News July 2, 2024

நல்லாசிரியர் விருதுக்கு ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

image

தேசிய நல்லாசிரியர் விருது-2024 பெறுவதற்கு தகுதியான ஆசிரியர்கள், ஜூலை 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. <>இந்த <<>>இணையதளம் மூலம் ஆசிரியர்கள் தங்களது சுய பரிந்துரைகளை அனுப்பி விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் தேர்வாகும் 50 ஆசிரியர்களுக்கு, செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று குடியரசுத் தலைவர் விருது வழங்கி கெளரவிப்பது குறிப்பிடத்தக்கது.

News July 2, 2024

தமிழ்நாட்டில் 3 அதிநவீன பரிசோதனை கூடங்கள்

image

தமிழ்நாட்டில் 3 அதிநவீன பரிசோதனை கூடங்கள் அமைக்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதன்படி, ஆளில்லா விமானங்கள், மின்னணு ஆயுதங்கள் & எலக்ட்ரோ ஆப்டிக்ஸ் அதிநவீன பரிசோதனை கூடங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கு 75% நிதியை மத்திய அரசும் 25% நிதியை தனியார் நிறுவனங்கள் (Keltron உள்ளிட்டவை) & மாநில அரசும் வழங்குகின்றன.

News July 2, 2024

குரூப்-1 தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு

image

டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் -1 பதவிகளுக்கான (90 பணியிடங்களுக்கான) முதல்நிலை தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், குரூப் -1 தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் <>TNPSC<<>> என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வர்கள் தங்கள் ஓடிஆர் (One Time Registration) கணக்கு வாயிலாக ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

News July 2, 2024

சென்னையில் திருமண வரவேற்பு

image

நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் மும்பையைச் சேர்ந்த நிக்கோலாய் சச்தேவ்க்கு இன்று திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நாளை மாலை நடைபெற உள்ளதாக சரத்குமார் அறிவித்துள்ளார். மேலும் வரவேற்பு முடிந்து அதன் புகைப்படங்கள் ஜூலை 4ஆம் தேதி வெளியிடப்படும் எனவும், அனைத்து நிகழ்ச்சிகளும் நிறைவடைந்த பின்பு மணமக்களுடன் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

News July 2, 2024

முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல்

image

உத்தர பிரதேசத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியான நிகழ்வு, மிகுந்த வேதனையை அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபமும், படுகாயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த இக்கட்டான நேரத்தில் தமிழகம் துணை நிற்கும் என உறுதி அளித்துள்ளார்.

News July 2, 2024

வெளியானது யாஷ் நடிக்கும் புதிய பட அப்டேட்

image

பான் இந்தியா அளவில் மாபெரும் வெற்றி கண்ட ‘KGF’ படத்திற்கு பின் நடிகர் யாஷ் நடித்துவரும் படம் ‘டாக்சிக்’. நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் நடிக்கும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படம் 1950-1970 காலகட்டத்தை மையமாக கொண்டு போதைப்பொருளுக்கு எதிரான பின்னணியில் உருவாகும் ஆக்சன் படமாக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

News July 2, 2024

‘J’ என்ற எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்டவரா நீங்கள்?

image

‘J’ என்ற எழுத்தில் தொடங்கும் பெயரை கொண்டவர்கள் தன்னை முதன்மைப்படுத்திக் கொள்ளும் ஆற்றலும், அறிவும் கொண்டிருப்பார்கள் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். மன வலிமை, சுயமரியாதை, முடிவு எடுக்கும் திறன் கொண்டவர்கள் என்றும், இடம் & காலத்துக்கு ஏற்றார்போல், தன்னை தகவமைத்துக் கொள்ளும் தன்மையாளர்கள் என்றும் தெரிவிக்கின்றனர். ‘J’ என்ற எழுத்தில் பெயர் கொண்ட உங்கள் குடும்பத்தினர், நண்பர்களுக்கு இதை பகிருங்கள்.

News July 2, 2024

யாரெல்லாம் ‘NILL RETURN’ தாக்கல் செய்ய தேவையில்லை?

image

பழைய வரித் திட்டத்தின் படி, 60 வயது வரை உள்ளவர்களுக்கு, ₹2.50 லட்சம் வரை வருமான வரி கிடையாது. 60 – 80 வயதுடையவர்களுக்கு, ₹3 லட்சம் வரை வரி கிடையாது. எனவே, இவர்கள் வருமான வரிப் படிவம் தாக்கல் செய்ய தேவையில்லை. இருப்பினும், முகவரி சான்றிதழ், விசா, டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி போன்றவற்றுக்கு தேவையென கருதுபவர்கள், ‘NILL RETURN’ தாக்கல் செய்யலாம். பிறகு, இந்த படிவத்தை ஆவணமாக பயன்படுத்தலாம்.

News July 2, 2024

காங்கிரஸ் ஒட்டுண்ணி கட்சி: மோடி

image

சிறுபிள்ளைத்தனமான சேட்டைகளை நேற்று நாம் பார்த்ததாக பிரதமர் மோடி கிண்டல் செய்துள்ளார். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு குறித்து மக்களவையில் பேசிய அவர், காங்கிரஸ் 13 மாநிலங்களில் ஜீரோ எடுத்துவிட்டு, ஹீரோ போல பேசி வருவதாக சாடியுள்ளார். மேலும், வரும் சட்டப்பேரவை தேர்தல்களிலும் பாஜகவே வெல்லும் என கூறிய அவர், இனி காங்கிரஸ் ஒட்டுண்ணி கட்சி என அழைக்கப்படும் எனவும் விமர்சித்துள்ளார்.

News July 2, 2024

திராவிட மாடல் அல்ல, போதைப் பொருள் ஆட்சி: செல்லூர் ராஜூ

image

திமுக ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்றழைப்பதற்கு பதிலாக போதைப்பொருள் ஆட்சி எனக் கூறலாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். திமுக பொறுப்பேற்று 3 ஆண்டுகளாகியும் அரசு இதுவரை எந்தவொரு வளர்ச்சி பணியையும் மேற்கொள்ளவில்லை எனக் குற்றம்சாட்டிய அவர், மக்களுக்கான நலத் திட்டங்களை நிறைவேற்ற அமைச்சர்கள் யாருமே முன் வருவதில்லை எனவும் சாடியுள்ளார்.

error: Content is protected !!