India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை உள்ளடக்கிய தனது கனவு அணியை கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே அறிவித்துள்ளார். ரோகித் சர்மா (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ், நிக்கோலஸ் பூரன், சூர்யகுமார் யாதவ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஹென்ரிச் கிளாசென், பாண்டியா, ரஷித் கான், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

புங்க மரத்தின் இலை, பூ, காய், விதை, வேர் என அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது என சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. இவை சரும நோய்களைப் போக்கும் மிகச் சிறந்த மருந்தாகும். புங்கம் வேர்பட்டைச் சாறு (புங்கம் பால்) உடலை பலப்படுத்த உதவுகிறது. புங்கம் பூவை நிழலில் உலர்த்தி நெய்யில் வறுத்து பொடி செய்து அரை தேக்கரண்டி காலை, மாலை என 3 மண்டலம் தேனில் கலந்து சாப்பிட்டு வர 20 வகை சரும நோய்கள் குணமாகும்.

இணைய அடிமைத்தனத்தை தீவிர பிரச்னையாக மருத்துவர்கள் கருதுகின்றனர். போதைப் பழக்கத்தைப் போலவே, லைக்ஸ் பெற வீடியோவை பகிர்வது மூளை செயல்பாடுகளை தீவிரமாக பாதிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. புனேவில் உள்ள பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வில், 16.26% மாணவர்கள் மட்டுமே இணையத்தால் பாதிக்கப்படாமல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இணையத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

தமிழ்நாட்டில் அனைத்து வகையான வணிக கட்டடங்களுக்கும், கட்டட முடிவு சான்றிதழ் கட்டாயம்
என்ற நடைமுறையால், சிறு வணிகர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில், சிறு வணிகர்களின் நலன் கருதி, 300 சதுர மீட்டர் மொத்த கட்டட பரப்பளவிற்குள் 14 மீட்டர் உயரத்திற்குள் அமையும் கட்டடங்களுக்கு, இந்த சான்றிதழ் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக,
தமிழக அரசு அறிவித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கரெளலி – மாண்ட்ராயல் சாலையில் பொலிரோ வாகனம் மீது எதிரே வந்த டிரக் நேருக்கு நேர் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயமடைந்த 4க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து முழு தகவல் தெரியவராத நிலையில், இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகை சுனைனா தனக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்ததாகவும், வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி எனவும் கூறியிருந்தார். இதை தொடர்ந்து, சுனைனாவை மணம் முடிக்க போகும் மணமகன் யார்? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வந்தனர். இந்நிலையில், துபாயைச் சேர்ந்த பிரபல யூடியூபரான கலித் அல் அமேரியை சுனைனா திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறதாம்.

ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஆகிய நிறுவனங்கள் ரீசார்ஜ் சேவை கட்டணத்தை அதிரடியாக உயர்த்திய நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் கட்டணத்தை குறைத்து, புதிய பிளானை அறிவித்துள்ளது. அதன்படி, பிஎஸ்என்எல் ரூ.249க்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. புதிய திட்டம் 45 நாட்களுக்கு நீடிக்கும். மொத்தம் 90ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 2ஜிபிக்கு சமம். ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் வழங்கப்படும்.

உலகக் கோப்பையில் ரோஹித் ஷர்மாவின் செயல்பாடு சிறப்பாக இருந்ததாக பாக்., முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி பாராட்டியுள்ளார். ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாடுவதன் மூலம் கீழ் வரிசை பேட்ஸ்மேன்கள் நம்பிக்கையுடன் எதிரணி வீரர்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார். பாக்., கிரிக்கெட் வாரியம் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்ற அவர், வீரர்கள் தேர்வே வெற்றிக்கான முதல் காரணம் எனக் கூறியுள்ளார்.

குழந்தைகளை சாப்பிட வைப்பது முதல் தூங்க வைப்பது வரை செல்ஃபோன் தேவையாக இருக்கிறது. ஆனால், 0 – 2 வயதுடைய குழந்தைகளுக்கு ஃபோன் காண்பிக்க கூடாது என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்துகிறது. காரணம், அவர்களின் மூளை நன்கு வளர்ச்சியடையும் காலம் அது. 2 வயதுக்கு மேல் 1 மணி நேரம் செல்ஃபோன் கொடுக்கலாம். இந்த நேரம் அதிகமாகும்போது, குழந்தைகளின் வளர்ச்சிதை மாற்றத்தில் பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள்.

தமிழகத்தில் சமூக நீதியைக் காக்க சாதிவாரி கணக்கெடுப்பு தேவை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசை பாமக வலியுறுத்த வேண்டுமானால், திமுகவுக்கு ஆட்சி எதற்கு? என்று கேள்வி எழுப்பிய அவர், வன்னியர்களுக்கு திமுக தொடர்ந்து துரோகம் இழைப்பதாக விமர்சித்துள்ளார். தமிழக அரசு இதில் நல்ல முடிவு எடுக்கவில்லை என்றால், பாமக போராட்டம் நடத்தும் என எச்சரித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.