India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உத்தர பிரதேசத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் அதிகமானோர் பலியான நிகழ்வை அறிந்து வேதனை அடைந்ததாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மக்களவையில் இரங்கல் தெரிவித்த அவர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும், இந்த கோர சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 8ஆம் எண்ணின் ஆதிக்கம் கொண்டவர்கள் என எண் கணித ஜோதிடர்கள் கூறுகின்றனர். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் போட்டி மற்றும் லட்சிய ஆளுமைகளை கொண்டவர்களாக இருப்பார்கள் எனவும், எப்போதும் வெற்றி மற்றும் சாதனைக்காக பாடுபட்டு கொண்டே இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. 8ஆம் எண்ணுக்கு அதிபதி சனி என்பதால், தர்மத்தின் வழி நடப்பவர்களுக்கு சனி துணையாக நிற்பார் என்கிறார்கள்.

மணிப்பூரில் நடக்கும் அவலங்கள் 1947 பிரிவினையின்போது, நடந்த வன்முறைகளுக்குச் சமமானது என்று காங்கிரஸ் எம்.பி., அங்கோம்சா பிமோல் அகோய்ஜம் வேதனையுடன் கூறியுள்ளார். மக்களவையில் பேசிய அவர், மணிப்பூர் மக்களை முழுவதுமாக தனது உரையில் ஜனாதிபதி புறக்கணித்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன், இந்தியாவுக்கு மணிப்பூர் முக்கியம் இல்லை என்பதுபோல மத்திய அரசு நடந்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் பேட்ஸ்மேன்களைவிட பந்துவீச்சாளர்களின் கையே ஓங்கியிருந்தது. குறிப்பாக, எதிரணியின் பேட்ஸ்மேன்களை திணற வைக்கும் விதமாக இதுவரை இல்லாத அளவுக்கு 44 மெய்டன் ஓவர்கள் வீசப்பட்டுள்ளன. அதிகபட்சமாக பப்புவா நியூ கினியாவுக்கு எதிரான போட்டியில் நியூஸிலாந்து வீரர் பெர்குசன் 4 மெய்டன் ஓவரும், இந்திய வீரர்கள் பும்ரா & ஹர்திக் ஆகியோர் தலா 2 மெய்டன் ஓவரும் வீசியுள்ளனர்.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் திட்டத்தில், 1 கோடிக்கும் அதிகமானப் பெண்களுக்கு மாதம் ₹1000 வழங்கப்படுகிறது. இதில், விடுபட்டவர்களின் விவரம் சேகரிக்கப்பட்ட நிலையில், 1.48 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளதாகவும், ஜூலை 15 முதல் அவர்களது வங்கிக் கணக்கிலும் ₹1000 வரவு வைக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவை ஒரு நாள் முன்னதாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி இன்று பதிலுரை நிகழ்த்தினார். இதை தொடர்ந்து, மக்களவையை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்துள்ளார். நீட் மோசடி குறித்து சிறப்பு விவாதம் வேண்டுமென எதிர்க்கட்சி எம்.பிக்கள் வலியுறுத்திய நிலையில், அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில், 11 பேரிடம் சிபிசிஐடி போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளிவந்துள்ளன. சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் மெத்தனாலை, பன்சிலால், கவுதம் ஆகிய இருவரும் வெளிமாநிலத்தில் இருந்து வாங்கியதும், அதில் நீரை கலந்து விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. வழக்கு விசாரணைக்காக, இதுவரை யாருக்கும் சம்மன் அனுப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட்டில் ஜவான் படம் மூலம் கால் பதித்த இளம் இயக்குநர் அட்லி, அடுத்ததாக சல்மான் கானுடன் கூட்டணி சேரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு ஹீரோக்கள் நடிக்கும் வகையில் அதிரடி ஆக்சன் கதையம்சத்தில் உருவாகவுள்ள இந்தப் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவில்லை என்றும் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இம்மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீட் தேர்வு முறைகேடுகள் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் மாணவர் அணியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நீலகிரியில் நீட் தேர்வை சுவரெழுத்து பிரசாரத்தை மர்ம நபர்கள் சிலர் முன்னெடுத்துள்ளனர். அதில், “நீட்டை விலக்கு, இல்லையென்றால் தமிழகம் இந்தியாவை புறக்கணிக்கும்” என எழுதியுள்ளனர்.

இந்துக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென பிரதமர் மோடி எச்சரித்துள்ளார். மக்களவையில் உரையாற்றிய அவர், இந்துக்களை அவமதிப்பதை காங்கிரஸ் ஃபேஷனாக கருதுவதாகவும், இந்துக்களை டெங்கு, மலேரியாவுடன் திமுக ஒப்பிடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், சனாதனத்தை அவமதித்தது காங்., கூட்டணியில் உள்ள திமுகதான் என்றார். இதனிடையே, மணிப்பூருக்கு நீதி கேட்டு, எதிர்க்கட்சி எம்.பிக்கள் முழக்கம் எழுப்பினர்.
Sorry, no posts matched your criteria.