிறந்த நாள் இருக்க முடியாது” என பதிவிட்டிருந்தார். இந்த பதிவு 16 மணி நேரத்தில் 16,394,870 லைக்குகளை பெற்றுள்ளது. நடிகை கியராவின் திருமண பதிவு 16.26M லைக்குகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளது.

error: Content is protected !!