India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட இருமடங்கு அதிகம் பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூலை ஒன்றாம் தேதி வரை சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 5.39 செ.மீ. மழை பதிவாகி வருகிறது. ஆனால், இந்த ஆண்டு 11 செ.மீ. மழை பெய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 110% அதிகம் ஆகும்.

திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே அரசுப் பேருந்தில் பயணிக்க ₹50 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக ₹56 வசூலிக்கப்படுவதால் நடத்துநர்கள், பயணிகள் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. அதிகாரிகள் சொல்வதைதான் தாங்கள் செய்வதாக நடத்துநர்கள் கூறுகின்றனர். PPR எனப்படும் Point-to-Point பேருந்துகளில்தான் ₹56 வசூலிக்கப்படுவதாக பணிமனை அதிகாரிகள் விளக்கமளிக்கின்றனர்.

நாடு முழுவதும் சராசரியாக ஒருநாளைக்கு மேற்கொள்ளும் UPI பரிவர்த்தனை கடந்த ஜூன் மாதத்தில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த மே மாதம் UPI பரிவர்த்தனை எண்ணிக்கை 45.3 கோடியாக இருந்தது. அது ஜூன் மாதத்தில் 46.3 கோடியாக உயர்ந்து உச்சம் தொட்டுள்ளது. இதேபோல் கடந்த மே மாதம் நாள்தோறும் சராசரியாக ₹65,966 கோடியாக இருந்த பரிவர்த்தனை மதிப்பு, ஜூன் மாதத்தில் ₹66,903 கோடியாக அதிகரித்துள்ளது.

தெலுங்கில் ‘குண்டுர் காரம்’ படத்தில் மகேஷ்பாபுவுடன் இணைந்து ‘குர்ச்சி மடதாபெட்டி’ பாடலில் நடிகை ஸ்ரீலீலா (23) போட்ட குத்தாட்டம் உலக அளவில் வைரலானது. இந்நிலையில், சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தமிழில் ஒரு நல்ல வாய்ப்பிற்காக காத்திருப்பதாகவும், தற்போது Medicine படித்து வருவதாகவும் கூறியுள்ளார். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த ஸ்ரீலீலாவின் தாயார் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற வளாகத்தில் NDA எம்.பிக்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பிரதமர் மோடி, நாட்டு மக்களின் வளர்ச்சியே நமது குறிக்கோள் என்றும், தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்கள், இதனை உணர்ந்து செயல்படுமாறும் கேட்டுக்கொண்டார். நாடாளுமன்ற மரபுகள், விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். இதன்பின், பிரதமரின் வழிகாட்டுதல்படி செயல்படுவதாக, எம்.பிக்கள் உறுதியளித்தனர்.

ஜியோ, ஏர்டெல், வோடாஃபோன் நிறுவனங்கள் அவற்றின் கட்டணத்தை 25% வரை உயர்த்தியுள்ளன. இதில் ஜியோ, ஏர்டெல் கட்டண உயர்வு நாளை முதலும், வோடாஃபோனின் கட்டண உயர்வு நாளை மறுநாள் முதலும் அமலுக்கு வருகின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் விலகிச் செல்லாமல் இருக்கவும், தக்க வைக்கவும் பழைய மாத ரீசார்ஜை கணக்கிட்டு 365 நாள் வேலிடிட்டியுடன் ₹2,545, ₹3,099 திட்டங்களை 3 நிறுவனங்களும் அறிவித்துள்ளன.

மக்களவையில் நேற்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் மீது பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி, பாஜகவை கடுமையாக விமர்சித்தார். தனது கையில் சிவன் புகைப்படத்தை ஏந்தி அவர் பேசினார். இதையடுத்து ராகுலை விமர்சித்து, எக்ஸ் தளத்தில் Shame என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. சிவன் படத்தைப் போல பிற மத கடவுள் படத்தை ராகுல் எடுத்து வந்து காட்டுவாரா என விமர்சிக்கப்படுகிறது.

ஆடி மாதத்தில், மூத்த குடிமக்களை, சென்னை தஞ்சை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய மண்டலங்களில் உள்ள அம்மன் கோயில்களுக்கு இலவசமாக ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. விரும்பமுள்ள 60 வயதுக்கும் மேற்பட்டோர் http://hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் சென்றும் விண்ணப்பிக்கலாம்.

ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே நாட்டுக்கு இன்று காலை கிளம்பியது. அங்கு, ஜூலை 6ஆம் தேதி தொடங்கும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த அணிக்கு விவிஎஸ்.லக்ஷ்மண் தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முழுக்க முழுக்க இளம் வீரர்களை நம்பி களம் இறங்கும் அணி, வெற்றி வாகை சூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷங்கர் இயக்கியுள்ள ‘இந்தியன் 2’ வருகிற 12ஆம் தேதி வெளியாக உள்ளது. அந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ஷங்கர், தான் அடுத்ததாக வரலாற்று சிறப்பு மிக்க படம், 2012 என்ற பெயரில் அறிவியல் புனைவு மற்றும் ஜேம்ஸ் பாண்ட் மாதிரியான அதிரடி ஆக்ஷன் படம் உள்ளிட்ட 3 படங்களை இயக்க உள்ளதாக கூறியுள்ளார். மேலும், இம்மூன்று படங்களுமே பெரிய பட்ஜெட்டில் உருவாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.