India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
துணை ஜனாதிபதி வேட்பாளர் பரிசீலனையில் இதுவரை யாரும் இல்லை என ‘INDIA’ கூட்டணி தெரிவித்துள்ளது. NDA கூட்டணியில், CP ராதாகிருஷ்ணன் களமிறங்கியுள்ள நிலையில், வேட்பாளர் தேர்வில் ‘INDIA’ கூட்டணி தீவிரம் காட்டியுள்ளது. இதனிடையே, திமுக MP திருச்சி சிவா பரிசீலனையில் உள்ளதாக NDTV செய்தி வெளியிட்டது. அதனை மறுத்துள்ள ‘INDIA’ கூட்டணி, வேட்பாளருக்கான ஆலோசனை தொடர்வதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
‘நீங்கள் இதை படிக்கிறீர்கள் என்றால், நான் இறந்துவிட்டேன் என அர்த்தம். எனது மரணம் என் சொந்த முடிவு. ஓராண்டாக திட்டமிட்டு இந்த முடிவை எடுத்துள்ளேன்.’ நொய்டாவில் தற்கொலை செய்த மாணவர் சிவம் டே(24) எழுதிய வரிகள் இவை. மாணவன் 2 ஆண்டுகளாக கல்லூரிக்கு வரவில்லை எனவும், அதனை கல்லூரி நிர்வாகம் தங்களுக்கு தெரிவிக்கவில்லை என்றும் அவரது பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி தேர்வு சூடுபிடித்துள்ளது. அணி தேர்வு மும்முரமாக நடைபெற்று வரும் சூழலில், 15 பேர் கொண்ட அணியில், இன்னும் ஒரு வீரரை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியாமல் தேர்வு குழு திணறி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. அந்த இடத்திற்கான பரிசீலனையில் ஸ்ரேயஸ் ஐயர், ரிங்கு சிங், ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் உள்ளனராம். நீங்க சொல்லுங்க இவர்களில் யாரை டீமில் சேர்க்கலாம்?
தனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக சம்யுக்தா மேனன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தினமும் குடிப்பதில்லை, மன அழுத்தம் (அ) பதட்டம் ஏற்படும்போது மட்டுமே குடிப்பதாகவும் காரணம் கூறியுள்ளார். தனுஷின் ‘வாத்தி’ படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமான அவர், விஜய் சேதுபதியுடன் ஒரு படம், Benz படங்களில் நடித்து வருகிறார்.
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பெண்கள் ₹25 லட்சம் வரை தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, BC, MBC, சீர் மரபினர்(DNC) உள்ளிட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு கடன் வழங்கப்பட உள்ளது. ₹1.25 லட்சம் வரை வட்டி விகிதம் 7%, ₹1.25 லட்சம் முதல் ₹15 லட்சம் வரை வட்டி விகிதம் 8% எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடனை திருப்பிச் செலுத்தும் காலம் 3 முதல் 5 ஆண்டுகளாகும். SHARE IT.
NDA-வில் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், PM மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பு தொடர்பான போட்டோக்களை தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ள PM மோடி, நீண்ட ஆண்டுகால பொது சேவை மற்றும் அனுபவங்களை கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் செயல்படுவார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
OPS-ஐ NDA கூட்டணிக்கு பாஜகவினர் அழைக்க வேண்டுமெனவும், அமமுகவுடன் சேர்ந்து அவர் தேர்தலைச் சந்திப்பார் என்றும் <<17439124>>TTV தினகரன்<<>> கூறியிருந்தார். இந்நிலையில், கூட்டணி குறித்து பேச தன்னை யாரும் தொடர்புகொள்ளவில்லை என OPS கூறியுள்ளார். அதேநேரம், NDA துணை ஜனாதிபதி வேட்பாளருக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் தவெகவுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. OPS யாருடன் கூட்டணி வைக்கலாம்?
LIC நிறுவனத்தில் காலியாகவுள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு. வயது வரம்பு: 21 – 32. சம்பளம்: ₹88,635 – ₹1,69,025. தேர்வு முறை: முதல்நிலைத் தேர்வு (அக்.3), முதன்மைத் தேர்வு (நவ.8), நேர்காணல். விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்.8. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <
மளிகை பொருட்களை போல இனி நிலத்தையும் 10 நிமிடங்களில் வாங்கலாம். ZEPTO நிறுவனம், ரியல் எஸ்டேட்டிலும் கால் பதித்துள்ளது. அதாவது, தனியார் லேண்ட் டெவலப்பர் நிறுவனத்தோடு இணைந்து இந்த வசதியை தொடங்கவுள்ளது Zepto. ஏற்கெனவே 10 நிமிட மளிகை டெலிவரிக்கு எதிர்ப்புகள் இருக்கும் நிலையில் இந்த புதிய முன்னெடுப்பு என்ன மாதிரியான வரவேற்பை பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கணும். உங்கள் கருத்து?
தூய்மை பணியாளர்களின் பணி நிரந்தர விவகாரத்தில் திமுக கூட்டணிக்குள் மோதல் நிலவுகிறது. குப்பை அள்ளுபவர்களை பணி நிரந்தரம் செய்து அவர்களை குப்பை மட்டுமே அள்ள சொல்வதில் உடன்பாடு இல்லை என திருமாவளவன் தெரிவித்திருந்தார். இதனை எதிர்த்த சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம், பணி நிரந்தரம் என்பது சட்டப்பூர்வமான கோரிக்கை என வலியுறுத்தியுள்ளார். இதனால், கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. யாருடைய கருத்து சரி?
Sorry, no posts matched your criteria.