India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
10ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கான அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்ககம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ஜூலை 2ஆம் தேதி தமிழ், 3ஆம் தேதி ஆங்கிலம், 4ஆம் தேதி கணக்கு, 5ஆம் தேதி அறிவியல், 6ஆம் தேதி விருப்ப மொழிப்பாடம் மற்றும் 8ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.
சக்திவாய்ந்த சூரிய காந்தப்புயல் நேற்று பூமியைத் தாக்கியதாக, அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) தெரிவித்துள்ளது. இதனால், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா நாடுகளில், வானில் வண்ணமயமான காட்சிகள் தோன்றின. மீண்டும் சூரிய காந்தப்புயல் பூமியைத் தாக்கும் என்றும், செயற்கைக்கோள்களுக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் NOAA அறிவுறுத்தியுள்ளது.
CSK-க்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், GT அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்காமல், GT அணி கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது. இது ஐபில் விதிப்படி குற்றம் ஆகும். குஜராத் அணிக்கு ஏற்கெனவே ஒருமுறை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதால், இம்முறை கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு ₹24 லட்சமும், இம்பேக்ட் வீரர் உள்பட மற்ற வீரர்களுக்கு ₹6 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது.
திருவாரூர் முன்னாள் பாஜக மாவட்ட விவசாய அணி செயலாளர் மதுசூதனனை கொலை வெறி தாக்குதல் நடத்திய விவகாரத்தில் பாஜக மாவட்டத் தலைவர் பாஸ்கரை காவல்துறையினர் கைது செய்தனர். மே 8ஆம் தேதி மதுசூதனனை வழிமறித்து, பைக்கில் வந்த கும்பல் சரமாரியாக வெட்டியது. இந்த வழக்கில் ஏற்கெனவே பாஜக விளையாட்டுப் பிரிவு மாவட்டத் தலைவர் ஜெகதீசன், சரவணன் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 9 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மேலும், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு (பிற்பகல் ஒரு மணி வரை) செங்கல்பட்டு, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், உள் மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக்கிற்கு 64 வயதாவதால் அவர் பணி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ஓய்வு பெறும் நிலையில், அப்பதவிக்கு யார் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், அந்நிறுவனத்தின் நம்பிக்கைக்கு உரிய தலைமை ஹார்டுவேர் இன்ஜினியர் ஜான் டெர்னஸ் அல்லது தற்போதைய தலைமை நிர்வாகி ஜெஃப் வில்லியம்ஸ் அந்த வாய்ப்பினை பெறலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த 5 மாதங்களில் மட்டும் பட்டாசு விபத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கவலை தெரிவித்துள்ளார். பட்டாசு ஆலைகளுக்கான விதிமுறைகளை கண்டறிந்து தமிழக அரசு ஆய்வுகளை நடத்துமா? என்றும் தொழிலாளர்களுக்கான புதிய பாதுகாப்பை வழங்க முயற்சி எடுக்குமா? எனவும் அவர் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார். இம்மாதத்தில் இதுவரை 5 முறை வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத இருக்கும் பள்ளி மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வர்களாக தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்கள், கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பத்தினை பதிவு செய்த பிறகு வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அட்சய திருதியையொட்டி நேற்று ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹1240 உயர்ந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹160 குறைந்து ₹54,000க்கும், கிராமுக்கு ₹20 குறைந்து ரூ.6,750க்கும் விற்பனையாகிறது. அதேபோல், சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை 70 காசுகள் குறைந்து ₹90.50க்கும், கிலோ ₹90,500க்கும் விற்கப்படுகிறது.
+2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 6ஆம் தேதி வெளியானது. மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மதிப்பெண் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விடைத்தாள் நகல் பெறுவதற்கான விண்ணப்பத்தை பதிவு செய்ய இன்று கடைசி நாளாகும். மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மேலும் விவரங்களை அறியலாம். விடைத்தாள் நகல் பெற ஒரு பாடத்திற்கு ₹275 கட்டணமாகும்.
Sorry, no posts matched your criteria.