News July 3, 2024

புதிய குற்றவியல் சட்டங்களின் முக்கிய அம்சங்கள் (1/2)

image

*குழந்தை பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு மரண தண்டனை *கும்பல் பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை *வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் ஓராண்டு சிறை. *கொடூர குற்றவாளிகளுக்கு மட்டுமே கைவிலங்கிட அனுமதி *நாட்டின் எந்த காவல் நிலையத்திலும் புகார் அளித்து, FIR பதியச் செய்யலாம். *சிறு குற்றங்கள் புரிவோர் சமூகப்பணிகளில் ஈடுபடுத்தப்படுவர் *தேசத் துரோகச் சட்டம் முற்றிலுமாக நீக்கப்பட்டது.

News July 3, 2024

பாலகிருஷ்ணரெட்டிக்கு விதித்த 3 ஆண்டு சிறை ரத்து

image

அதிமுக முன்னாள் அமைச்சரான அவருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை, ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. 1998இல் நடந்த போராட்டத்தின்போது, பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியாக, அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், சிறப்பு நீதிமன்றம் தண்டனை விதித்தது. இதனை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில், 3 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து, ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

News July 3, 2024

விஜய்க்கு நன்றி தெரிவித்த திமுக

image

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடத்தப்படும் ‘கல்வி விருது வழங்கும் விழாவில்’ அக்கட்சியின் தலைவர் விஜய் நீட் தேர்வை எதிர்த்து பேசியிருந்தார். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் கொண்டுவர வேண்டும் எனவும், நீட் விலக்கு கோரி தீர்மானம் இயற்றிய தமிழக அரசின் நடவடிக்கைகளை வரவேற்பதாகவும் விஜய் கூறியிருந்தார். இதற்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி நன்றி தெரிவித்துள்ளார்.

News July 3, 2024

80,000 புள்ளிகளை கடந்த சென்செக்ஸ்

image

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வரலாற்றில் முதல்முறையாக 80,000 புள்ளிகளை கடந்திருக்கிறது. காலை சந்தை தொடங்கியவுடனே சென்செக்ஸ் 630 புள்ளிகள் உயர்ந்து 80,074 புள்ளிகளை தொட்டது. நிஃப்டி 169 புள்ளிகள் உயர்ந்து 24,292 புள்ளிகளை கடந்து வர்த்தகம் ஆகிறது. ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகியவை இன்றைய சந்தையின் உயர்வுக்கு காரணமாக அமைந்திருக்கின்றன.

News July 3, 2024

‘ஒன்றிய அரசு’ என்று குறிப்பிட்ட விஜய்

image

சென்னையில் நடைபெறும் மாணவர்களுக்கான விருது வழங்கும் விழாவில் நீட் தேர்வுக்கு எதிராக தவெக தலைவர் விஜய் பேசினார். அப்போது மத்திய அரசு என்று குறிப்பிடாமல் ‘ஒன்றிய அரசு’ என்று குறிப்பிட்டு பேசினார். ஒன்றிய அரசு என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதை குறிக்கும் விதமாக திமுக அந்த வார்த்தையை பயன்படுத்தி வருகிறது. தற்போது விஜய் அதே வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார்.

News July 3, 2024

நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் விஜய் பேச்சு

image

நீட் தேர்வு மாநில அரசின் உரிமைகளுக்கு எதிராக உள்ளதாக நடிகர் விஜய் விமர்சித்துள்ளார். 10, +2 பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு 2ஆம் கட்ட விருது வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற அவர், நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக செய்திகள் வரும் நிலையில், நீட் விலக்கே ஒரே தீர்வு என்றும், தமிழக அரசு சட்டப்பேரவையில் கொண்டு வந்துள்ள நீட் விலக்கு தீர்மானத்தை மனதார வரவேற்பதாகவும் கூறினார்.

News July 3, 2024

நீட் குறித்து உரையாற்றிய தவெக தலைவர் விஜய்

image

10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணாக்கர்களை ஊக்கப்படுத்தும் விதமாக தவெக சார்பில் ‘கல்வி விருது வழங்கும் விழா’ நடத்தப்படுகிறது. நிகழ்ச்சியின் இரண்டாம் கட்டம் சென்னை திருவான்மியூரில் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள விஜய், மாணவர்கள் மத்தியில் அமர்ந்து சிறிதுநேரம் பேசிய பின்னர், விழா மேடைக்கு சென்று, நீட் குறித்து உரையாற்றினார்.

News July 3, 2024

பணியிட மாறுதல் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

image

தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அனைத்து வகைப் பணியாளர்களை பணியிட மாறுதல் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர், பதிவு உயர்வு வழங்கப்பட்ட கண்காணிப்பாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர் பணிகள் தொடர்பான தகவல்களை ஜூலை 5ஆம் தேதிக்குள் பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்ப அரசு செயலாளர் ஆணையிட்டுள்ளார்.

News July 3, 2024

‘R’ என்ற எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்டவரா நீங்கள்?

image

‘R’ என்ற எழுத்தில் தொடங்கும் பெயரை கொண்டவர்கள் எந்தவொரு விஷயத்தையும் மிக நுட்பமாகவும் ஆழமாகவும் அணுகி புரிந்துகொள்ளும் அறிவுக்கூர்மை கொண்டிருப்பார்கள் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். கற்பனை வளம், வெளிப்படையான பேச்சு, சவாலை எதிர்க்கொள்ளும் தைரியம், மேலாண்மை நிர்வாகத்திறன் கொண்டவர்கள் என்றும் தெரிவிக்கின்றனர். ‘R’ என்ற எழுத்தில் பெயர் கொண்ட உங்கள் குடும்பத்தினர், நண்பர்களுக்கு இதை பகிருங்கள்.

News July 3, 2024

அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு காவலர் மரணம்

image

உத்தர பிரதேசத்தில் 100க்கும் மேற்பட்ட சடலங்களை கண்ட கான்ஸ்டபிள் ரவி (30) மாரடைப்பால் உயிரிழந்தார். ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி பல பக்தர்கள் உயிரிழந்ததாக கிடைத்த தகவலையடுத்து காவலர் ரவி அங்கு அனுப்பி வைக்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு சென்ற அவர், ஆங்காங்கே சடலங்கள் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து கீழே விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், உயிரிழந்தார்.

error: Content is protected !!