News July 1, 2024

தமிழகத்தில் அதிகபட்சமாக 13 செ.மீ. மழை

image

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் வுட் பிரையர் எஸ்டேட், ஹரிசன் மலையாளம் லிமிடெட், வென்ட் வொர்த் எஸ்டேட், செருமுள்ளி ஆகிய பகுதிகளில் தலா 13 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், பந்தலூர் தாலுகா ஆஃபீஸ் பகுதியில் 6 செ.மீ., நடுவட்டம், தேவாலா, கூடலூர், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, கோவை மாவட்டம் சின்னக்கல்லார் ஆகிய பகுதிகளில் தலா 5 செ.மீ. மழை பெய்துள்ளது.

News July 1, 2024

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு ஏன்?

image

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் சிலருக்கு இச்சட்டங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தபோது அரசு அதனைக் கண்டுகொள்ளவில்லை. நாடாளுமன்ற அவைகளில் இச்சட்டங்களின் மீது ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெறவில்லை. சட்ட வல்லுநர்களின் கருத்துகளை கேட்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன.

News July 1, 2024

திருப்பதியில் மலிவு விலை உணவகங்கள்

image

திருமலை திருப்பதியில் பக்தர்களுக்காக மலிவு விலை உணவகங்கள் அமைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, தேவஸ்தான செயல் அலுவலரான ஷியாமளா ராவ், தாஜ் குழுமம் மற்றும் இந்திய சமையல் நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பக்தர்களுக்கு நியாயமான விலையில் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் சுவையான உணவு வழங்குவதே, தேவஸ்தானத்தின் குறிக்கோள் என, அவர் தெரிவித்தார்.

News July 1, 2024

RCB அணியின் பேட்டிங் கோச் DK

image

ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் செயல்படுவார் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. நடந்து முடிந்த ஐபிஎல் தொடருடன் தினேஷ் கார்த்திக் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இதனையடுத்து அவருக்கு RCB நிர்வாகம் புதிய பொறுப்பு வழங்கியுள்ளது. இந்தாண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக அவர் சிறப்பாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

News July 1, 2024

புதிய கிரிமினல் சட்டங்களில் என்னென்ன மாற்றம்? (3/3)

image

நேற்று வரை அமலில் இருந்த இந்திய சாட்சிகள் சட்டத்தில் (IEA) 166 பிரிவுகள் இருந்தன. ஆனால் அதற்குப் பதில் இன்று முதல் அமலாகியுள்ள பாரதிய சாக்ஸ்யா அத்னியம் சட்டத்தில் (BSA) 170 பிரிவுகள் உள்ளன. புதிய சட்டத்தில் பழைய சட்டத்தின் 24 பிரிவுகளில் திருத்தம் செய்யப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளன. பழைய சட்டத்தின் 6 பிரிவுகள் நீக்கப்பட்டு புதிதாக 2 துணைப் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

News July 1, 2024

புதிய கிரிமினல் சட்டங்களில் என்னென்ன மாற்றம்? (2/3)

image

நேற்று வரை அமலில் இருந்த குற்றவியல் நடைமுறை சட்டத்தில் (CrPC) 484 பிரிவுகள் இருந்தன. அச்சட்டத்துக்கு பதில் இன்று முதல் அமலாகியுள்ள பாரதிய நகரிக் சுரக்சா சன்கிதா (BNSS) சட்டத்தில் 531 பிரிவுகள் உள்ளன. முந்தைய சட்டத்திலிருந்த 177 பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கூடுதலாக 9 பிரிவுகள், 39 துணைப் பிரிவுகள் சேர்க்கப்பட்டு, பழைய சட்டத்தில் இருந்த 14 பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன.

News July 1, 2024

புதிய கிரிமினல் சட்டங்களில் என்னென்ன மாற்றம்? (1/3)

image

இந்திய தண்டனையியல் சட்டத்தில் (IPC) 511 பிரிவுகள் இருந்தன. அதற்கு பதில் இன்று முதல் அமலாகியுள்ள பாரதிய நியாய சன்கிதா (BNS) சட்டத்தில் அப்பிரிவுகள் 358ஆக குறைக்கப்பட்டுள்ளது. 21 புதிய குற்றங்கள் சேர்க்கப்பட்டு, 41 குற்றங்களுக்கான சிறை தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது. 82 குற்றங்களுக்கான அபராதம் உயர்த்தப்பட்டு, 25 குற்றங்களுக்கு குறைந்தபட்ச சிறை தண்டனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

News July 1, 2024

அண்ணாமலைக்கு பவர் இல்லை: திருச்சி சூர்யா

image

தமிழக பாஜகவில் அண்ணாமலைக்கு பவர் இல்லை என்று அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார். கட்சியிலிருந்து யார் நிர்பந்தத்தால் நீக்கப்பட்டீர்கள் என்ற கேள்விக்கு, தமிழிசை, எல்.முருகன், கேசவ விநாயகம், கருப்பு முருகானந்தம், ராம சீனிவாசன் ஆகியோரே தன்னை நீக்கும்படி அழுத்தம் கொடுத்ததாகவும், கட்சியில் மூத்த தலைவர்களின் கைகளே ஓங்கியுள்ளது என்றும் அவர் பதிலளித்துள்ளார்.

News July 1, 2024

தற்காலிக பயிற்சியாளரான VVS லக்‌ஷ்மன்

image

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. புதிய பயிற்சியாளர் தேர்வு இன்னும் நிறைவடையாததால், ஜூலை 6ஆம் தேதி தொடங்கும் ஜிம்பாப்வே தொடருக்கு VVS லக்‌ஷ்மன் பயிற்சியளிக்கவுள்ளார். தற்காலிக ஏற்பாடாக அவர் ஜிம்பாப்வே செல்வார் என்று BCCI செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார். புதிய பயிற்சியாளர் இலங்கை சுற்றுப் பயணத்தின் போது இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 1, 2024

மக்களவையில் விவாதிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

image

புதிதாக நடைமுறைக்கு வந்துள்ள 3 குற்றவியல் சட்டங்கள் குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் அளித்துள்ளது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையே இந்த மூன்று சட்டங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே நீட் முறைகேடு குறித்து விவாதிக்க வலியுறுத்தி நாடாளுமன்றம் முடக்கப்பட்ட நிலையில், இன்றும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவார்கள் என்று தெரிகிறது.

error: Content is protected !!