India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தென்காசியில் இருந்து ஜூலை 17ஆம் தேதி அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைப்பு சுற்றுப் பயணத்தை சசிகலா தொடங்குகிறார். அதிமுகவை ஒன்றிணைப்பது தொடர்பாக மக்களை சந்தித்து பேசும் அவர், முதற்கட்டமாக 4 நாள்கள் தென்காசியின் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி வாரியாக பயணம் செய்ய உள்ளார். சசிகலா, ஓபிஎஸ்-ஐ அதிமுகவில் சேர்க்க வேண்டுமென குரல்கள் எழும் நிலையில், சசிகலாவின் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

ராணுவ வீரர்கள், அக்னி வீரர்கள் மரணமடைந்தால் அவர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்குவதற்கென சில நெறிமுறைகள் பின்பற்றப்படுவதாக விமானப்படையின் முன்னாள் தலைவர் ஆர்கேஎஸ் பதௌரியா தெரிவித்துள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கை, நீதிமன்ற விசாரணை அறிக்கை, காவல்துறை அறிக்கை ஆகியவை இருந்தால் மட்டுமே இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கான செயல்முறை முழுமையடையும் எனவும், அதற்கு 2-3 மாதங்கள் ஆகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேட்கர், தனக்கு தனி அலுவலக அறை, காருக்கு வி.ஐ.பி. எண், தங்குமிடம், உதவியாளர் வேண்டும் என உயர் அதிகாரிகளை அடிக்கடி வலியுறுத்தியுள்ளார். மேலும், கூடுதல் ஆட்சியரின் அறையையும் ஆக்கிரமித்து கொண்டுள்ளார். இது குறித்து புகார்கள் எழுந்த நிலையில், பூஜாவை பணியிடம் மாற்றி வாசிம் மாவட்டத்தில் பயிற்சியை முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

கமல் நடித்து ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் படம் வெற்றி பெற்றதையடுத்து, இந்தியன் 2ஆவது, 3ஆவது பாகங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியன் 2ஆவது பாகம் நாளை வெளியாகவுள்ளது. இந்நிலையில் இயக்குநர் ஷங்கரிடம் இந்தியன் 4ஆவது பாகம் எடுக்கப்படுமா எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர், அத்தகைய திட்டமில்லை என்றார். அதேநேரத்தில் “வேள் பாரி” சரித்திர நாவலை 3 பாகமாக எடுக்க போவதாக கூறினார்.

தமிழகத்தில் பட்டியலின தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என சொல்லப்படுவதில் அரசியல் உள்ளதாக திரைப்பட இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங்கை பாதுகாத்து இருக்க வேண்டும் எனவும், ஆனால் அதற்காக சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என சொல்ல முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், கொலை விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளதாக தெரிவித்தார்.

திருச்சி லால்குடி திமுக எம்எல்ஏ சவுந்தரபாண்டியணுக்கும், அமைச்சர் நேருவுக்கும் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. ஏற்கெனவே, தன்னை அமைச்சர் உதாசீனப்படுத்துவதாக பொது வழியில் பதிவிட்டு சர்ச்சை கிளப்பியிருந்தார். இந்நிலையில், நேற்று லால்குடியில் நேரு பங்கேற்ற நிகழ்ச்சிக்கு, சவுந்தரபாண்டியனுக்கு அழைப்பு விடுக்கப்படாததால் அவர் அதிருப்தியின் உச்சம் சென்றதாக கூறப்படுகிறது.

மும்பை பங்குச்சந்தையில் நேற்று வர்த்தக நேரத்தின்போது சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கும் மேல் சரிவை சந்தித்தது. பிறகு முடிவில் 426 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து நிறைவடைந்தது. இதற்கு விரைவில் கூடவுள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ள பொது பட்ஜெட்டே காரணமென நிதி ஆலோசனை நிறுவனங்கள் கூறியுள்ளன. மேலும், தற்போது பங்குச்சந்தை நிலவரம் கடினமாக இருப்பதாகவும் அவை கூறியுள்ளன.

பிரிட்டனின் புதிய பிரதமர் ஸ்டார்மர், அமெரிக்காவின் வாஷிங்டனில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள அரசு முறை பயணமாக அமெரிக்க சென்றிருந்தார். அம்மாநாட்டை முடித்துக்கொண்ட அவர், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை சந்தித்து கலந்துரையாடினார்.
அப்போது பேசிய பைடன், பிரிட்டனை விட இந்த உலகில் அமெரிக்காவுக்கு சிறந்த நட்பு நாடு ஏதும் இல்லை எனத் தெரிவித்தார்.

உலகின் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தேசிய சின்னம், தேசிய விலங்கு, தேசிய பறவை என பல தேசிய அடையாளங்கள் இருக்கும். அதுபோல் இந்தியாவிற்கும் உள்ளன. இந்தியாவின் தேசிய விலங்கு புலி, தேசிய பறவை மயில், தேசிய பூச்சி வண்ணத்து பூச்சி என அறிவோம். தேசிய காய்கறி எது எனத் தெரியுமா? சமையலுக்கு பயன்படுத்தும் பூசணிக்காயே அந்த காய்கறி ஆகும். அந்த பூசணிக்காய், மஞ்சள், பச்சை, ஆரஞ்சு என பல நிறங்களில் இருக்கும்.

அசாமில் கடந்த மாதம் முதல் கன மழை பெய்கிறது. இதனால் அங்கு உள்ள முக்கிய நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல கிராமங்களில் வெள்ளம் புகுந்து உள்ளதால் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. 27 மாவட்டங்களை சேர்ந்த 14.39 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1.57 லட்சம் பேர் அரசு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். வெள்ளத்துக்கு மேலும் 5 பேர் உயிர் இழந்ததால், பலி எண்ணிக்கை 84ஆக அதிகரித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.