India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உலகின் மிக நீளமான சைக்கிளை நெதர்லாந்தைச் சேர்ந்த 8 பொறியாளர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். 180 அடி 11 அங்குலம் நீளமுள்ள இந்த சைக்கிள், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. டச்சு பொறியாளர்கள் குழுவின் தலைவரான இவான் ஷால்க் (39) தனது சிறு வயதில் இருந்தே இந்த நீளமான சைக்கிளை உருவாக்க வேண்டும் என கனவு கொண்டிருந்தார். அந்த கனவை இப்போது அவர் நனவாக்கியுள்ளார்.

தேசத்தின் வளர்ச்சிக்கு இணைந்து செயல்பட எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். மக்களவையில் 2.15 மணி நேரம் உரையாற்றிய அவர், 140 கோடி மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய ஒன்றாக இணைந்து உழைக்கலாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், தனது அரசும், குரலும் வலிமையாக இருப்பதாக கூறி நீண்ட உரையை முடித்துள்ளார். இதை தொடர்ந்து, பாஜக எம்.பிக்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர்.

மக்களவையில் ராகுல் காந்தி இந்துக்களை வன்முறையாளர்கள் எனக் கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென அமித்ஷா, மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் வலியுறுத்தினர். இது குறித்து பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “ராகுல் காந்தி பேசியதன் அர்த்தத்தை திசை திருப்பி, அவர் இந்துக்களுக்கு எதிரானவராக காண்பிக்க மோடியும், அமித்ஷாவும் முயற்சிக்கின்றனர்” என குற்றம் சாட்டியுள்ளார்..

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் கடந்த ஜூன் 27ஆம் தேதி வெளியானது. மாய உலகத்தில் நிகழும் பிரமாண்ட காட்சிகள் ரசிகர்களுக்கு நல்ல திரை அனுபவத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. வெளியான 5 நாள்களில் உலகம் முழுவதும் ₹500 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில், அசாத்தியமான முறையில் படமாக்கப்பட்டுள்ளதாக படக்குழுவை இயக்குநர் அட்லி மனதார பாராட்டியுள்ளார்.

நடப்பாண்டில் நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். குடியரசுத்தலைவர் உரை மீது நன்றி தெரிவித்து மக்களவையில் பேசிய அவர், இந்த விவகாரத்தில் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். மேலும், மாணவர்களின் எதிர்காலத்தில் குற்றம் இழைத்தவர்கள் ஒருபோதும் தப்ப முடியாது எனவும் அவர் உறுதி அளித்தார்.

நேரு அமைச்சரவையில் இருந்து அம்பேத்கர் விலகியது ஏன்? என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பிக்களின் கடும் அமளிக்கு மத்தியில், ஒரு மணி நேரத்திற்கு மேலாக உரையாற்றி வரும் அவர், அவசர நிலையின் போது ஊடகங்கள் ஒடுக்கப்பட்டு, ஜனநாயகம் காலில் போட்டு நசுக்கப்பட்டதாகவும், இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் காங்கிரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

கார்த்தி நடிப்பில் கடந்த 2017ல் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று, வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இப்படத்தின் இயக்குநர் எச்.வினோத், அடுத்து ‘தளபதி 69’ படத்தை இயக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், அதற்கடுத்து ‘தீரன் – 2’ இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கார்த்தி தற்போது, வா வாத்தியாரே, மெய்யழகன் படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக கைதி -2 நடித்து விட்டு, 2026ல் தீரனில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

நீட் தேர்வு குறித்து மக்களவையில் நாளை விவாதிக்க ஏற்பாடு செய்யுமாறு, பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார். கடந்த ஜூன் 28ஆம் தேதியே இது குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்க கோரியபோது, அது மறுக்கப்பட்டதாக கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 7 ஆண்டுகளில் 70 முறை வினாத்தாள் கசிந்துள்ளதாகவும், மாணவர்களுக்கு பதில்கள் வேண்டும் எனவும் ராகுல் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டு மக்கள் தொடர்ந்து 3ஆவது முறையாக காங்கிரஸ் கட்சியை எதிர்க்கட்சி வரிசையில் அமர வைத்துள்ளதாகவும், 100 தொகுதிகளை கூட வெல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். மக்களவையில் நேற்று ராகுல் காந்தி குழந்தைத்தனமாக நடந்துக்கொண்டதாக விமர்சித்த அவர், பள்ளி மாணவன் போல குறை சொல்வதாகவும், பாஜகவுடன் நேரடியாக மோதுவதில் காங்கிரசின் ஸ்ரைக் ரேட் 26%தான் எனவும் கூறியுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹாத்ராஸ் மாவட்டத்தில் உள்ள முகல்கர்ஹி கிராமத்தில், ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், ஏராளமானோர் பங்கேற்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 23 பெண்கள், 3 குழந்தைகள், ஒரு ஆண் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.