India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேர்தல் பத்திர வழக்கில் எஸ்பிஐ-யின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை என்று உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. அனைத்து தரவுகளும் வெளியிட வேண்டும் என்று முதல் உத்தரவிலேயே தெளிவாக உள்ளது. ஆனால் எஸ்பிஐ ஏன் எண்களை வெளியிடவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு நீதிமன்றத்தின் உத்தரவை நாங்கள் புரிந்து கொண்டதன் அடிப்படையிலேயே தரவுகள் வெளியிடப்பட்டதாக எஸ்பிஐ விளக்கமளித்துள்ளது.
சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘கங்குவா’படத்தின் டீசர் நாளை மாலை 4.30 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 3D-இல் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. ஒரு பாதி இந்த காலகட்டத்திலும், இன்னொரு பாதி பீரியட் காலகட்டத்திலும் உருவாகியுள்ளது. இதில் 2 கதாபாத்திரங்களில் சூர்யா நடித்துள்ளதாக கூறப்படுவதால், அவரது ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
சென்னை- பெங்களூரு அணிகளுக்கு இடையேயான IPL போட்டிக்கான டிக்கெட்டுகள், 10 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது. இன்று காலை 9:30 மணி முதல் Paytm Insider மற்றும் CSK தளத்தில் டிக்கெட்டுகளை பெறலாம் என கூறப்பட்டிருந்தது. ஆனால் ரசிகர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் வாங்க குவிந்ததால், 2 தளங்களும் முடங்கின. இந்நிலையில், டிக்கெட்டுகள் முழுமையாக விற்கப்பட்டு விட்டதாக காட்டப்பட்டதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு பெரும் ஆதரவு உள்ளதாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் என்டிஏ கூட்டணிக்கு ஆதரவு பெருகுவதாக தெரிவித்துள்ளார். இன்று மாலை அவர் கோவை வர உள்ள நிலையில், இதனை பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் பாஜக கூட்டணியில் தமாகா, புதிய நீதி கட்சி, IJK, தமமுக உள்ளிட்ட கட்சிகளுடன், ஓபிஎஸ், டிடிவியும் இடம்பெற உள்ளனர்.
ஆளுநர் பதவியை தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்யவுள்ளதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி, தென்சென்னை அல்லது நெல்லை ஆகிய தொகுதிகளில் ஒன்றில் தமிழிசை போட்டியிட வாய்ப்புள்ளது என்று கூறப்படும் நிலையில், அவர் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கோவையில் இன்று வாகனப் பேரணியில் ஈடுபடும் பிரதமர் மோடி, தொடர்ந்து சேலத்தில் நாளை நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில், முதல்முறையாக ஓபிஎஸ், டிடிவி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவருடனான கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை எட்டிய நிலையில், அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் பிரிட்டிஷ் காலத்தில் தொடங்கப்பட்ட தபால் நிலையம் ஒன்று தற்போது 250 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 1774இல் மேற்கு வங்க மாகாண கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்கால் தொடங்கி வைக்கப்பட்ட முதல் தபால் நிலையம் இது. தற்போது 250ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு தபால் நிலைய வளாகத்தில் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதில் ஆரம்பகாலத்தில் தபால் எப்படி எடுத்துச் செல்லப்பட்டது என்பதை விளக்கும் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளது.
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இன்று கோவையில் வாகனப் பேரணி மூலம் வாக்கு சேகரிக்கிறார். இதற்காக கர்நாடக மாநிலத்திலிருந்து இன்று மாலை 5.30 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து சுமார் 2.5 கி.மீ. தொலைவுக்கு 5.45 முதல் 6.45 மணி வரை காரில் சென்றபடி மக்களை சந்திக்கிறார். தொடர்ந்து, 1998ல் குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு அருகே பேரணியை நிறைவு செய்கிறார்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், மதுபானக் கடைகளில் 50%க்கும் மேல் இருப்பு இருக்கக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை டாஸ்மாக் நிறுவனம் விதித்துள்ளது. மதுக்கடையின் சராசரி விற்பனை கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, 30%க்கும் அதிகம் இருக்கக்கூடாது. இருப்பு பதிவேட்டை பராமரிக்க வேண்டும். மதுக்கடை, பார்கள் அரசு அனுமதித்த நேரமான மதியம் 12 – இரவு 10 மணி வரை மட்டும் இயங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்காத ஆளுநரின் செயல் நீதிமன்ற அவமதிப்பாகும் என்று திமுக எம்.பி., வில்சன் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைச்சராக இருப்பவரின் தகுதி குறித்த முதல்வரின் மதிப்பீட்டை ஆளுநர் கேள்வியெழுப்ப முடியாது. மாநில அரசுக்கு இணையாக இன்னொரு அரசை நடத்த ஆளுநர் முயற்சி செய்கிறார். அரசமைப்புக்கோ, சட்டங்களுக்கோ மதிப்பளிக்காத ஆளுநர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
Sorry, no posts matched your criteria.