News July 3, 2024

சொத்துப் பிரச்னைகளை தீர்க்கும் ஸ்ரீபூவராகவர்

image

பாதாளத்துக்குள் புகுந்து தன் முகக்கோட்டால் தண்டகாசுரனது தலையைக் கிழித்து எறிந்து, மண் முட்டி, விண் எழுந்தவர் ஸ்ரீபூவராகவர் என மந்திரநூல்கள் போற்றுகின்றன. இத்தகு பெருமை கொண்ட அவர் வீற்றிருக்கும் திருத்தலம் திருமுட்டத்தில் உள்ளது. ஆடி பெளர்ணமியன்று இக்கோயிலுக்கு சென்று, சந்தனம் சாற்றி செய்து, நெய் தீபமேற்றி, கோரைக்கிழங்கு படைத்து வழிபட்டால் நிலம் & சொத்துப் பிரச்னைகள் நீங்கும் என்பது ஐதீகம்.

News July 3, 2024

இன்று முதல் சிதம்பரம் கோயில் ஆனித் திருவிழா

image

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெற உள்ளது. நாளை காலை 6:00 – 7:30க்குள் கோயிலில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. ஜூலை 11 ஆம் தேதி தேர் திருவிழாவும், 12ஆம் தேதி நடராஜ மூர்த்திக்கு பட்டாபிஷேகமும் நடைபெறுகிறது. பின்னர் 13ஆம் தேதி முத்துப் பல்லக்கில் வீதி உலாவுடன் உற்சவம் நிறைவுபெறுகிறது.

News July 3, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

* ஒரே நேரத்தில் செமஸ்டர் தேர்வுகளை நடத்தி முடிக்க அனைத்து கல்லூரிகளுக்கும் உத்தரவு
* குரூப் -1 தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் வெளியானது
* உத்தர பிரதேசத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 116 பேர் பலி
* நல்ல காரியத்திற்காக போராடினால், சீமானுக்கு ஆதரவு வழங்குவோம் – இபிஎஸ்
* மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்த 1.48 லட்சம் பெண்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தகவல்

News July 3, 2024

சரியான நேரத்திற்கு புறப்பட்ட ரயில்கள்

image

நடப்பு ஆண்டில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை தெற்கு ரயில்வேயில் இயங்கும் ரயில்கள் 91.5% சரியான நேரத்திற்கு இயக்கப்பட்டதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை, சேலம், திருச்சி, மதுரை, பாலக்காடு திருவனந்தபுரம் ஆகிய கோட்டங்களில் இயக்கப்பட்ட ரயில்கள் பெரும்பாலும் சரியான நேரத்தில் இயக்கப்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில் 90% ரயில்கள் சரியான நேரத்தில் இயக்கப்பட்டது.

News July 3, 2024

வார இறுதியில் கூடுதல் பேருந்துகள் இயக்கம்

image

வார இறுதி நாள்களை முன்னிட்டு வரும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள்களில் சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு கூடுதல் பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 415 கூடுதல் பேருந்துகளும், சனிக்கிழமை 310 கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் www.tnstc.in என்ற இணையதளம் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

News July 3, 2024

இளநிலை நீட் முறைகேடு ஜூலை 8இல் விசாரணை

image

நீட் தேர்வில் முறைகேடு குறித்து தாக்கல் செய்யப்பட்ட 26 மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் ஜூலை 8ஆம் தேதி விசாரணை நடைபெற உள்ளது. முறைகேடு தொடர்பாக தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என வலியுறுத்தி 26 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் நீதிபதி சந்திரசூட், பார்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட உள்ளது.

News July 3, 2024

உதயநிதி ஸ்டாலின் 3 நாள்கள் பிரசாரம்

image

விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ,வாக இருந்த புகழேந்தி மறைந்ததையடுத்து அங்கு வரும் 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அந்த அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான தேமுதிக தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், திமுக, பாஜக, நாதக இடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், வரும் 6,7,8 ஆகிய தேதிகளில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து உதயநிதி பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News July 3, 2024

இன்றைய நல்ல நேரம்!

image

▶ஜூலை – 03 | ▶ஆனி – 19 ▶கிழமை: புதன் | ▶திதி: த்ரயோதசி ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM வரை, 4:45 PM – 5:45 PM வரை ▶கெளரி நேரம்: 10:45 AM – 11:45 AM வரை, 6:30 PM – 7:30 PM வரை ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM வரை ▶எமகண்டம்: 07:30 AM – 09:00 AM வரை ▶குளிகை: 10:30 AM – 12:00 PM வரை ▶சந்திராஷ்டமம்: ஹஸ்தம் ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்

News July 3, 2024

கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் 10ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு ஜூலை 8ஆம் தேதி மாலை 6 மணி முதல் 10 ஆம் தேதி மாலை 6:30 வரை தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட தமிழக தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இதை மீறி கருத்துக்கணிப்புகளை வெளியிடுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை, அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

News July 3, 2024

பயிர் காப்பீடு செய்ய ஜூலை 31 கடைசி நாள்

image

நிகழாண்டு குறுவை பருவத்தில் பயிரிடப்பட்ட 14 வேளாண் பயிர்களுக்கும், 12 தோட்டக்கலை பயிர்களுக்கும் காப்பீடு செய்ய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மகசூல் இழப்பு, நடவு செய்ய இயலாத நிலை, நடவு பொய்த்தல், அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு ஜூலை 31 வரை காப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகங்களுக்கு வேளாண் அலுவலரை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!