News July 2, 2024

இன்று பதிலளிக்கிறார் பிரதமர் மோடி

image

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனைத் தொடர்ந்து, இன்று பிரதமர் மோடி பதிலளிக்கவுள்ளார். மதிய உணவு இடைவேளைக்குப் பின் மக்களவையில் பிரதமர் பதிலளிப்பார் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

News July 2, 2024

காலை உணவை தவிர்ப்பது நல்லதா?

image

பணிச்சுழல், நிதிநிலைமை உள்ளிட்ட காரணத்தினால் சிலர் காலை உணவை தவிர்த்து விடுவார்கள். இது நல்லதா, கெட்டதா என கேள்வி எழுவதுண்டு. ஆனால், காலை உணவை நிச்சயம் தவிர்க்கக் கூடாது என்றும், இதனால் உடலில் பல மோசமான விளைவுகள் ஏற்படும், அல்சர் ஏற்பட வாய்ப்புண்டு என்றும், உடலின் சர்க்கரை அளவு குறையும், நமது முடிவெடுக்கும் திறன் பாதிக்கப்படும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

News July 2, 2024

பள்ளி, கல்லூரிகளில் தமிழ்வழி கல்வி: முதல்வருக்கு பரிந்துரை

image

பள்ளி, கல்லூரியில் நுழைவுத் தேர்வு நடத்த கூடாது என்று அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி முருகேசன் குழு தனது அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் நேற்று சமர்ப்பித்தது. மேலும், பள்ளிக்கல்வியில் தமிழை முதல் மொழியாக முதன்மைப்படுத்த வேண்டும். தொடக்க நிலை வகுப்பு முதல், பல்கலைக்கழக நிலை வரை தமிழ்வழி கல்வியை வழங்க வேண்டும். தமிழ் கற்பித்தல் தொடர்பான ஆராய்ச்சி பிரிவை அமைக்கவும் பரிந்துரைத்துள்ளது.

News July 2, 2024

நாளை கடைசி: மத்திய அரசில் வேலை

image

இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள 320 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 3) கடைசி நாளாகும். Navik & Yantrik பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் இதற்கு இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 18 – 22. கல்வித் தகுதி: +2, Diploma தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 3. இணையதளம்: <>joinindiancoastguard.cdac.in<<>>

News July 2, 2024

தலைமை ஆசிரியர்களுக்கு நாளை வரை அவகாசம்

image

முதல்வர் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களின் விவரங்களை, இணையத்தில் பதிவேற்றுவதற்கான அவகாசம் நாளையுடன் (ஜூலை 3) முடிவடைகிறது. 2024-25 கல்வியாண்டில், 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 21இல் திறனாய்வுத் தேர்வு நடைபெற உள்ளது. முன்னதாக இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்போரின் விவரங்களை, ஜூன் 21-26 வரை பதிவேற்ற தலைமை ஆசிரியர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

News July 2, 2024

கடலுக்கு செல்ல வேண்டாமென மீனவர்களுக்கு எச்சரிக்கை

image

வங்கக்கடலில் இன்று முதல் 5ஆம் தேதி வரை பலத்த சூறாவளி வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 65 கி.மீ. வேகத்திலும், இதேபோல் தெற்கு, மத்திய, வடக்கு வங்கக்கடலில் 4, 5ஆம் தேதிகளில் 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளி வீசக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News July 2, 2024

இணையத்தில் லீக் ஆகும் கல்கி படக்காட்சிகள்

image

பிரபாஸ், அமிதாப், தீபிகா நடிப்பில் உருவாகியிருக்கும் கல்கி திரைப்படம் உலகம் முழுவதும் ₹500 கோடி வசூலைக் கடந்திருக்கிறது. இந்நிலையில் படத்தின் சில காட்சிகள் இணையதளத்தில் வெளியாகியிருப்பதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர். அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கல்கி திரைப்படம் எங்களது நான்காண்டு கால உழைப்பு. அதனை செல்ஃபோன்களில் படம் பிடிக்க வேண்டாம்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.

News July 2, 2024

தீபாவளிக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்

image

இந்தாண்டு தீபாவளி பண்டிகை அக்.31ஆம் தேதி வருகிறது. இதையொட்டி, அக்.28, 29ஆம் தேதிகளுக்கான ரயில் டிக்கெட்டுகளுக்கு கடந்த 2 நாள்களாக முன்பதிவு நடைபெற்றது. முன்பதிவு காலை 10 மணிக்கு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. தொடர்ந்து, இன்று அக்.30ஆம் தேதிக்கான முன்பதிவு தொடங்குகிறது. இன்றே கடைசி நாள் என்பதால் டிக்கெட் புக் செய்பவர்கள் தயாராக இருங்கள்.

News July 2, 2024

அண்ணாமலை தலைவராக நீடிப்பார்?

image

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 4 மாத சான்றிதழ் படிப்புக்காக லண்டன் செல்ல உள்ளதால், அவர் தலைமை பொறுப்பிலிருந்து விலக உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அவர் லண்டனில் தங்கி படித்தபடியே தலைமை பணியை கவனிப்பார் எனத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 12 அரசியல் தலைவர்களை படிக்க அழைப்பு விடுத்துள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் செப்.2ஆம் தேதி இதற்கான வகுப்புகள் தொடங்குகின்றன.

News July 2, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

* டெல்லியில் என்டிஏ எம்பிக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
* 300 ச.மீ மொத்த கட்டட பரப்பளவிற்குள் அமையும் கட்டடங்களுக்கு, கட்டட சான்றிதழ் பெறுவதிலிருந்து விலக்கு.
* நில அபகரிப்பு செய்ததாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு
* தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யுமாறு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.

error: Content is protected !!