News July 1, 2024

சென்னை மெட்ரோவில் 29.8 கோடி பேர் பயணம்

image

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பயண தூரத்தை எளிதாக சென்றடைவதற்கு வசதியாகவும் மெட்ரோ ரயில் சேவைகள் 2015ல் கொண்டுவரப்பட்டது. தற்போது 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை 29 கோடியே 87 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் பத்து ஆண்டு நிறைவை முன்னிட்டு பயண அட்டை, கியூஆர் கோர்டு மூலம் பயணம் செய்தால் 20 சலுகை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

News July 1, 2024

இன்று முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்

image

நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட 3 புதிய குற்றவியல் சட்டங்களும் இன்று முதல் அமலுக்கு வரவுள்ளன. ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்ட IPC, CrPC, IEC ஆகிய 3 சட்டங்களுக்கு பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷியா அதிநியம் ஆகிய சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்தது. தவறு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில், இந்த சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

News July 1, 2024

இன்றைய பொன்மொழிகள்

image

* உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான். -மாவீரன் நெப்போலியன் * முட்டாள்கள் செய்யும் ஒரே புத்திசாலித்தனம் காதல், புத்திசாலிகள் செய்யும் ஒரே முட்டாள்தனம் காதல் -ஜார்ஜ் பெர்னாட்ஷா * நீ எந்த மாற்றத்தை விரும்புகிறாயோ? அதை உன்னில் இருந்தே தொடங்கு. – காந்தி * இருள் இருள் என்று சொல்லி கொண்டு சும்மா இருப்பதை விட, ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வை. – கன்ஃபூசியஸ்

News July 1, 2024

நீ தேர்வு முறைகேடு: குஜராத் பள்ளி உரிமையாளர் கைது

image

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக குஜராத் தனியார் பள்ளி உரிமையாளர் தீட்சித் பட்டேல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோத்ராவில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், அவருக்கு இதில் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. சில தினங்களுக்கு முன் ஜார்கண்டை சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News July 1, 2024

சூர்யாவின் கேட்ச் பற்றி குழந்தைகளுக்கு சொல்லுவேன்

image

T20 WC இறுதிப் போட்டியில் சூர்யகுமார் பிடித்த கேட்ச் போட்டியில் திருப்புமுனையாக அமைந்தது. அந்த கேட்ச் குறித்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோயின் பதிவு கவனம் ஈர்த்துள்ளது. அவர், எனது தந்தை கபில்தேவின் கேட்சை என்னிடம் பெருமையாகக் கூறினார், நான் என் குழந்தைகளுக்கு சூர்யாவின் கேட்சை பெருமையாகக் கூறுவேன் என குறிப்பிட்டுள்ளார். இதை பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார் SKY.

News July 1, 2024

ஜூலை 1 வரலாற்றில் இன்று!

image

➤ தேசிய மருத்துவர்கள் நாள் (இந்தியா)
➤ 1961 – இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா பிறந்த நாள்.
➤ 1963 – சிப் குறியீடுகள் ஐக்கிய அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டன.
➤ 1960 – இத்தாலியிடம் இருந்து சோமாலியா விடுதலை பெற்றது.
➤ 1949 – கொச்சி, திருவிதாங்கூர் சமஸ்தானங்கள் திருவாங்கூர்-கொச்சி என்ற ஒரே மாநிலமாக (பின்னாளில் கேரளம்) இணைந்தன. ஆயிரம் ஆண்டுகள் பழமையான கொச்சி இராச்சியம் முடிவுக்கு வந்தது.

News July 1, 2024

அசாம் வெள்ளத்தில் சிக்கி 34 பேர் பலி

image

அசாம் மாநிலத்தில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெல்ல நீரில் பல்வேறு கிராமங்கள் மூழ்கியுள்ள நிலையில், 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீரில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

News July 1, 2024

கொலையாளிகளின் வீடுகள் சூறை

image

கடலூரில் அதிமுக நிர்வாகி புஷ்பராஜ் (45) நேற்றிரவு ஒரு கும்பலால் நடுரோட்டில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைதான நிலையில் அவர்களது வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புஷ்பராஜின் ஆதரவாளர்கள் கைதான 3 பேரின் வீடுகளையும் அடித்து நொறுக்கியது தெரியவந்துள்ளது. முன்பகை காரணமாக மூவரும் புஷ்பராஜை அடித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

News July 1, 2024

T20 WC இறுதிப் போட்டியை 5.3 கோடி பேர் பார்த்துள்ளனர்

image

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான டி20 இறுதிப் போட்டியை ஹாட்ஸ்டார் தளத்தில் 5.3 கோடி பேர் பார்த்துள்ளனர் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற ODI WC இறுதிப் போட்டியை 5.9 கோடி பேர் பார்த்ததே அதிகபட்ச பார்வையாக உள்ளது. நேற்றைய T20 WC இறுதிப் போட்டியை டிவியில் எவ்வளவு பேர் பார்த்தனர் என்பது ஒரு வாரத்திற்குப் பின்னே தெரியவரும்.

News July 1, 2024

தினம் ஒரு திருக்குறள்!

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: அவாவறுத்தல் ▶ குறள் எண்: 370 ▶குறள்: ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும். ▶பொருள்: இயல்பாகவே எழும் அடங்காத பேராசையை அகற்றி வாழும் நிலை, நீங்காத இன்பத்தை இயல்பாகவே தரக்கூடியதாகும்.

error: Content is protected !!