India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மனிதர்கள் காலில் விழுந்து வணங்குவதை காணும்போது, அது சரியான முறைதானா என நம்மில் பலருக்கு கேள்வி எழுவதுண்டு. அதற்கு ஆன்மிகத்தில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அனைவரின் கால்களிலும் விழுந்து வணங்க வேண்டியதில்லை. பெற்றோர், பெரியோர், ஆன்மிகவாதிகள் கால்களில் விழுந்து பாதம் தொட்டு வணங்கலாம் என்றும், அப்படி வணங்கினால் அவரிடமுள்ள சக்தி நமக்கு கிடைக்கும் என்றும் ஆன்மிகம் தெரிவிக்கிறது.

அயோத்தி மேம்பாட்டு திட்டத்துக்காக மக்களிடம் பறிக்கப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை என மக்களவையில் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். வீரமரணம் அடையும் அக்னி வீரர்களுக்கு எந்த இழப்பீடும் அளிக்கப்படுவதில்லை என்றும், நீட் தேர்வு மூலம் மருத்துவக்கல்வியை பாஜக வியாபாரம் ஆக்கிவிட்டதாகவும் விமர்சித்துள்ளார். 7 ஆண்டுகளில் 70 முறை வினாத்தாள் கசிந்துள்ளதாகவும் சாடியுள்ளார்.

அதிமுக இணைப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் விரைவில் தொடங்கும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அதிமுக இணைப்புக்காக உரிய நேரத்தில் சசிகலாவை சந்திப்போம் என்ற அவர், தொண்டர்கள் பிரிந்து கிடப்பது, கட்சிக்கு நல்லதல்ல எனக் கூறியுள்ளார். முன்னதாக, அதிமுக இணைப்புக்காக எந்த தியாகமும் செய்ய தயார் என ஓபிஎஸ் அறிவித்திருந்த நிலையில், இபிஎஸ் இணைப்புக்கு ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய குற்றவியல் சட்டங்கள் நாடு முழுவதும் இன்று அமலுக்கு வந்தன. இந்த புதிய சட்டங்கள், ஆங்கிலேய ஆட்சியில் இந்தியர்களை ஒடுக்க கொண்டு வரப்பட்ட ரவுலட் சட்டத்திற்கு நிகரானது என ஹைதராபாத் எம்பி அசாதுதின் ஓவைசி விமர்சித்துள்ளார். மேலும், உபா சட்டத்தை விட ஆபத்தானது என்றும், இதன் மூலம் அரசை எதிர்க்கும் யாரை வேண்டுமானாலும் தீவிரவாதி என முத்திரை குத்த முடியும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் பாஜகவோ, மோடியோ பிரதிநிதிகள் அல்ல என மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார். இந்துக்கள் குறித்த பேச்சுக்கு ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த ராகுல், இந்து மதம் வெறுப்பை போதிக்கவில்லை எனவும், ஆனால், பாஜகவினர் 24 மணி நேரமும் வெறுப்பை மட்டுமே பரப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பையை வென்ற நிலையில், இந்திய கிரிக்கெட் அணி நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பார்படாஸ் தீவுக்கு ‘பெரில்’ புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இதனால், விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், இந்திய அணியின் வீரர்களால் நாடு திரும்ப முடியவில்லை. இதன் காரணமாக, இந்திய அணியை தனி விமானத்தில் டெல்லி அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

மோடிக்கு பயந்து பாஜகவினர் தனக்கு வணக்கம் கூட சொல்வதில்லை என மக்களவையில் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். வணக்கம் கூறினால், மோடி நடவடிக்கை எடுப்பாரோ என பாஜக தலைவர்கள் அஞ்சி நடுங்குவதாக தெரிவித்த அவர், அந்த அளவுக்கு மோடி பாஜக தலைவர்கள் மிரட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து பேசிய மோடி, எதிர்க்கட்சி தலைவரான ராகுலை தான் பெரிதும் மதிப்பதாக கூறியுள்ளார்.

சர்வதேச மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஆண்டில் 3 வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சதமடித்த முதல் வீராங்கனை எனும் சாதனையை SA கேப்டன் லாரா வோல்வார்ட் படைத்துள்ளார். இந்தாண்டில் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு எதிரான டி20, ஒருநாள் போட்டிகளில் சதமடித்த அவர், தற்போது சென்னையில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் (122) சதமடித்து வரலாறு படைத்துள்ளார்.

பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின்கீழ் ஏழைப் பெண்களுக்கு ₹300 மானியத்துடன் ₹529 விலையில் சமையல் கேஸ் சிலிண்டர் வழங்கப்படுகிறது. இதைப் பெற விரும்பும் பெண்கள், 18 வயது பூர்த்தியானவராக, வீட்டில் வேறு சிலிண்டர் இணைப்பு இல்லாதவராக இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, எம்பிசி, அந்தியோதயா அன்னயோஜனா பயனாளிகள், தேயிலை தோட்ட பழங்குடியினர், வனவாசிகள், தீவுப் பகுதி மக்கள் விண்ணப்பிக்கலாம்.

அதையடுத்து பெயர் அல்லது பகுதி வாரியாக கேஸ் ஏஜென்சியை தேர்வு செய்து, அதிலுள்ள விண்ணப்பத்தில் ஆதார் எண், பெயர், வங்கி எண் உள்ளிட்டவற்றை பூர்த்தி செய்து, அடையாள ஆவணம், முகவரி ஆவணம், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து ஒப்புதல் அளிக்க வேண்டும். இதன்பிறகு அந்த விண்ணப்பம் கேஸ் டீலருக்கு அனுப்பப்படும். அதற்கு ஒப்புதல் பெறப்பட்ட பின், குறைந்த விலையில் கேஸ் சிலிண்டரை பெறலாம்.
Sorry, no posts matched your criteria.