India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் JMM தலைவர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை ஜனவரி மாதம் கைது செய்தது. இதை தொடர்ந்து, அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் தற்போது ஜாமின் வழங்கியுள்ளதை அடுத்து, அவர் மீண்டும் முதல்வர் பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் சம்பாய் சோரன், முதல்வர் பதவியை விட்டுத்தர மறுப்பதாக கூறப்படுகிறது.

நெல்லை, கோவை மேயர்களை போன்று, மதுரை, காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர்கள் மீதும் பல்வேறு புகார்கள் எழுந்தன. திமுக தலைமை அவர்களை அழைத்து எச்சரிக்கை விடுத்து அனுப்பியதாக கூறப்படுகிறது. அவர்கள் மட்டுமல்லாமல், 14 பேரூராட்சி தலைவர்கள், 7 நகராட்சி தலைவர்கள் லிஸ்டில் இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு பிறகு ராஜினாமா பட்டியல் நீளும் என்கிறார்கள்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிறையில் இருந்த ஹேமந்த் சோரனுக்கு, சமீபத்தில் ஜாமின் வழங்கப்பட்டது. அவரது இல்லத்தில் இன்று நடந்த ஆலோசனைக்கூட்டத்தில், JMM சட்டமன்றக்குழு தலைவராக தேர்வானதால், அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய முதல்வர் சம்பாய் சோரன் இன்றிரவு 8 மணிக்கு ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் பண்ட் சிறப்பாக ஆடினாலும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவரது செயல்பாடு நம்பிக்கை அளிக்கவில்லை என கவுதம் கம்பீர் முன்பு கூறியிருந்தார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ள நிலையில், பண்ட்டுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் ஒருநாள், டி20-களில் சேர்க்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சாம்சனுக்கு கம்பீர் ஆதரவாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ்வின் மகள் கவிதா, கடந்த மார்ச் 15ஆம் தேதி கைதானார். முன்னதாக, இதே வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவும் கைதானார். திகார் சிறையிலுள்ள இருவருக்கும் இன்றுடன் நீதிமன்ற காவல் நிறைவடையும் நிலையில், வரும் 25ஆம் தேதி வரை காவலை நீட்டித்து, டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜிகா வைரஸ் ஏடீஸ் வகை கொசு மூலம் பரவுகிறது. இதனால், கொசு விரட்டியை பயன்படுத்தவும், முழுக்கை சட்டைகளை அணியவும், ஜன்னல், கதவுகளை மூடிவைக்கும்படியும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். வாளி, பூத்தொட்டிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரை அப்புறப்படுத்த வலியுறுத்துகின்றனர். ஜிகா வைரஸ் பாதித்தால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளதால், கர்ப்பிணிகள் எச்சரிக்கையோடு இருக்கும்படி கூறுகின்றனர்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத்துறையின் மனுவை தூத்துக்குடி முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 2001-2006ஆம் ஆண்டுகளில் அவர் அமைச்சராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக ( ₹4 கோடி) சொத்து சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் தங்களையும் இணைக்க கோரி ED மனு தாக்கல் செய்த நிலையில், அதனை நீதிமன்றம் தற்போது நிராகரித்துள்ளது.

விஜய் கல்வி விருது வழங்கும் விழாவில், தவெக நிர்வாகி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 10, +2இல் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை, நடிகரும், தவெக தலைவருமான விஜய், நேரில் சந்தித்து பரிசு வழங்கினார். திருவான்மியூரில் நிகழ்ச்சி நடந்தபோது, நிர்வாகி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஹத்ராஸ் உயிரிழப்புக்கு மாநில அரசின் அலட்சியமே காரணம் என அம்மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். மாநில அரசு இந்த விவகாரத்தை முறையாக அணுகவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், அப்பாவி மக்கள் தங்களின் உயிரை இழந்துள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். மேலும், காயம் அடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை கிடைக்காததால் உயிரிழப்பு அதிகரித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

121 பேரை பலிகொண்ட ஹத்ராஸ் நெரிசல் சம்பவம் தொடர்பாக, நீதி விசாரணைக்கு, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான இக்குழுவில், அரசு அதிகாரிகள், காவல் அதிகாரிகளும் இடம்பெறுவர் என்றும் அறிவித்துள்ளார். ஹத்ராஸ் சம்பவத்தில் உத்தரபிரதேசம் மட்டுமின்றி, ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தை சேர்ந்த பக்தர்களும் உயிரிழந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.