India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘ராயன்’ வருகிற 26ஆம் தேதி வெளியாக உள்ளது. சந்தீப் கிஷன், எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தனுஷின் 50ஆவது படம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வருகிற 6ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவின் போது வாக்களர்களுக்கு மை வைப்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. அதாவது, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவின் போது வைக்கப்பட்ட மை அழியாமல் இருந்தால், அவர்களுக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவின் போது இடது கை ஆள்காட்டி விரலுக்கு பதில் இடது கை நடு விரலில் மை வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் ஷாருக் கானுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற அவர், ‘எந்திரன்’ படத்திற்குப் பிறகு வேறு சில படங்களுக்காக ஷாருக் கானை சந்தித்ததாகவும், ஆனால், எதுவும் கைகூடவில்லை என்றும் கூறியுள்ளார். ஷாருக் கானுக்கு பொருத்தமான ஸ்கிர்ப்ட் வந்தால், எப்போது வேண்டுமானாலும், அவரை வைத்து படம் இயக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பிரேசிலில் கடந்த மே மாதம் முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, தெற்கு மாகாணமான ரியோ கிராண்டே டோ சுல் நகரில் இடைவிடாமல் மழை கொட்டித் தீர்க்கிறது. இதனால் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டதில் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 179 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காணாமல் போன 56 பேரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்துக்கு 65 பேர் பலியான நிலையில், 229 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை கண்டித்து இபிஎஸ் தலைமையில் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதையடுத்து டெல்லிக்கு விரைவில் இபிஎஸ், அதிமுக மூத்த தலைவர்கள் செல்ல திட்டமிட்டிருப்பதாகவும், குடியரசுத் தலைவர் முர்மு, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து சிபிஐ விசாரணை கோரி மனு அளிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் பயன்படுத்தக்கூடிய குடிநீர் பாட்டிலில் 2.8 கோடி கிருமிகள் இருப்பதாக Water Filter Guru என்ற நீர் தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. பொதுவாக, கழிவறை இருக்கையில் 515 கிருமிகள் இருக்கும் எனவும், அதைவிட 40,000 மடங்கு அதிக கிருமிகள் குடிநீர் பாட்டிலில் இருந்ததாகவும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதனால், குடிநீர் பாட்டிலை தினமும் சுத்தம் செய்ய ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதும், பார்படாஸ் மைதான மண்ணை கேப்டன் ரோஹித் ஷர்மா எடுத்து சாப்பிட்ட வீடியோ வைரலானது. இதுகுறித்து ரோஹித் தற்போது விளக்கமளித்துள்ளார். தனது வாழ்நாள் முழுவதும் அந்த மைதானம், பிட்ச்சை மறக்க முடியாது என்றும், அதனால், அதன் சிறுபகுதியை தன்னுள் வைத்து கொள்ள விரும்பி சாப்பிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

செமஸ்டர் தேர்வுகளை ஒரே நேரத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை&அறிவியல் கல்லூரிகளுக்கும், கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக உத்தேச அட்டவணையை வெளியிட்டுள்ள இயக்ககம், செமஸ்டர் தேர்வுகளை நவம்பர் 4 முதல் நவம்பர் 30ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கவும், தேர்வு முடிவுகளை டிசம்பர் 21ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

தாமரையை மாற்றிவிட்டு புல்டோசரை தனது சின்னமாக பாஜக பயன்படுத்த வேண்டும் என கேரளாவைச் சேர்ந்த CPM மாநிலங்களவை எம்பி ஜான் பிரிட்டாஸ் விமர்சித்துள்ளார். கல்வி மூலம் புதிய கடந்த காலத்தை உருவாக்க பாஜக முனைவதாகவும், இனி வரலாற்றில் காந்தி காய்ச்சலில் இறந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கோட்சே வந்தார் என்று மாணவர்கள் படிப்பார்கள் எனவும் அவர் மாநிலங்களவையில் பேசியுள்ளார்.

அதிமுகவினரின் வாக்குகள் எதுவும் பாமகவுக்கு சென்றுவிடக் கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி மறைமுக உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நேற்றைய பிரசாரக் கூட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி, அதிமுகவினர் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்நிலையில், அதிமுகவின் தேர்தல் புறக்கணிப்பு முடிவில் தொண்டர்கள் உறுதியாக இருக்க வேண்டும் என்று இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.