India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஊழலுக்கு எதிரான போராட்டத்தை தாங்கள் தொடங்கியுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் கூறியுள்ளார். தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், தலைவர்களை சிறைக்கு அனுப்பிவிட்டு தங்கள் கட்சியை அழிக்க நினைத்ததாக குற்றம்சாட்டினார். ஆம் ஆத்மியை அழிக்க முடியாது என்பதற்கு இங்கு கூடியிருப்பவர்களே சாட்சி என பெருமிதம் தெரிவித்த அவர், அனைத்து அரசியல் கட்சிகளையும் பாஜக அழித்துவிட நினைப்பதாகவும் சாடினார்.
விஜயகாந்திற்கான பத்ம பூஷன் விருதை பெற்றுக்கொண்டு வந்த பிரேமலதாவை சென்னை விமான நிலையத்தில் வரவேற்க சென்ற தேமுதிகவினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. பிரேமலதா வாகனத்துடன் மற்ற நிர்வாகிகள் வாகனங்களும் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த தேதிமுகவினர் தடுப்புகளைத் தள்ளிவிட்டு, போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
இன்றும், நாளையும் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும், மே 13ஆம் தேதி சேலம், நாமக்கல், தருமபுரி, பெரம்பலூர், மதுரை உள்ளிட்ட 15 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த 3 மணி நேரத்திற்கு (4 மணி வரை) திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும்.
வெற்றிமாறன் இயக்கவுள்ள ‘வாடிவாசல்’ படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக இயக்குநர் அமீர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், படத்தில் முழுக்க முழுக்க ஹீரோவுடன் பயணிக்கும் வில்லனாக நடிக்க உள்ளதாகவும், பல ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யாவுடன் இணைவதை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
நீட் தேர்வு என்றால் கடும் கட்டுப்பாடுகள் இருக்கும் என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் புரிந்துக்கொள்ள வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு வினாத்தாள் மாற்றம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இதற்கெல்லாம் ஒரே தீர்வு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தான் என்றார். மேலும், மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழும் போது நல்லது நடக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
குஜராத்துக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், CSK வீரர் ஷிவம் துபே புதிய சாதனை படைத்துள்ளார். நேற்றைய போட்டியில் 1 சிக்சர் அடித்த அவர், ஐபிஎல் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அதிக சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். அவர் 992 பந்துகளில் 100 சிக்சர்கள் விளாசியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக, மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா 1046 பந்துகளில் 100 சிக்சர்கள் அடித்துள்ளார்.
CBSE பள்ளிகளில் படித்த 10, 12ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள், எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் எனத் தேர்வு வாரிய அதிகாரி சாஹா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தேர்வு முடிவுகள் மற்றும் அறிவிப்பு பணிகளில் CBSE வாரியம் ஈடுபட்டு வருவதால், முடிவுகளை எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கலாம் என்றும், அறிவிப்பிற்கான சரியான தேதியை இப்போது தெரிவிக்க முடியாது என்றும் கூறினார்.
காய்ச்சல், தலைவலி, வாந்தி, உடல்வலி போன்றவை வெஸ்ட் நைல் வைரஸின் அறிகுறிகளாகும். மூளைக் காய்ச்சல் போன்ற பாதிப்பு இருப்பின் உடனே பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. எலைசா மற்றும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைகள் மூலம் வெஸ்ட் நைல் வைரஸ் (West Nile virus) பாதிப்பு இருப்பதை கண்டறியலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
கர்நாடக எம்.பி பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்களை வெளியிட்ட விவகாரத்தில் பாஜக நிர்வாகி தேவராஜே கவுடா கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பாஜக தலைமைக்கு கடிதம் எழுதியதோடு, வீடியோக்கள் வெளியே வர காரணமாகவும் இருந்தார். 2019இல் ஹாசன் தொகுதியில் பிரஜ்வாலுக்கு எதிராக இவர் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டில் பதுங்கியுள்ள பிரஜ்வாலை இன்டர்போல் அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அஜித்தின் ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்தை 2025 பொங்கலுக்கு வெளியிடப் போவதாக ஏற்கெனவே அறிவித்த நிலையில், நேற்று ஹைதராபாத்தில் அதன் படப்பிடிப்பு தொடங்கியது. இந்நிலையில், மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தை, வரும் அக். 31ஆம் தேதி வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.