India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
➤ பாஜக – பாமக கூட்டணி உறுதியான நிலையில், இன்னும் சற்றுநேரத்தில் ராமதாஸ் அறிவிப்பை வெளியிடுகிறார் ➤ மக்களவைத் தேர்தல் பரப்புரையை மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்குகிறார் ➤ அதிமுகவின் கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம் ➤ மஞ்சும்மெல் பாய்ஸ் படம் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் விமர்சித்தது மனதுக்கு வருத்தமாக இருப்பதாக இயக்குநர் பாக்யராஜ் கருத்து
தமிழகத்தில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் I.N.D.I.A கூட்டணி, NDA கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப்போட்டி உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நாளை (மார்ச் 20) முதல் தொடங்குகிறது. இந்நிலையில், இதுவரை கூட்டணி குறித்து இறுதி செய்யாமல் திணறி வரும் தேமுதிக தனித்து விடப்பட்டுள்ளது.
பாஜகவுடன் கூட்டணி தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் இன்னும் சற்றுநேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார். நேற்று தைலாபுரத்தில் நடைபெற்ற பாமக உயர்நிலை குழு கூட்டத்தில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. பாமக எத்தனை தொகுதிகளில் போட்டி என்பதை அறிவிக்கவுள்ள ராமதாஸ், சேலத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு வெந்தயக் கீரை நல்ல பலனை அளிக்கிறது. நார்ச்சத்து, இரும்புசத்து, மாங்கனீஸ், பாஸ்பரஸ், வைட்டமின் போன்ற எண்ணற்ற நன்மைகள் கொண்ட வெந்தயக் கீரை, உணவில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை சத்தை மெதுவாக உறிஞ்சுவதால், ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை நன்றாக குறைக்க உதவுகிறது. வாரத்திற்கு இரண்டு நாள் வெந்தயக் கீரையை சாப்பிட்டு வர உடலில் சர்க்கரை அளவானது குறைந்து காணப்படும்.
▶மார்ச் 19 ▶பங்குனி – 6 ▶கிழமை: செவ்வாய் | திதி: தசமி ▶நல்ல நேரம்: காலை 07.30 – 08.30 வரை, மாலை 04.30 – 05.30 வரை ▶கெளரி நேரம்: காலை 10.30 – 11.00, மாலை 07.30 – 08.30 வரை ▶ராகு காலம்: காலை 03.00 – 04.30 ▶எமகண்டம்: காலை 09.00 – 10.30 ▶குளிகை: மதியம் 12.00 – 01.30 ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.
மஞ்சும்மெல் பாய்ஸ் படம் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் விமர்சித்தது மனதுக்கு வருத்தமாக இருப்பதாக இயக்குநர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார். ஆண்ட்ரியா நடித்துள்ள ‘கா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ மலையாளத்தை விட இங்கு தான் அதிகமாக ஓடுகிறது. மக்கள் ரசிப்பதால் ஓடுகிறது. இதை இப்போது சொல்வதற்கு தமிழர்கள் யாரும் கண்டிக்கவில்லையென கேரள மக்கள் நினைத்துவிட கூடாது’ என்றார்.
சக்தியை பாதுகாக்க தன்னுடைய உயிரையும் கொடுக்க தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நேற்று தெலங்கானாவின் ஜக்தியாலில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மோடி, எதிர்வரும் தேர்தல் சக்தியை அழிக்க நினைப்போருக்கும் , வழிபடுவோருக்கும் இடையிலான தேர்தல் எனவும், நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழல்களுக்கு பின்னால் குடும்ப அரசியல் கட்சிகள் இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது தேர்தல் பறக்கும் படை அதிகாரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரேகட்டமாக ஏப்.19ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு, 300 பெண்களுக்கு இலவச எம்பிராய்டிங் பயிற்சி வழங்க பிரேமலதா டோக்கன் வழங்கியதாக புகார் கூறப்பட்டுள்ளது.
கடைகளில் விற்பனை செய்யப்படும் பேக்கேஜ்டு குடிநீரை விட, ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீரின் தரம் மேலானதாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஐஐடி மெட்ராஸ், அண்ணா பல்கலை., மற்றும் சென்னை பல்கலை., இணைந்து, 30 பேக்கேஜ்டு குடிநீர் நிறுவனங்களின் மாதிரிகளை ஆய்வு செய்ததில், பேக்கேஜ்டு குடிநீரில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, கனிம அளவு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
எத்தனை வருடம் ஆனாலும் தமிழ்நாட்டில் பாஜக வெல்லாது என வைகோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், ” பாஜகவை திராவிட கட்சிகள் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் எதிர்க்கிறார்கள். பிரதமர் மோடி எத்தனை முறை தமிழகத்துக்கு வந்தாலும் அவரால் வெற்றிபெற முடியாது. மேரா பாரத் மேரா பரிவார் என கத்திக்கொண்டே மட்டும் தான் பாஜகவால் இருக்க முடியும். அவர்கள் தமிழக மக்களின் இதயத்தில் ஒருபோதும் வெல்ல முடியாது” என்றார்.
Sorry, no posts matched your criteria.