News July 2, 2024

ரோகித் தாயாரின் பதிவு வைரல்

image

டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 17 ஆண்டுகளுக்கு பிறகு டி20-யில் கிடைத்த வெற்றி என்பதால் நாடே கொண்டாடி தீர்த்தது. இந்நிலையில், ரோகித் ஷர்மாவின் தாயார் பூர்ணிமா, ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது. ‘தோளில் அவன் மகள் இருக்கிறாள். அவன் பின்னால் தேசமே இருக்க, சகோதரன் அருகில் நிற்கிறான்’ என்ற அந்த பதிவு லைக்ஸை குவித்து வருகிறது.

News July 2, 2024

ஓபிஎஸ் உருக்கமாக இரங்கல்

image

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மன வேதனை அடைந்தேன் என ஓபிஎஸ் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்களின் சம உரிமைக்காக பாடுபட்ட சம்பந்தனின் மறைவு, ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பினைச் சேர்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என கூறியுள்ளார்.

News July 2, 2024

2ஆவது வாரிசாக குழந்தையை தத்தெடுக்கலாமா?

image

1956 இந்து தத்தெடுப்பு, பராமரிப்பு சட்டத்தில் குழந்தை தத்தெடுப்பு குறித்து கூறப்பட்டுள்ளது. அதில், ஒருவர் இந்து மதத்தினராக இருந்து, அவருக்கு குழந்தை அல்லது பேரக் குழந்தை இருந்தால், இன்னொரு குழந்தையை தத்தெடுக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தத்தெடுக்க விரும்பும் நபருக்கும், அவர் தத்தெடுக்கும் வாரிசுக்கும் குறைந்தது 21 வயது வித்தியாசம் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

News July 2, 2024

ஆந்திரா-தெலங்கானா முதல்வர்கள் சந்திப்பு?

image

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை வரும் 6ஆம் தேதி சந்தித்து பேச உள்ளார். இது தொடர்பாக அவர், ரேவந்த் ரெட்டிக்கு எழுதிய கடிதத்தில், மாநிலப் பிரிவினையால் எழுந்த பிரச்சனைகள், இரு மாநிலங்களும் இணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியம் பற்றி ஆலோசிக்க உள்ளதாகக் கூறியுள்ளார். இவர் காங்கிரசில் இணையும் முன்பு, தெதேக.யில் சந்திரபாபுவுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவராவார்.

News July 2, 2024

ஹீரோவாகும் பிக் பாஸ் வின்னர்

image

பிக் பாஸ் 5ஆவது சீசன் வெற்றியாளர் ராஜு ஜெயமோகன், ‘பன் பட்டர் ஜாம்’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தில் 2 கதாநாயகிகள் இருந்தாலும், இது காதல் கதை அல்ல என இயக்குநர் ராகவ் கூறியுள்ளார். மேலும், புது முயற்சிகளுக்கு தமிழ் ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு தருவதாகவும், இளைய தலைமுறையின் சிக்கல்கள் குறித்து இப்படத்தின் கதை பின்னப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News July 2, 2024

அடுத்த பாஜக தலைவர் யார்? தமிழிசை மறுப்பு

image

உயர் கல்விக்காக அண்ணாமலை லண்டன் செல்வதால், அவருக்கு பதில் தமிழிசை தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியானது. இது குறித்து அவரிடன் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அப்படி எதுவும் இல்லை” என்று மறுப்பு தெரிவித்தார். மேலும், இந்துக்கள் என்றாலே வன்முறையாளர்கள் என ராகுல் விமர்சித்தது கண்டிக்கத்தக்கது எனக்கூறிய அவர், தமிழ்நாட்டின் 40 எம்பிக்களால் எந்த பயனும் இல்லை என விமர்சித்துள்ளார்.

News July 2, 2024

அடுத்த 6 மாதத்திற்கு திரைப்பட ரசிகர்களுக்கு கொண்டாட்டம்

image

ஜூலை – டிசம்பர் வரை அடுத்தடுத்து பல பிரமாண்ட படங்கள் வெளியாகவுள்ளன. அதாவது, இந்தியன் 2, ராயன், தேவாரா 1, புஷ்பா 2, கேம் சேஞ்சர், அமரன், கங்குவா, சிங்கம் ஏகெய்ன், தங்கலான், கோட், வேட்டையன், விடாமுயற்சி, தி ரூல், டெட்பூல் அன்ட் வோல்வரின், ஜோக்கர் 2, வெனம் தி லாஸ்ட் சான்ஸ் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளன. இதனால் அடுத்த 6 மாதங்களுக்கும் திரைப்பட ரசிகர்களுக்கு கொண்டாட்டம் காத்திருக்கிறது.

News July 2, 2024

சென்னை: புதிய சட்டத்தின் கீழ் முதல் வழக்கு, கைது

image

அசாமை சேர்ந்த அப்தாப் அலி, தனது சகோதரனுடன் பெரம்பூரில் நேற்றிரவு சென்று கொண்டிருந்த போது கையிலிருந்த செல்போனை 2 பேர் பறித்துச் சென்றனர். அவர் அளித்த புகாரின் பேரில் ஆயிரம் விளக்கு போலீசார், BNS சட்டம் 304(2) பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதேபாேல், நடேசன் சாலையை சேர்ந்த சாரதியை, பெண்கள் குளித்ததை வீடியோ எடுத்ததாக 77ஆவது பிரிவின்கீழ் ஐஸ் அவுஸ் போலீசார் கைது செய்தனர்.

News July 2, 2024

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஜவாஹிருல்லா கண்டனம்.

image

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது எழுந்த பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த அவரது பதவிக்காலத்தை, ஓராண்டு பணி நீட்டிப்பு செய்து தமிழக ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். இதற்கு, மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

News July 2, 2024

சிக்கனை சக்கை போடு போடும் இந்தியர்கள்

image

தேசியளவில் அதிகம் உட்கொள்ளப்படும் மாமிசமாக கோழிக்கறி உள்ளது. அசைவம் உண்போரில் சுமார் 51.14% பேர் கோழிக்கறியைதான் விரும்பி உண்பதாக கால்நடை பராமரிப்புத்துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எருமை மாட்டுக்கறி – 17.61%, வெள்ளாட்டுக் கறி – 14.47%, செம்மறி ஆட்டுக்கறி – 10.51%, பன்றி இறைச்சி – 3.85%, மாட்டு இறைச்சி – 2.43% என்ற அடிப்படையில் மாமிச நுகர்வு இருக்கிறது.

error: Content is protected !!