India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மகாராஷ்டிராவின் நாசிக் பகுதியில் சாலையில் நடந்து சென்ற அர்ச்சனா என்ற பெண் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் அவர் உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய காரை ஒட்டி வந்த தேவ்சந்த் மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது. அவரை கைது செய்த காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். புனேவில் போர்ஷே கார் விபத்து, மும்பையில் BMW கார் விபத்தை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு விபத்து நடந்துள்ளது.

ஹர்திக் பாண்டியா கடந்த 6 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. இந்நிலையில், அடுத்த 2 மாதங்களுக்குள் அவரை டெஸ்ட் போட்டிகளில் விளையாட சம்மதிக்க வைக்க வேண்டும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார். அடுத்தடுத்து டெஸ்ட் தொடர் நடைபெற உள்ள நிலையில், பாண்டியா எப்படி பயன்படுத்தப்படுகிறார் என்பதை பொறுத்தே, இந்தியா வெல்ல முடியாத அணியாக மாறும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி மோதிரங்களை சாம்சங் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மோதிரத்தை நீங்கள் அணிந்து கொள்வதன் மூலம் உங்களது உடல் வெப்பம், இதயத் துடிப்பு, தூங்கும் நேரம் ஆகியவற்றை கண்காணிக்கலாம். ஜூலை 24ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்த மோதிரங்களின் விலை ₹34,000 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5 முதல் 13 வரை 9 வெவ்வேறு அளவுகளில், வெவ்வேறு நிறங்களில் இந்த மோதிரத்தை பெறலாம்.

நாம் தமிழர் நிர்வாகியும் பிரபல யூடியூபருமான துரைமுருகனை திருச்சி போலீசார் குற்றாலத்தில் வைத்து கைது செய்தனர். விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பரப்புரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக திமுகவினர் புகார் அளித்திருந்தனர். அந்த புகாரின் மீது விசாரணை நடத்திய திருச்சி சைபர் கிரைம் போலீசார், குற்றாலத்திற்கு சென்ற துரைமுருகனை தேடிச் சென்று கைது செய்தனர்.

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ஜெர்மன் அணி காலிறுதியில் ஸ்பெயின் அணியிடம் தோல்வியை தழுவியது. இதனையடுத்து, சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜெர்மன் அணியின் முன்னணி வீரர் தாமஸ் முல்லர் அறிவித்துள்ளார். ஏற்கெனவே, டோனி குரூஸ் யூரோ கோப்பை தொடருடன் ஓய்வு பெற போவதாக அறிவித்திருந்தார். இனி ஜெர்மனி அணிக்காக இருவரும் இனி விளையாட மாட்டார்கள் என்ற முடிவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் கதுவாவில் தீவிரவாதிகள் அண்மையில் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை ராணுவம் தேடி வரும் நிலையில், இதற்கு காஷ்மீர் டைகர் என்ற புதிய தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் கிளையாக அது கருதப்படுகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக 26 பேரிடம் விசாரிக்கப்படுகிறது.

கட்டணத்தை உயர்த்தியதோடு 2 மலிவு விலை ப்ரீபெய்டு திட்டங்களையும் சத்தமில்லாமல் நீக்கியது ஜியோ. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் இருந்த நிலையில், 90 நாள் வேலிடிட்டி கொண்ட ₹899 திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், தினமும் 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு, கூடுதலாக 20 ஜிபி டேட்டா அறிவித்துள்ளது. இத்திட்டத்தில் தினமும் 100 sms, ஜியோ சினிமா ott-யும் இலவசம்.5ஜி எனில் அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படுகிறது.

கார்த்தி தற்போது மெய்யழகன், வா வாத்தியாரே ஆகிய 2 படங்களில் நடித்து முடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. இதையடுத்து மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 படத்தில் அவர் நடிக்கவுள்ளார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி 2இல் அவர் நடிக்கவுள்ளார். இதுபோல் 4 படங்களை கார்த்தி தனது கைவசம் வைத்துள்ளார்.

நாட்டில் மது குடிக்கும் பழக்கம் ஆண்களிடம் குறைந்து வருவதாகவும், பெண்களிடம் அதிகரித்து வருவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2005ஆம் ஆண்டு 31.9% ஆண்கள் மதுப்பழக்கம் கொண்டவர்களாக இருந்த நிலையில் 2015ஆம் ஆண்டு அது 29.2%ஆக குறைந்து, 2019ஆம் ஆண்டு 18.8%ஆக உள்ளது. ஆனால், 2015ஆம் ஆண்டு 1.2% பெண்கள் மது குடித்த நிலையில் 2019ஆம் ஆண்டு அது 1.3%ஆக அதிகரித்துள்ளது.

தென்காசியில் இருந்து ஜூலை 17ஆம் தேதி அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைப்பு சுற்றுப் பயணத்தை சசிகலா தொடங்குகிறார். அதிமுகவை ஒன்றிணைப்பது தொடர்பாக மக்களை சந்தித்து பேசும் அவர், முதற்கட்டமாக 4 நாள்கள் தென்காசியின் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி வாரியாக பயணம் செய்ய உள்ளார். சசிகலா, ஓபிஎஸ்-ஐ அதிமுகவில் சேர்க்க வேண்டுமென குரல்கள் எழும் நிலையில், சசிகலாவின் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
Sorry, no posts matched your criteria.