News July 3, 2024

டி20 கனவு அணியை அறிவித்த ஆகாஷ் சோப்ரா

image

நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களை கொண்டு முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது கனவு அணியை உருவாக்கியுள்ளார். ரோஹித் ஷர்மா (கேப்டன்), குர்பாஸ், நிக்கோலஸ் பூரன், சூர்யகுமார் யாதவ், ஹென்ரிச் கிளாசென், ஹர்திக் பாண்டியா. ரஷித் கான், ரிஷாத் ஹுசைன், ஜஸ்பிரித் பும்ரா, ஃபசல்ஹாக் ஃபரூக்கி, அர்ஷ்தீப் சிங் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

News July 3, 2024

‘கூலி’ படத்தின் புதிய அப்டேட்

image

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் ‘கூலி’ படத்தில் நடிக்கிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விரைவில் தொடங்க உள்ளது. இதுவரை நடிகர் சத்யராஜ் மட்டுமே படக்குழுவில் இணைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் முன்னதாக கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் லோகேஷுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

News July 3, 2024

மேயர்கள் அடுத்தடுத்து ராஜினாமா… பின்னணி என்ன?

image

கோவை, நெல்லை மேயர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக கவுன்சிலர்களுக்கு இடையே மோதல் போக்கு இருந்து வந்த நிலையில், பிரச்னை குறித்து கட்சி தலைமை விசாரித்தாக கூறப்படுகிறது. கட்சியினர் மற்றும் அதிகாரிகளிடம் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், இருவரையும் ராஜினாமா செய்ய திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

News July 3, 2024

நெல்லை திமுக மேயர் ராஜினாமா

image

நெல்லை மாநகராட்சி திமுக மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நெல்லை மாவட்ட திமுக கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள், சரவணன் மீது அடுக்கடுக்கான புகார்களை தலைமையிடம் கூறியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், மேயர் பதவியில் இருந்து விலகுவதாகக் கூறியுள்ள அவர், தனது ராஜினாமா கடிதத்தையும், மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினார். முன்னதாக, கோவை ஆணையர் கல்பனாவும் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

News July 3, 2024

ஒருவர் எத்தனை PAN கார்டு பெற முடியும்?

image

வங்கி கணக்கு தொடங்கி டீமேட் கணக்கு வரை PAN கார்டு பயன்படுத்தப்படுகிறது. வங்கியில் ₹50,000க்கு மேல் பணம் அனுப்புவதற்கும் PAN கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தவிர, கடன்களுக்கு விண்ணப்பிக்கவும், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பெறவும் PAN கார்டு எண் கட்டாயமாகும். ஒருவர் தன் வாழ்நாளில் ஒரே ஒரு PAN கார்டு மட்டுமே பெற முடியும். பணபரிவர்த்தனையை கண்காணிக்க PAN கார்டு பயன்படுகிறது.

News July 3, 2024

இது மோடி அரசின் கேரண்டி!

image

ஊழல்வாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை போன்ற விசாரணை ஏஜென்சிகளுக்கு சுதந்திரம் அளித்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். ஊழலுக்கு எதிரான எந்தவொரு சலுகையும் காட்டக் கூடாது என்பதே மத்திய அரசின் நோக்கம் எனக் கூறிய அவர், விசாரணைகளில் அரசு ஒருபோதும் தலையிடாது என்றார். அத்துடன், ஊழல்வாதிகள் சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாது என்பது மோடி அரசின் கேரண்டி எனத் தெரிவித்தார்.

News July 3, 2024

தரமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்க: அரசு

image

தமிழகம் முழுவதும் குடிநீர் சுத்திகரிப்புக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. டெங்கு, மலேரியா காய்ச்சலை தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியுள்ள பொது சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மக்களுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீரின் தரத்தை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

News July 3, 2024

எலும்புகள் உறுதி பெற கால்சியம் அவசியம்!

image

உறுதியான எலும்புகளுக்கு கால்சியம் சத்து மிகவும் அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதற்கு பால், தயிர், பீட்ரூட், எள், திராட்சை, முட்டை, மீன், முருங்கைக் கீரை, பேரிட்சை, கேழ்வரகு, முந்திரி ஆகிய கால்சியம் நிறைந்த உணவுகளை தினமும் சாப்பிட பரிந்துரைக்கின்றனர். மேலும், அதிகாலை வெயில் மற்றும் மாலை இளவெயிலில் சிறிது நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் வைட்டமின் டி-யை பெறலாம் என்கிறார்கள்.

News July 3, 2024

தமிழக சிறைகளில் போதைப் பொருள்கள்: இபிஎஸ்

image

தமிழக சிறைச்சாலைகள் போதைப்பொருள்கள் விற்கும் இடமாக மாறிவிட்டதாக இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். தற்போதைய ஆட்சியில் காவல்துறை திமுகவின் ஏவல் துறையாக மாறி செயல்படுவதாக விமர்சித்த அவர், போதைப் பொருட்களை பாதுகாக்கும் இடமாக சிறைச்சாலைகள் உள்ளதாகவும் குறை கூறினார். முன்னதாக, தமிழக சிறைகளில் போதைப்பொருட்கள் விற்பனை நடப்பதாக நேற்று செய்தி வெளியாகி இருந்தது.

News July 3, 2024

உயர்நீதிமன்றத்தை நாடிய கெஜ்ரிவால்

image

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ED கைது செய்தது. திகார் சிறையில் இருந்தபோது, அதே வழக்கில் கடந்த ஜூன் 26ஆம் தேதி சிபிஐ அவரை கைது செய்தது. இந்நிலையில் சிபிஐ வழக்கில் ஜாமின் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் தனது கைது சட்டவிரோதமானது எனவும் விசாரணை என்ற போர்வை தொடர்ந்து துன்புறுத்தப்படுவதாகவும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!