News July 2, 2024

பழைய பிளானில் ரீசார்ஜ் செய்ய இன்றே கடைசி நாள்

image

ஏர்டெல் மற்றும் ஜியோ மொபைல் கட்டணம் நாளை முதல் விலை உயர்கிறது. ஆண்டு கட்டணம் ₹600 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில், பழைய திட்டத்தில் ரீசார்ஜ் செய்ய இன்றே கடைசி நாளாகும். விலை உயர்வில் இருந்து தப்பிக்க, பலரும் விலை உயர்வுக்கு முன்னதாக ரீசார்ஜ் செய்து வருகின்றனர். அதன்படி, தற்போதைய பிளான் முடிந்த உடன் புதிதாக ரீசார்ஜ் செய்த பிளான் ஆக்டிவேட் ஆகும்.

News July 2, 2024

எதிர்க்கட்சி எம்.பிக்கள் மீது சபாநாயகர் ஆவேசம்

image

மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டதால், பிரதமர் மோடி தனது உரையை பாதியில் நிறுத்தினார். இதை தொடர்ந்து, பிரதமர் பேசும் போது எதிர்க்கட்சி உறுப்பினர்களை அமைதி காக்க வேண்டுமென சபாநாயகர் ஓம் பிர்லா கடுமையாக கடிந்துக் கொண்டார். இதையடுத்து, பிரதமர் மோடி தனது உரையை தொடர்ந்து வருகிறார். இருப்பினும், எதிர்க்கட்சி எம்.பிக்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

News July 2, 2024

அமளியால் பேச்சை பாதியில் நிறுத்திய பிரதமர்

image

மக்களவையில் குடியரசுத்தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு, பிரதமர் மோடி பதிலளித்து வருகிறார். பிரதமர் பேசத் தொடங்கியதும், பாஜக எம்.பிக்கள், “மோடி, மோடி…” என ஆதரவு முழக்கம் எழுப்பினர். அதே நேரம், மணிப்பூர் பற்றி பிரதமர் பேசுமாறு, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், பிரதமர் பேச்சை பாதியில் நிறுத்தி, இருக்கையில் அமர்ந்தார்.

News July 2, 2024

வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

image

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 25 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில், தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்டிடவும், இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதற்கு முடிவுகட்டவும் மத்திய பாஜக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

News July 2, 2024

நாங்களும் இந்துக்கள் தான்: தாக்கரே

image

தங்களுடைய இந்துத்துவா புனிதமானது என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். ராகுல் காந்தி நேற்று தவறாக எதுவும் பேசவில்லை என கூறிய அவர், பாஜக மட்டுமே இந்துக்களின் பிரதிநிதி அல்ல எனவும், பாஜகவை சாராதவர்கள் நாடாளுமன்றத்தில் ஜெய் ஸ்ரீ ராம் என கூறுவது குற்றமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்துத்துவத்தை அவமதிப்பதை பொறுத்து கொள்ள மாட்டோம் என சிவசேனா UBT தலைவர் எச்சரித்துள்ளார்.

News July 2, 2024

விவசாயம் செய்வேன்: விஜய் ஆண்டனி

image

விஜய் ஆண்டனி நடிப்பில், ஒருவர் மழை பெய்யும்போது சந்திக்கும் பிரச்னைகளை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இதில் மறைந்த நடிகர் விஜயகாந்த், AI தொழில்நுட்பம் மூலம் தோன்ற உள்ளார். இந்நிலையில், AI தொழில்நுட்பத்தால் திரையுலகில் வேலையிழந்தால், விவசாயம் செய்வேன் என நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

News July 2, 2024

பள்ளியில் சாதி மோதல் குறித்து இபிஎஸ் கவலை

image

திருநெல்வேலியில் அரசுப்பள்ளியில் சாதி ரீதியான மோதல் காரணமாக 2 மாணவர்கள் காயமடைந்த சம்பவம் கவலை அளிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வேதனை தெரிவித்துள்ளார். சமூகநீதி என்று மேடையில் மட்டும் முதல்வர் பேசுவதாகவும், வெற்று விளம்பர வார்த்தைகளை கூறுவதை விடுத்து, பள்ளிகளில் சாதிப் பிரிவினைகளை ஒழிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

News July 2, 2024

15 நிமிடங்களில் ₹1 லட்சம் கடன்

image

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், 15 நிமிடங்களில் கடன் பெறும் வகையில், MSME என்ற புதிய திட்டத்தை SBI அறிமுகம் செய்துள்ளது. GST விற்பனை ரசீதுகளை ஆதாரமாகக் கொண்டு, இந்தத் திட்டத்தில் ₹1 லட்சம் வரை உடனடி கடன் வழங்கப்படுகிறது. GST பதிவு செய்த நிறுவனங்களின் மூலதன தேவைகளை தொடர்வதற்கான குறுகிய கால கடன்களை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கம். மேலும் விவரங்களுக்கு SBI வங்கியின் இணையதள முகவரியில் அறியலாம்

News July 2, 2024

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20: 3 வீரர்கள் சேர்ப்பு

image

இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி வரும் 6ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், முதல் 2 போட்டிகளில் சஞ்சு சாம்சன், சிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஷ்வால் ஆகியோருக்கு பதிலாக சாய் சுதர்சன், ஜிதேஷ் ஷர்மா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் இந்திய அணியில் இடம்பெறுவார்கள் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

News July 2, 2024

கெஜ்ரிவால் வழக்கில் சிபிஐக்கு நோட்டீஸ்

image

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், சிபிஐ தன்னை கைது செய்ததை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 2 நாள்களில் மறுமனு தாக்கல் செய்யவும், 7 நாள்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதை தொடர்ந்து, வழக்கு விசாரணையை ஜூலை 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

error: Content is protected !!